புதுச்சேரி.ஜூலை.23-புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: பட்ஜெட் நிதிக்கு முதல்வர் ரங்கசாமி ஆளுநர் தலைமையில் முடிவெடுத்து கோப்பு தயாரித்து ஜூன் முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதுவரை அந்த கோப்பு என்ன ஆனது எப்பொழுது பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ளனர் என்பது புரியாத புதிராக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது ரங்கசாமி காலத்தோடு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை என்று விமர்சனம் செய்தார். இப்பொழுது மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் என யாரை ரங்கசாமி விமர்சனம் செய்வார். காலதாமதர்க்கு யார் காரணம்? இதுவரை ஒப்புதல் இல்லை. நான் முதல்வராக இருந்த பொழுது மத்திய பாஜக அரசு எந்த அளவு ஒத்துழைக்கவில்லையோ அதே நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. ரங்கசாமி பாஜகவோடு கூட்டணியில் உள்ளார். கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். கூட்டணி அரசுக்கே இந்த நிலை என்றால், எதிர்க்கட்சிக்கான நிலை எப்படி இருந்திருக்கும். என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பாஜக அரசு புதுச்சேரியை வஞ்சிக்கிறது என்பதற்கு மிகப்பெரிய உதாரணம். பட்ஜெட் அனுமதி காலதாமதத்தில் மூலம் தெளிவாகத் தெரிகிறது. முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்றாரா பட்ஜெட் ஒப்புதல் பெற ஏன் நேரடியாக அணுகவில்லை தலைமைச் செயலாளர் நிதிச் செயலாளரை ஏன் அனுப்பவில்லை? பிரதமரால் கூட்டப்படுகின்ற நிதி ஆய கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்ள வேண்டும். அந்தக் கூட்டத்தில் மத்திய அரசை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வாய்ப்பு உள்ளது. மாநில அந்தஸ்து வாங்குவதுதான் கொள்கை என்று கூறும் ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பாரா? அல்லது நிதி வழங்க வேண்டும் தொழிற்சாலை கொண்டு வர ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூட்டத்தில் பங்கு பெற்று கேட்பாரா? 2011 முதல் 2016 வரை நான் முதல்வராக இருந்த சமயத்தில் ரங்கசாமி ஸ்மார்ட் திட்டி திட்டத்தை சேதராபட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். அதற்கு மத்திய அரசு நிராகரித்து விட்டது. 2016ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நகரத்தை புதுப்பிப்பது சாலைகள் அகலப்படுத்துவது 24 மணி நேரம் குடிநீர், தடையில்லாத மின்சாரம். வழங்குவது மின்சார பஸ்கள் .சைக்கிள் செல்ல வழி. பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது. மருத்துவமனைகள். பள்ளிக்கூடங்களை புனரமைப்பது. புதிய பஸ் நிலையம் அமைப்பது. வாகனங்களை நிறுத்தும் மையம். போன்ற 68 திட்டங்களை கொடுத்துரூ. 1400 கோடிக்கு ஒப்புதல் பெற்றோம். இத்திட்டத்தில் ஆண்டிற்கு மத்திய அரசு ரூ. 100கோடி மாநில அரசு ரூ. 100 கோடி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மாநில அரசு சார்பில் 200 கோடி நிதி ஒதுக்கி கொடுத்தோம். இப்பொழுது ஆட்சிக்கு வந்தவர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு பத்து திட்டங்களை மட்டுமே முடித்துள்ளனர். குறிப்பாக குபேர் பஜார் கட்டிடம் கட்டும் திட்டம், சாலை அகலப்படுத்தும் திட்டம், குடிநீர் திட்டம், வெங்கடசுப்பா சிலை வரை முருங்கப்பாக்கம் வரை மேம்பால திட்டம், சிவாஜி சாலை முதல் இந்திரா காந்தி சிலை வரை மேம்பாலம் திட்டம், நேர் வீதியில் அடுக்குமாடி வாகன நிறுத்தும் கட்டும் திட்டம், உள்ளிட்டவை கைவிடப்பட்டுள்ளது. இது புதுச்சேரி மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி திட்டத்தை முடக்கி விட்டனர். அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அங்காளன் எம் எல் ஏ முதல்வர் அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். இந்த ஆட்சியில் புரோக்கர்கள் மலிந்து விட்டனர். புரோக்கர்கள் மூலம் கையூட்டு பெற்றுக் கொண்டு வேலை செய்கிறது என்று கூறியுள்ளார். வேலைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை முதல்வர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களிடம் கையூட்டு தர வேண்டும் என்று கேட்டு லஞ்சம் வாங்குகின்றனர். குறிப்பாக இந்த ஆட்சியில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. மக்கள் நலத்திட்டம் நடைபெறவில்லை. முதியோர் உதவித்தொகை காலத்தோடு தரப்படவில்லை. ஆனால் கொள்ளையடிப்பது மிக வேகமாக நடைபெறுகிறது. ஊழலை ஒழிப்போம் என்று கூறும் மோடி, ஆளுநர் என்ன செய்கின்றனர். பிரதமருக்கு துறைகளின் தவறுகள் தெரிய இல்லையா? எம்பி தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னரும் ஆட்சியாளர்கள் திருந்தவில்லை. ஊழலை தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் கூறினால் பாரபட்சம் காழ் புணர்ச்சி என்பார்கள். தற்போது ஆளுங்கட்சிக்கு ஆதரவு தரும் எம்எல்ஏ வே கூறுகின்றார். நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபனம் ஆகியுள்ளது கோவில் சொத்து அபகரிப்பது மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. ஜான் குமார் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்தை அபகரித்தார் என்று நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பத்திரம் ரத்து செய்து சி பி சி டி விசாரணை நடைபெற்று வருகிறது. கோவில் சொத்துகளை பாதுகாக்க பாஜக, ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி என்ன நடவடிக்கை எடுத்தனர். நான் முதல்வராக இருந்த போது தியாகராஜர் வீதியில் சேதமடைந்த கோவில் கட்டிடத்தில் 5 பேர் குடியிருந்தனர். அந்த இடத்தை இடித்துவிட்டு கோவில் நிர்வாக மூலம் கட்டப்பட்டது. ஏலம் விட்டு தான் தனியாருக்கு வாடகை விட வேண்டும். ஆனால் அந்த இடத்தில் கட்டப்பட்ட கடை விநாயகா புக் பேலஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதற்கு இது வரை வாடகை நிர்ணயிக்கப்படவில்லை. வெளிப்படத் தன்மை இல்லை. இந்த இடத்தை தங்களுக்கு குத்தகை விட ராஜேந்திரன் என்பவர் இந்து அறநிலையத்துறைக்கு கொடுத்துள்ள மனு ஒதுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நீதிமன்றம் செல்ல சமூக ஆர்வலர்கள் தயாராகி வருகின்றனர். அரசியல்வாதிகள் தலையிட்டால் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுகின்றன. இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் எரி சாராயம். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு, மொத்த வியாபாரம் நடைபெறும் இடமாக கலிக்கு தீர்த்தான் குப்பம் தான். வில்லியனூர் கோட்டைமேட்டில் மறுவிநோயகம் செய்யப்படுகிறது. இதற்கு போலீசார் உடந்தையாக உள்ளனர். திருபாவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் எங்கள் தொகுதியில் கள்ளச்சாராயம் தாராளமாக நடைபெறுகிறது தடுத்து நிறுத்துங்கள் என டிஜேபிடம் மனு கொடுத்துள்ளார் . தமிழக ரவுடிகளுக்கு தஞ்சம் கொடுக்கும் இடமாக புதுச்சேரி உள்ளது. ரவுடிகள் பத்திரமாக இருந்து செல்ல இடமாக புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளது. முதல்வர், நாற்காலி இருந்தால் போதும் எதை பற்றியும் கவலைப்பட மாட்டார், கள்ளச்சாராயம் ரெஸ்ட்டோபர் சாராயத்தில் புதுச்சேரி மிதக்கிறது, கொள்ளை கொலை நகரம் சாராய நகரமாக மாறிவிட்டது, எம்பி தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைத்தாலும், இது தொடர்கிறது தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர், எம்பி வேட்பாளர் ராஜினாமா செய்யவில்லை புரோக்கர்கள் மூலம் அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதற்கு ஏன் ஆளுநர் விசாரணை வைக்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்
8:42 am
புதுச்சேரி பட்ஜெட் தாமதத்திற்கு யார்காரணம்முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி
