தி.மு.க. மாவட்ட செயலாளர் : மஸ்தான் விடுவிப்பு – கௌதம் சிகாமணிக்கு பொறுப்பு

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, எனவே, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காவிரி-கோதாவரி – இணைப்புத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை பிரதமர் மோடி தொடங்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பதவியேற்றுள்ளார். இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ள நரேந்திர மோடிக்கும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கும் பா.ம.க. சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, ஒரு நாடு முன்னேறுவதற்கு சீர்திருத்தம் தான் சிறந்த வழி என்ற நிலை ஏற்பட்டுள்ள சூழலில், பல்வேறு முதன்மையான சீர்திருத்தங்களை மோடி தலைமையிலான அரசு செய்திருக்கிறது. இந்திய வளர்ச்சிக்கான உந்து சக்தியாக பார்க்கப்படுவது நதிகள் இணைப்பு ஆகும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பாக்கிறது. காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நதிகள் இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நரேந்திர மோடி 3.0 அரசு உடனடியாக தொடங்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை…

எல் முருகன் மத்தியமைச்சரானார்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்றார். மேலும் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட பலர் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான எல்.முருகன் மத்திய இணை மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி

வெற்றி பெற்ற தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கார்கேவுடன் சந்திப்பு!

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்னு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், நெல்லையில் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் மயிலாடுதுறையில் வக்கீல் சுதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அத்துடன், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்கள் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகையும் வாழ்த்து பெற்றார். அப்போது செல்வ பெருந்தகையும் உடனிருந்தார்.✒️

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில், புனித தலத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இதில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதக் குழு என தெரியவந்துள்ளது.

பாஜக ஆட்சி கவிழும். 5 ஆண்டு இந்த ஆட்சி நீடிக்காது. குறை பிரசவம்தான் முன்னாள் முதல்வா் நாராயணசாமி பேட்டி

புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- எதிர்கட்சிகளை மதிக்காத தன்மை, ஆணவப் போக்கு, தொழிலதிபர்களை மிரட்டுவது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்துவது, குடியுரிமை சட்டம், நீட் உட்பட மக்கள் விரும்பாத சட்டங்களை நிறைவேற்றியது ஆகியவற்றுக்கு பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்திய மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். 400 தொகுதிகளை பெறுவோம் என மார்தட்டிய பாஜனதா 240 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். மாநில கட்சிகளை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். பாஜகவுக்கும், மோடிக்கும் இது அவமானம். சிறந்த அரசியல்வாதி என்றால் பிரதமராக மோடி பதவி ஏற்கக்கூடாது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் நீண்ட அனுபவம் உள்ள அரசியல் தலைவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள். கூட்டணி கட்சிகளால் பாஜக ஆட்சி கவிழும்.…

போலியான ஆதார்கார்டு மூலம் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் அதிரடி கைது

பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் புதிய ஆட்சி அமைய இருப்பதால் பாராளுமன்ற வளாகம் கடந்த 2 தினங்களாக பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் பாராளுமன்ற வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்துக்குள் வரும் அனைவரிடமும் ஆதார் கார்டை பெற்று ஆய்வு செய்து அதன்பிறகே அவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள். புதிய பாராளுமன்றத்தின் ஒரு பகுதியில் தற்போது கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த கட்டுமான பணிகளுக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து கூலி தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் அனைவரும் பாராளுமன்ற வளாகத்துக்குள் பணிகளை தொடங்க சென்றனர். அவர்களை நுழைவு வாயிலில் நிறுத்தி பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். அப்போது 3 தொழிலாளர்கள் போலி ஆதார் அட்டையுடன் வந்திருப்பது தெரிந்தது. அவர்களது ஆதார் அட்டை தில்லுமுல்லு செய்து தயாரிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அந்த…

புதுச்சேரி மணவெளி தொகுதி ஆண்டியார்பாளையம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பூமி பூஜை சபாநாயகர் தொடங்கிவைத்தார்

மணவெளி தொகுதி ஆண்டியார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ வீரன் ஆலயம் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான பூமி பூஜை இன்று காலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஐ.சி.சி. டி 20 தரவரிசை பட்டியல் மீண்டும் முதல் இடத்தில் இந்தியா

டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன. இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்துள்ளது. நியூசிலாந்து மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-இடம் சரிந்து 7-வது இடத்திலும் உள்ளது. கடைசி 3 இடங்களில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

விவேகானந்தர் நினைவிடத்தில் செபிரதமர் மோடி- பழைபடமும் புதிய படமும் வைரலாகியது

பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்ததும் பிரதமர் மோடி, தமிழகத்தின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு நேற்று மாலை வந்தார். தொடர்ந்து அவர் கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் அமைக்கப்பட்டு இருக்கும் விவேகானந்தர் நினைவிடத்துக்கு சென்று, தனது 3 நாள் தியானத்தை தொடங்கினார். இந்தநிலையில் பிரதமர் மோடி கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னர், இதே விவேகானந்தர் நினைவிடத்துக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்குள்ள விவேகானந்தர் சிலையை பார்வையிடும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி, வைரலாகியுள்ளது.