தீவிபத்தில் பாதிக்கப்ட்டவர்களுக்கு நிதியுதவி எம்எல்ஏ வழங்கினார்

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டு வீட மற்றும் உமைகளை இழந்த நபர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 3 நபர்களுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்

புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவிப்பு

புதுவை தமிழ் சங்கத்தில் தெய்வப்புலவர் ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி மாலை அணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழி குழு தலைவருமானநேரு(எ)குப்புசாமி . தெய்வப் புலவர் திருவள்ளுவர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.இந்நிகழ்ச்சியின் போது புதுவை தமிழ் சங்கத் தலைவர் கலை மாமணி முனைவர் வி. முத்து மற்றும் தமிழ்ச்சங்க செயலாளர் சீனு.மோகன்தாஸ் மற்றும் புதுவை தமிழ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற நாள்கீழூர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு சபாநாயகர் அமைச்சர்கள் மரியாதை

கீழூர் நினைவிடத்தில் நடந்த அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவில் தியாகிகளுக்குசபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் சாய்.சரவணக்குமார் ஆகியேர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். பிரெஞ்சு ஆட்சியில் இருந்து 1.11.1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்றது. அதன்பிறகு இந்திய அரசுடன் இணைய வேண்டுமா? வேண்டாமா? என்று வில்லியனூர் அருகே உள்ள கீழூர் கிராமத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 178 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் இந்திய அரசுடன் இணைவதற்கு 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து 16.8.1962-ல் இந்திய அரசுடன் புதுச்சேரி அரசு இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய நினைவுத்தூண் கீழூரில் நிறுவப்பட்டுள்ளது. புதுச்சேரி இந்திய அரசுடன் இணைக்கப்பட்ட ஆகஸ்டு 16-ந் தேதி ஆண்டுதோறும் புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவாக கீழூர் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டு…

புதுச்சேரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, “புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எந்த மருத்துவமனையும் ஏற்றுக் கொள்வதில்லை. மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில்கூட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டையை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து ரேஷன் கார்டுகளையும் உள்ளடக்கிய காப்பீடுத் திட்டம் அமல்படுத்தப்படுமா?” என்று கேட்டார். இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, “ஆயுஷ்மான் பாரத் திட்டம் புதுச்சேரிக்கு ஓரளவுதான் பயன்பட்டுள்ளது. இது முழுமையான திட்டமாக இல்லை. சில மாநிலங்களில் காப்பீடு…

மின்துறை தனியார்மயம் ஆக்கமாட்டோம் என சட்சபையில் உறுதி- நீதிமன்றத்தில் கால அவகாசம் ஏமாற்றும் ரங்கசாமி -முன்னாள் முதல்வர் நாராணசாமி குற்றசாட்டு

புதுச்சேரி முன்னாள்‌ முதல்வர் ‌நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம்‌ கூறியதாவது: வக்பு வாரிய சட்டத்தில்‌ மோடி கொண்டுவந்ததிருத்தங்கள்‌ மதத்தின்‌ அடிப்படையை தவிர்க்கின்றவகையில்‌ உள்ளது. அனைத்து மதத்தினரும்‌ தங்கள்‌கொள்கை, கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த உரிமை உண்டு. ஆனால்‌ புதிய திருத்தத்தில்‌இந்துக்கள்‌ வக்பு வாரியத்தில்‌ உறுப்பினர்களாகசேர்க்கப்பட்டுள்ளனர்‌. அறங்காவலர்‌ குழுவில்‌இந்துக்களை தவிர யாரும்‌ இருக்க முடி யாது. ஆனால்‌ வக்பு வாரியத்தில்‌ இந்துக்கள்‌ இருப்பார்கள்‌ என்பதைஎப்படி ஏற்க முடியும்‌? திட்டமிட்டு இஸ்லாமியர்களை பழிவாங்கும்‌ நடவடிக்கையாகத்தான்‌ இதனை பார்க்கின்றோம்‌. இந்தியா கூட்டணி இந்தசட்டத்தைஒருபோதும்‌ அனுமதிக்காது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற இந்தியகூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும்‌ என்று முதல்வர்‌ரங்கசாமி கூறியுள்ளார்‌. இது முதல்வர்‌ ரங்கசாமிஅங்கமாக உள்ள பாஜக அரசு புதுச்சேரிக்கு மாநிலஅந்தஸ்து தர முடியாது என்பதை தெளிவாககி விட்டதாக தெரிகிறது. முதல்வர்‌ ரங்கசாமி கடந்த2022ல்‌ சட்டமன்ற தேர்தலில்‌ பாகைவோடு கூட்டணிவைத்த சமயத்தில்‌ புதுச்சேரிக்கு மாநி அந்தஸ்து…

புதுச்சேரி ஜீவானந்தபுரம் ஓட வாய்க்காலில் வாலிபர் அடித்துச் செல்லப்பட்டார் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்

புதுவையில் நேற்று இரவு 9 மணி முதல் 5 மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது இதில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி ஓடைகளில் அதி வேகத்துடன் தண்ணீர் ஓடியதுஇந்நிலையில் ஜீவானந்தம் பெற பகுதி உள்ள மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு அதிக அளவில் மழை நீர் ஆற்றில் செல்வது போல் வேகமாக ஓடியது இதனுடைய பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்( 40) பாலா (40) சந்துரு(20) ஆகிய மூன்று பேர் பைக்கில் செல்லும் போது தண்ணீரில் வேகம் அதிகரித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்பொழுது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பைக்கை பிடிப்பதற்காக முயற்சி செய்துள்ளனர். இதில் மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லும் பொழுது அருகில் இருந்தவர்கள் பாலா சந்துரு ஆகியோரை பத்திரமாக மீட்டனர் . ஐயப்பன் மட்டும் அருகில் உள்ள ஓடை வாய்க்காலில் விழுந்து…

ஏம்பலம் தொகுதி திமுக சார்பில் கலைஞர் நினைவுநாள் நிகழ்ச்சி கிருமாம்பாக்கத்தில் நடந்தது

. முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 3வது  நினைவு தினம் ஏம்பலம் தொகுதி கழகத்தின் சார்பில் நடந்தது.  மாநில கழகச் அமைப்பாளர் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர்  எதிர்க்கட்சி தலைவருமான சிவா  வழிகாட்டுதலின்படி  கிருமாம்பாக்கம் கடைவீதி நான்கு முனை  சந்திப்பில் நடந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருஉருவப்படத்திற்கு தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில்  தொகுதி பிரதிநிதி கிருமாம்பாக்கம் ஜெகநாதன் தொகுதி பொருளாளர் ஈச்சங்காடு இளம்பரிதி, இவர்கள் முன்னிலையிலும் தொகுதி துணைச் செயலாளர்  கோவிந்தராஜ் அவர்களும் கழக முன்னோடி குடந்தை மனோகர் அவர்களும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.தொகுதி மகளிர் அணி அமைப்பாளர் திருமதி கௌசல்யா சண்முகம் செயற்குழு உறுப்பினர்கள் பிள்ளையார்குப்பம்  ராமலிங்கம் நரம்பைராமர் என்ற தனபால் அரங்கனூர் அருண் என்ற பச்சையப்பன்  கிருமாம்பாக்கம் அருள்தாஸ் பொதுக்குழு உறுப்பினர் ஏம்பலம்…

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வந்தது காவிரி தண்ணீர் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் மலர் துாவி வரவேற்பு

காரைக்காலுக்கு வந்தடைந்த காவிரி தண்ணீரை எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட ஆட்சியர் மலர் துாவி வரவேற்றனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தின் கடைமடைப்பகுதி. இங்கு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து வரும் காவிரி தண்ணீரை பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டு மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 1ஆம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பின், முக்கிய ஆறுகள் வழியாக காவிரி நீர் நேற்று திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் கிராமத்தில் உள்ள நுாலாறு நீர்தேக்கத்திற்கு வந்தடைந்தது. காவிரி தண்ணீரை சிவா எம்.எல்.ஏ., தலைமையில் ஆட்சியர் மணிகண்டன் ஆகியோர் மலர் துாவி வரவேற்றனர். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், மகேஷ், கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர். காரைக்காலுக்கு காவிரி தண்ணீர் 384 கன அடி வந்து கொண்டிருந்தது.

விளையாட்டுக்காக தனியாக இயக்குனரகம் ரூ.38 கோடி நிதி முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்துள்ள முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. பள்ளி கல்வி துறை இயக்குனர் பிரியதஷ்னி வரவேற்றார். பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தீரர் சத்தியமூர்த்தி அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் 40 பேர், அரியாங்குப்பம் இமாக்குலேட் பள்ளி மாணவிகள் 142 பேருக்கு இலவச லேப்டாப்பை முதல்வர் வழங்கினார். தொடர்ந்து, சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். விழாவில், எம்.எல்.ஏ., க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் துணை சபாநாயகர் பக்தவச்சலம், பள்ளி முதல்வர் சீத்தா உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், முதல்வர் ரங்கசாமி, பேசியதாவது: கடந்த ஆண்டு இலவச லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்டலேப்டாப்பை வழங்கி வருகிறோம்.…

புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் 6–ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதற்காக சட்டமன்றத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் சரவணக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, திமுக உறுப்பினர்கள் ஏ.எச்.எம். நாஜிம், வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், நாகதியாகராஜன், காங்கிரஸ் உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், திமுக நிர்வாகிகள் மாநில கழக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், சண்முகம், கோபாலகிருஷ்ணன், பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.