சட்டப்பேரவை இன்று காலை வரவு–செலவு விவாதத்தின் இடையே குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத இருப்பதின் காரணம் என்ன என்றும் இந்த ஆண்டு அதற்கான நடவடிக்கை என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு பேவைத்தலைவர் தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆணையை எதிர்க்கட்சித் தலைவர் கொடுக்க வேண்டும் என்றார். இதனை கண்டித்தும், இந்த ஆண்டில் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் இருந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாகராஜன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிகாலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்ட போது புதுச்சேரி அரசுக்கு…
Category: புதுச்சேரி
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்றார்
கடந்த 2021-ம் ஆண்டு முதல் புதுவைக்கு தனி ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தனி ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கத்துக்கு பிறகு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவையின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டார். அவர் சுமார் 3 ஆண்டுகள் பதவி வகித்தார். . பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மீண்டும் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுவை பொறுப்பு ஆளுநராலக பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 3½ ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி துணைநிலை ஆளுநர் இல்லாமல் பொறுப்பு ஆளுநர்களே புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் இருந்து புதுச்சேரி அரசை நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் புதுவையின் பொறுப்பு ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். புதுவையின் புதிய துணைநிலை ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த…
புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்திற்கு எம்.எல்.ஏ. பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்தி 1லட்சம் நிதி
அரியாங்குப்பம், புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்தில் தரை அமைக்கும் பணிக்கு எம்.எல்.ஏ., பாஸ்கர்(ஏ) தடசணாமூர்த்தி ரூ. 1 லட்சம் நிதி வழங்கினார். முதல்வர் ரங்கசாமி 75வது பிறந்த நாள் விழா அரியாங்குப்பத்தில் கொண்டாடப்பட்டது. அரியாங்குப்பம் புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்தில் முதல்வருக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ஆலயத்தின் தரை அமைக்கும் பணிக்காக தனது சொந்த செலவில் இருந்து எம்.எல்.ஏ., பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்திரு். 1 லட்சம்நிதியை ஆலயத்தின் பங்கு தந்தை அருள்தாசிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து, அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகே, பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தனியார் குழந்தைகள் காப்பகத்தில் எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், என்.ஆர்., காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி சட்டசபை நிகழ்ச்சிகளை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்
சட்டசபை நிகழ்வுகளைபள்ளி மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் 20அரசு பள்ளி மாணவர்கள் பார்வையாளர் மாடத்தில்அமர்ந்து சட்டசபைநிகழ்வுகளை தெரிந்துகொண்டனர். 15-வது தொடரின் 2 வதுகூட்டத்தொடர் நேற்று காலைகூடியது. சட்டபேரவைதலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க அவைதொடங்கியது. 2017-ஆண்டுபுதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கை மற்றும்2023 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. அறிக்கைவெளியிடப்பட்டது.தொடர்ந்து துணை நிலைஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் விவாதமும்,2024-2025-ஆம் ஆண்டிற்கானநிதிநிலைஅறிக்கைமீதானவிவாதம்நடைபெற்றது..இந்நிலையில் சட்டசபைநிகழ்வுகளை பள்ளிமாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில்பள்ளி மாணவர்கள் சபைநிகழ்வுகளை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.அதன்படி வ.௨.சி, சுசிலாபாய், உள்ளிட்ட அரசுபள்ளியை சேர்ந்த 20-க்கும்மேற்பட்ட மாணவர்கள்சட்டசபைக்கு வந்தனர்.அவர்கள் சட்டசபை மையமண்டபத்தின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்துசட்டசபை நிகழ்வுகளைதெரிந்து கொண்டனர். சட்டசபை நிகழ்ச்சிகளை பார்யிட வந்த மாணவர்களுக்கு பேரவை தலைவர் நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி மற்றும் மாவட்ட…
எம்பிபிஎஸ் முதலாண்டு தேர்வு ரத்து சர்ச்சை: விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் ரங்கசாமி பேரவையில் உறுதி
எம்பிபிஎஸ் முதலாண்டு தேர்வு ரத்து சர்ச்சை: விசாரித்து நடவடிக்கை; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி புதுச்சேரியில் இன்று தொடங்கவிருந்த எம்பிபிஎஸ் முதலாண்டு தேர்வை மத்திய பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளதில் நிலவும் சர்ச்சைகள் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லுாரி உள்பட நான்கு தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இங்கு பயிலும் 830 முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு இன்று ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் திடீரென்று ரத்து செய்து ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று இணைப்புக் கல்லூரிகளின் டீன்கள், இயக்குநர்களுக்கு மருத்துவ உதவிப் பதிவாளர் சுற்றறிக்கையில்…
புதுச்சேரி துணைநிலை ஆளுராக கைலாசநாதன் 7-ஆம் தேதி பதவி ஏற்பு முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
தெலுங்கானா கவர்ன ராகவும், புதுச்சேரியில் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த தமி ழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், கவர்னர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 27-ந் தேதி புதுச்சேரியின் புதிய கவர்னராக கே.கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் 7-ந் தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறார். 6-ந் தேதி மாலை புதுச்சேரி வருகிறார். 7-ந் தேதி காலை 11.15 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது. இதில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி…
புதுச்சேரியில் கடல் அரிப்பால் மாயமாகி வரும் கடற்கரை காரணம் குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் ஆய்வு
வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள அழகிய சுற்றுலா நகரம் புதுச்சேரி. மினி கோவா என அழைக்கப்படும் புதுச்சேரியில் கனகசெட்டிக் குளம் தொடங்கி புதுக்குப்பம் முள்ளோடை வரை 31 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இதில் பழைய சாராய ஆலையில் இருந்து சீகல்ஸ் ஓட்டல் வரை உள்ள ப்ரோமனட் கடற்கரை (ராக் பீச்), பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரை பிரசித்தி பெற்றது. இங்குள்ள கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் சிறிது, சிறிதாக மாயமாகி வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு இருந்த கடற்கரையின் ஒரு பகுதி, திடீரென மாயமாகி விடுகிறது. அந்த அளவுக்கு புதுச்சேரி கடலில் காலநிலை மாற்றத்தால் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரி கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பு மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகளை கண்டறிய மத்திய அரசின் சென்னை…
தொடர் நோயை குணப்படுத்துவதற்கான நிதி உதவிபுதுவை எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்
புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 25 பயனாளிகளுக்கு தொடர் நோயை குணப்படுத்துவதற்கான நிதி உதவி அவரவர் வங்கி கணக்கில் பெறுவதற்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நடந்தது.இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான பிறா சிவா அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன் தாஸ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன்,சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், தொழிலாளர் முன்னேற்ற பேரவை தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதி திராவிட அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் ராஜி, கே…
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இந்தியா முழுவதும் 200 கோடி மோசடி உத்தரபிரதேத்தை சேர்ந்த 4 பேர் கைது
புதுச்சேரி, லாஸ்பேட்டை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு குறித்து பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் மர்மநபர் ஒருவர், கனடாவில் வேலை தருவதாக உறுதியளித்தார். அவரை நம்பர் வைத்து, மேலும் விசா (வேலை அனுமதி), மருத்துவ பரிசோதனை, இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு பணத்தை டெபாசிட் செய்தால் மேற்படி வெளிநாட்டு வேலை உறுதியாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி 17,77 லட்சத்தை பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியள்ளார். அதைத் தொடர்ந்து ரஅமஷ்குமார் புதுச்சேரி இணைய வழி போலீசில் புகார் கொடுத்தார்.புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் அவர்களின் உத்தரவின்பேரில் ஈன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீழ்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை…
பிரான்ஸ்நாட்டில் திருவள்ளுவர், காந்தி சிலை அமைத்த பிரான்ஸ் தமிழ் கலாசார மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு
பிரான்ஸ் நாட்டில், திருவள்ளுவர் மற்றும் காந்தி சிலை அமைத்த, அந்நாட்டின் வொரயால் தமிழக் கலாசார மன்ற செயற்குழு உறுப்பினர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது. வெங்கட்டா நகர், தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவிற்கு, கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஆறுமுக பெருமாள், பூங்குழலி ஆகியோர் வரவேற்றனர். புதுச்சேரி தமிழச் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தார்.வள்ளலார் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், பார்த்தசாரதி, தமிழ்ச் சங்க செயலாளர் சீனு மோகன்தாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர் லட்சுமிநாராயணன், மயிலம் ஆதினம் 20ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் பிரான்ஸ் வொரயால் தமிழ்ச் கலாசார மன்ற செயற்குழு உறுப்பினர்களான இலங்கை வேந்தன் பாண்டுரங்கன், இயக்குநர் ரவி குணாவதி மைந்தன், ஒருங்கிணைப்பாளரர் முனுசாமி ஆகியோரை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர்.நிகழ்ச்சியில், புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக்…