முன்னாள் ஆளுநர் தமிழிசை அவதூறான பேச்சுக்களை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன்

புதுவை மாநில காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் கவர்னர் தமிழிசை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களை துச்சமென நினைத்து இழிவாக பேசியுள்ளார். தேர்தல் தோல்வி இவரை இப்படி பேச சொல்கிறதோ என்று எண்ணத்தோன்று கிறது. இங்கிருந்து சென்ற இந்தியா கூட்டணியின் 40 எம்.பி.க்கள்தான் இந்த பாரதத்தின் வலிமையான எதிர்க்கட்சிக்கு தூண்களாக திகழ்கின்றனர். நாட்டிற்கு எப்பொழுது எல்லாம் அநீதி இழைக்கப்படு கிறதோ அப்போதெல்லாம் இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் உண்மையை ஓங்கி உரைப்பார்கள். எங்கள் தலைவருடைய நாடாளுமன்ற உரை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் மக்கள் மன்றத்திலே மக்கள் மனதிலே நீங்காமல் என்றும் நிலைத்திருக்கும். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் மக்களின் நலனுக்காக பாடுபடக் கூடியவர்களேயன்றி தங்களுடைய நலனுக்காக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள்…

புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலக ஊழியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றிய ஊழியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைப்பெற்றது சட்டசபைச் செயலகத்தின் செயலர் தயாளன் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் சட்டசபை பல்நோக்கு பணியாளர் முகமது ஆரிப்க்கு பணிநிறைவைப் பெற்றதை பாராட்டி பேசினார்.37 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றத்திலேயே பணியாற்றியவர் கடமையுணர்வோடு பணியிற்றியவர் என குறிப்பிட்டார். கண்காணிப்பாளர் முருகன் அவரின் சிறப்புகளை எடுத்துரைத்தார். செயலர் தயாளன் நினைவு பரிசினை வழங்கினார் இவ்விழாவில் விவாதப்பதிவாளர் அலமேலு கண்காணிப்பாளர்கள் முருகன் , சுகுமாரன் மற்றும் செயலக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்

புதுவையில்‌ ரூ.25 லட்சம்‌ மதிப்புள்ள கஞ்சா எண்ணெய்  போதை ஸ்டாம்ப்‌ பறிமுதல்‌-தமிழகம்‌, கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது

புதுவை கோரிமேடு காவல்‌நிலையத்திற்குட்பட்ட பகுதியில்‌ சப்‌.இன்ஸ்பெக்டர்‌ ரமேஷ்‌தலைமையிலான போலீசார்‌ நேற்று முன்தினம்‌ இரவு ரோந்து பணியில்‌ஈடுபட்டனர்‌.அப்போது ஜிப்மர்‌ மருத்துவமனைஅருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில்‌சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரைபிடித்து விசாரணை நடத்தினர்‌.அவர்கள்‌ முன்னுக்கு பின்‌ முரணாகபதில்‌ அளித்ததால்‌ சந்தேகம்‌ அடைந்தபோலீசார்‌ அவர்கள்‌ வைத்திருந்தபைகளில்‌ சோதனை செய்தனர்‌.அப்போது அதில்‌ கஞ்சா, போதை ஸ்டாம்ப்‌ மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 பேரை கோரிமேடுகாவல்‌ நிலையத்துக்கு அழைத்து சென்றுவிசாரணை நடத்தினர்‌.முதற்கட்ட விசாரணையில்‌அவர்கள்‌ சேலம்‌ மாவட்டம்‌ கிச்சப்பாளையம்‌ பகுதியை சேர்ந்த சங்கீத்குமார்‌ ( 27), கருப்பூரை‌ அஞ்‌சல்‌ பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன்‌( 22),  என்பதும் இவர்கள் குயிலாபாளையத்தில் உணவகம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூரிருந்து போதை பொருட்களுடன் வந்திருந்த கேரளா பாலக்காட்டை சேர்ந்த ஹைதர்‌ (வயது 30), தலச்சேரியைசேர்ந்த முகமது பசல்‌ ( 27] என்பதுதெரியவந்தது.மேலும்‌ போதை…

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் கவிஞர்கள் திருவிழா செம்மொழி நாள்விழா நடந்தது

புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர்கள் திருவிழா செம்மொழி நாள் விழா நேற்று இரவு நடந்தது. புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். துணைத்தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள் செல்வம், துணை செயலாளர் தினகரன் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் கண்ணதாசன் ஒரு மீல் பார்வை என்ற தலைப்பில் காருண்யா நடராசன், கவிஞர் மருதகாசி பாடல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் தமிழ் சங்கத் தலைவர் முத்து, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் என்ற தலைப்பில் சங்க செயலாளர் சீனு மோகன்தாசு ஆகியோர் உரையாற்றினர்.தனித்தமிழ் இயக்க தலைவர் தமிழமல்லனுக்கு செம்மொழி விருது வழங்கப்பட்டது. செம்மொழி தமிழ் மொழி என்ற தலைப்பில் நடந்த பாவரங்கில் தாகூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் அவ்வை நிர்மலா பேசினார்.…

தேர்தல் தோல்விக்கு பின்னரும் மாறத ஆட்சியாளர்கள் முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி.ஜூன்.30-புதுச்சேரி முன்னாள்முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட்‌ தேர்வில்‌ கள்ளத்தனமாக கோடி கணக்கில்‌ பணம்‌ பெற்று கொண்டு தேர்விற்கு முன்பாக வினாத்தாளை விற்றது, மாணவர்கள்‌ தங்களுடைய விடைத்தாள்களில்‌ ஏதும்‌ எழுதாமல்‌ கொடுத்துவிட்டால்‌ ஆசிரியர்களே பதில்‌ எழுதி அந்த விடைத்தாள்களை சமர்ப்பிப்பது போன்ற மிகப்பெரிய ஊழல்கள்‌ நடந்தது. அதனடிப்படையில்‌ ராகுல்‌ பாராளுமன்றத்தில்‌ இந்த பிரச்சனையை ஒத்திவைப்பு தீர்மானம்‌ கொண்டுவந்து விவாதிக்க கேட்டிருந்தார்‌. மாநிலங்களவையில்‌ காங்‌ தலைவர்‌ மல்லிகார்ஜுூனா கார்கே இந்த கோரிக்கையை முன்வைத்தார்‌. தமிழக முதல்வர்‌ ஸ்டாலின்‌ நீட்‌ தேர்வை ரத்து செய்ய குரல்‌ கொடுத்ததன்‌ அடிப்படையில்‌ தமிழக சட்டசபையில்‌ மத்திய அரசு நீட்‌ ரத்து செய்ய கோரி ஏகமனதாக தீர்மானம்‌ நிறைவேற்றினார்‌.நீட்‌ தேர்வில்‌ ரூபாய்‌ கைமாறியிருப்பதும்‌ மத்திய அரசின்‌ விசாரணையில்‌ தெரியவந்துள்ளது. முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சரும்‌பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்‌. ஆனால்‌ நீட்தேர்வை ரத்து செய்ய…

புதுச்சேரி கழிவறையில் மயங்கி விழுந்து 3 பேர் பலியான ரெட்டியார்பாளையத்தில் மீண்டும் வாயு கசி மக்கள் பீதி

ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் சமீபத்தில் பாதாள சாக்கடை கழிவுநீரில் இருந்து விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், ரெட்டியார்பாளையம், கம்பன் நகர் பகுதியில் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, நேற்று இரவு 7 மணிக்கு குடியிருப்பு வாசிகள் பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரச்செல்வன், உதவி பொறியாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த பகுதிக்கு விரைந்தனர். கம்பன் நகர், 3-வது குறுக்கு தெரு முதல், 7-வது குறுக்கு தெரு வரை உள்ள குடியிருப்பு பகுதிகளில், சோதனையில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை செல்லும் மேன்ஹோல்களை திறந்து, வாயுக்களை அளவிடும் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு உறுப்பினர்…

மாணவர்கள் பாராட்டு விழாவில் பங்குபெற கட்டுப்பாடுகளை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது. பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிலையில் விழாவுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர்,பேனா கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. விழாவில் மாணவர்களுடன் பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க கர்நாடகா மறுப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் இன்று டெல்லியில் சுமார் ஒன்றை மணி நேரம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா, புதுச்சேரி ஆகியே மாநிலங்களின் அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர். அதேபோல் ஒவ்வொருவரும் தங்களின் மாநிலங்களின் அணைகளில் உள்ள நீர் நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர். ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கையை முன் வைத்திருந்தது. அப்போது கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவில் இருந்து எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் மாதம் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி…

புதுச்சேரியில், விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சாய் சரவணன் தகவல்

புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி ஆளுநரின் ஒத்துழைப்புடன் விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றார்.பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் பணியும் நடைபெற உள்ளதாக அமைச்சர் சாய் சரவணகுமார் தெரிவித்தார்.!

நீட்டை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும், நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஏ ஐ சி சி யின் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன், மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, மாநில நிர்வாகிகள் மருது பாண்டியன், திருமுருகன், மோகன்தாஸ், பாபுலால், ரவிச்சந்திரன், வெங்கட், செல்வநாதன், முனுசாமி(ஏ) சுந்தர், காங்கேயன், ராஜு பாபு, கோவிந்தராஜ், டுப்லெக்ஸ் பரந்தாமன், சிவ சண்முகம், மோகன், ராஜா, மன்னாதன், வெங்கட். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சமீர், கோவலன், சசிதரன், குரு, சித்திக், மனோஜ், உதயா, வினோத், சித்தானந்தம், அத்வானி, வேல்முருகன், முகிலன், தினேஷ்,…