கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் சஞ்சய் குமார், இளம் பரிதி, வடிவேல், கனகராஜ் ஆகியோர் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் புதுவை மாநிலம் நல்லவாடு பகுதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு படகில் 4 பேர் இவர்களது படகு அருகில் வந்தனர். பின்னர் தாழங்குடா மீனவர்களிடம் குடிநீர் வேண்டும் என கேட்டு, தாங்கள் கொண்டு வந்த காலி பாட்டிலை வழங்கினார்கள். மேலும், நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என கேட்டனர். நாங்கள் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் என பதில் கூறிவிட்டு, பாட்டிலில் நீரை நிரப்பி கொண்டிருந்தனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த 4 பேரும், நாங்கள் புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்கள், இந்த பகுதியில் வந்து நீங்கள் ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? மீன்பிடிப்பதற்கு யார்? உங்களுக்கு அனுமதி அளித்தனர்? உங்கள் படகை சிறை பிடித்து…
Category: புதுச்சேரி
வில்லியனூர் வரதராஜ பெருமாள் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
வில்லியனூரில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர்திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி 20ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 17 ம் தேதி கருடசேவையும், 18 ம் தேதி மஞ்சள் நீர் வஸந்தோத்ஸவம் உள்புறப்பாடும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று காலை 7.00 மணிக்கு நடந்தது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிவா ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இவ்விழாவில் வில்லியனூர்…
ஜிப்மர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ள 16 பேரும் கவலைக்கிடம் மருத்துவமனை அறிக்கை
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேர் நிலை குறித்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும்…
புதுச்சேரி ஆளுநர் தலைமையில் மாநிலத் திட்டக்குழு கூட்டம்ரூ. 12 ஆயிரத்து 700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு
புதுச்சேரி மாநில திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் நடைபெற்றது. 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை இறுதி செய்வதற்காக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயகுமார், திருமுருகன், சாய் ஜே சரவணகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தலைமைச் செயலாளர் சரத் சவுகான், அரசு செயலாளர் மற்றும் துணை துறை தலைவர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில்நடப்பு ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ரூ.12ஆயிரத்து 700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் துணைநிலை ஆளுநர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,எழுச்சிமிகு புதுச்சேரி என்பதுதான் இன்றைய கூட்டத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துறை சார்ந்த அறிஞர்கள் எப்படி எல்லாம் புதுச்சேரியை முன்னேற்ற வேண்டும் என்பதற்கான…
புதுச்சேரி காலாப்பட்டு சிறையிலிருந்து பரோலில் வந்து தலைமறைவான ரவுடி கருணா கோவையில் கைது
புதுச்சேரி சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதியான பிரபல தாதா கர்ணா குடும்பத்துடன் தலைமறைவானார். கோவையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் பிரபல தாதா கர்ணா( 55) இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் ஒரு கொலை வழக்கில் அவருக்கு புதுச்சேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனை அடுத்து கடந்த 23 வருடங்களாக அவர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி கடந்த 11ஆம் தேதி கர்ணா பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதுவரை அவர் குடும்ப நிகழ்ச்சி, உறவினரை சந்தித்தல் என 35 முறை பரோலில் வெளியே வந்து சென்றுள்ளார்.…
மீன்பிடி படகுகளை வாடகைக்கு எடுத்து கடலோர காவல் போலீஸார் தேசிய பாதுகாப்பு
பழுதை நீக்காததால் இரண்டு ஆண்டுகளாக மக்கி வீணாகி வரும் ரூ. 2 கோடி மதிப்பிலான ரோந்து படகுக்கு பதிலாக சுற்றுலா மற்றும் மீன்பிடி படகுகளை வாடகைக்கு எடுத்து கடலோர காவல் போலீஸார் இன்று தேசிய அளவில் நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையைத் தொடங்கினர்.உரிய நேரத்தில் பழுதை நீக்காததால் இரண்டு ஆண்டுகளாக மக்கி வீணாகி வரும் ரூ. 2 கோடி மதிப்பிலான ரோந்து படகுக்கு பதிலாக சுற்றுலா மற்றும் மீன்பிடி படகுகளை வாடகைக்கு எடுத்து கடலோர காவல் போலீஸார் இன்று தேசிய அளவில் நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையைத் தொடங்கினர். இந்திய கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. இன்று புதன்கிழமை காலை தொடங்கி நாளை வியாழக்கிழமை மாலை 5 மணி வரை சாகர் கவாச் ஒத்திகை நடைபெறுகிறது. புதுவை கடல்…
பக்ரீத் பண்டிகை- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம், நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன. பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்த புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி, அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைவர் பதவி விலக கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்திய பா.ஜனதா நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
புதுவை பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதியின் அணுகுமுறை தான் காரணம் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் ஏற்கனவே போர்கொடி உயர்த்தினார். அதோடு மட்டுமல்லாது செல்வகணபதியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று அவர் தானாக முன் வந்து பதவி விலக வேண்டும் என வலிறுத்தியிருந்தார். இந்த நிலையில் நேற்று கட்சியின் மாநில செயலாளர் ரத்தினவேலு பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள பாரத மாதா சிலையின் கீழ் அமர்ந்து மேல் சட்டை அணியாமல் திடீரென அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியது, அவரை அங்கிருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர். அரை நிர்வாண போராட்டம் நடத்திய மாநில செயலாளர் ரத்தினவேலு கட்சி பொறுப்பில்…
புதுச்சேரி உள்துறை அமைச்சர் இறந்தவர்கள் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி இறந்தவர்கள்உடலுக்கு அமைச்சர் நமச்சிவாயம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்,தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருத்தத்தை தெரிவித்து கொண்டார்.
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கு காங்கிரசார் அஞ்சலிசெலுத்தினர்
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்