இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண சென்ற பாகிஸ்தான் யூடியூபர் சுட்டுக் கொலை- ரசிகர்கள்

நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நியூயார்க் கடை வீதிகளில் ஷாத் அகமது வீடியோ எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலரிடம் ஒருவரிடம் போட்டி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அந்த பாதுகாவலரோ பதில் அளிக்க மறுத்திருக்கிறார். திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார்.…

திமுக இளைஞர் அணி நடத்தியகால்பந்து போட்டி பரிசளிப்பு விழா முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன் பங்கேற்பு !

புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ஐவர் கால்பந்து விளையாட்டுப் போட்டி உப்பளம் இந்திரகாந்தி விளையாட்டு அரங்கில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.மாாில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் ரோ. நித்திஷ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், புதுச்சேரி, கேரளா, தமிழகத்தின் சென்னை, தின்டிவனம், கடலூர், எண்டியூர், கோவளம், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 52 அணிகள் பங்கேற்கின்றன.இதில் முதல் இடத்தை கோரிமேடு பிளே மேக்கர்ஸ் அணியும், திமுக அணி இரண்டாம் இடத்தையும், பிளே மேக்கர்ஸ்–3 அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்ருபு விழா இன்று மாலை 7.00 மணியளவில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடந்தது.இந்த விழாவிற்கு, மாநில கழக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கிறார் விஜய்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 28-ஆம் தேதி மற்றும் ஜூலை 3-ஆம் தேதிகளில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார். முதல் கட்டமாக வருகிற 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி,…

புதுச்சேரி மக்களை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மாபெரும் வெற்றி1 லட்சத்து 36 ஆயிரத்து 516 வாக்குகள் வித்தியாச வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

புதுச்சேரி.ஜூன்-5 புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் இரண்டாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை 1 லட்சத்து 36 ஆயிரத்து 516 வாக்குகள் வித்தியாச வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், தேசிய ஜனநாய கூட்டணி கட்சி சார்பில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனா உள்பட 26 பேர் போட்டியிட்டனர். ஏப்ரல் 19ஆம் தேதி ஓட்டு பதிவு நடந்தது.இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் பாஜக சார்பில் நமச்சிவாயம், அதிமுக சார்பில் தமிழ் வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, உட்பட அரசியல் கட்சிகள் சார்பில் 7 பேரும் சுயேட்சையாக 19 பேரும் என மொத்தம்…

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் கடைவீதியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுவிழா கொண்டாட்டம் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக மாநில கழக அமைப்பாளர் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் சிவாவின் வழிகாட்டுதலின்படி, ஏம்பலம் தொகுதி கழகத்தின் சார்பில் கிருமாம்பாக்கம் கடைவீதியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுவிழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏம்பலம் தொகுதி கழக செயலாளர் பி ஆர் ரவிச்சந்திரன் தலைமைதாங்கினார். கிருமாம்பாக்கம் கடைவீதி நான்கு முறை நான்குமுனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேவநாதன் முன்னாள் மாநில மீனவர் அணி அமைப்பாளர் தொகுதி கழக மூத்த முன்னோடி குழந்தை மனோகரன், மகளிர் தொண்டர் அணி மாநில அமைப்பாளர் சுமதி, தொகுதி துணை செயலாளர் ஏம்பலம் கோவிந்தராஜ், தொகுதி பொருளாளர்…

புதுச்சேரி மணவெளி தொகுதி ஆண்டியார்பாளையம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பூமி பூஜை சபாநாயகர் தொடங்கிவைத்தார்

மணவெளி தொகுதி ஆண்டியார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ வீரன் ஆலயம் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான பூமி பூஜை இன்று காலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக தலைமை கலந்தாலோசனை

புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் முகவர்கள் பங்கேற்பு!கழகத் தலைவர் தளபதி அவர்களின் அறிவுரையின்படி, 4–ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து, கலந்தாலோசனைக் கூட்டம் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் தலைமையில் இன்று காலை 11.00 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட கழகச் செயலாளர்கள், திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்து கொண்டனர்.அதன்படி புதுச்சேரி மாநில திமுக தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் நிர்வாகிகள் துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில் திமுக சட்டத்துறைச் செயலாளர்…

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பெண்களை இழிவு படுத்தி யூடியூப்பில் பதிவேற்றம் விருதுநகரை சேர்ந்த யூடியூப்பரை புதுச்சேரி சைபர் கிராம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்

விருதுநகரை சேர்ந்த துர்க்கை ராஜ் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரது சேனலை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் பின் தொடர்கின்றனர். அதில் அவர் பல பெண்களுடன் யூடியூப் சேனல் துவக்குவது எப்படி என்றும் நிறைய சர்ப்ரைஸை தங்களது சேனலுக்கு வரவேற்பது எப்படி என்றும் கூறி, அவர்களிடம் பழகி பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி புதுச்சேரியை சார்ந்த ஒரு பெண் அவரது யூடியூப் சேனல் மூலம் அவருடன் பேசி பழகி உள்ளார். பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இதற்கு முன் பேசிய போது பதிவு செய்த ஆடியோ மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து பேசி அவரது சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த பதிவேற்றம் செய்த ஆடியோ மற்றும் வீடியோவை பல ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் . மேலும்…

அங்காளன்‌ எர்‌.எல்‌.ஏ.வுக்கு புதிய கார்‌ ஆளுநர்‌ அதிரடி உத்தரவு

புதுவையில்‌ என்‌.ஆர்‌.காங்‌கிரஸ்‌, பா.ஜ.க. கூட்டணிஅரசு பொறுப்பேற்றவுடன்‌ அமைச்சர்கள்‌, எம்‌.எல்‌.ஏ.க்‌களுக்கு கார்‌ வழங்கப்பட்டது.திருபுவனை தொகுதிபா.ஜ.க. ஆதரவு சுயேட்சைஎம்‌.எல்‌.ஏ. அங்காளனுக்கு புதிய கார்‌ வழங்கவில்லை.அவருக்கு பழைய கார்‌ வழங்‌கப்பட்டது.இந்த கார்‌ அடிக்கடி பழுதானதால்‌ இதைதிரும்ப ஒப்படைத்துவிட்டுசட்டசபைக்கு பைக்கில்‌வந்து பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினார்‌. அரசு புதிய கார்‌ வழங்க வேண்டும்‌ எனவும்‌அவர்‌ கோரிக்கை வைத்தார்‌.இருப்பினும்‌ அவருக்கு புது கார்‌ வழங்கவில்லை.இந்நிலையில்‌ புதுவை ஆளுநர்‌ராதாகிருஷ்ணனை கடந்த 20-ஆம் ‌தேதி மரியாதை நிமித்தமாக அங்காளன்‌ எம்‌.எல்‌.ஏ.சந்தித்தபோது, தனக்கு கார்‌வழங்கப்படாதது குறித்துவருத்தம்‌ தெரிவித்தார்‌. இதையடுத்து முதலமைச்சர்‌ அலுவலகத்தைதொடர்பு கொண்ட கஆளுநர்,உடனடியாக கார்‌ வழங்கஉத்தரவிட்டார்‌. இதனால்‌ அமைச்சராக பொறுப்பேற்று இலாகா இல்லாமல்‌ உள்ள திருமுருகனுக்கு வழங்கப்படஇருந்த டொயோட்டா கிரிஸ்டா கார்‌ அங்காளன்‌ எம்‌.எல்‌.ஏ.வுக்கு வழங்கப்பட்டுள்ளது.