ரூ.197 கோடியில் கட்டப்பட்ட பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் காட்பாடி வந்தார். அவருக்கு வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் வேலூர் நோக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வேலூர் புதியபஸ் நிலையம் அருகே வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மேயர் சுஜாதா மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.…

எல்லா அதிகாரமும் எனக்கு தான்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் – ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். அந்தவகையில், இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பொது செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப்பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் ஆகியோரை புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் பா.ம.க. இணை பொதுச்செயலாளராக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை டாக்டர் ராமதாஸ் நியமித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆகஸ்டு 10-ந் தேதி…

இந்திய ரயில்வே ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம்! – தமிழக முதல்வர் ஸ்டாலின்

இந்திய ரயில்வே என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருகிற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அதன்படி, மெயில் ரயிலில் கி.மீ.க்கு 1 பைசாவும் விரைவு ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்த முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ரயில்வே அமைச்சக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ரயில்களின் பயணக் கட்டணத்தை வருகின்ற ஜூலை 1 முதல் உயா்த்தவும், ஆனால் 500 கி.மீ. வரையிலான 2-ஆம் வகுப்பு பயணத்துக்கு கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை. 500 கி.மீ.க்கு மேலான ஒவ்வொரு கி.மீ.க்கும் அரை பைசா வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், வேலூர் மற்றும் திருப்பத்தூர்…

வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்- தமிழக முதல்வர் ஸ்டாலின்

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவா்- சமூகநீதிக் காவலா் என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வி.பி.சிங் நினைவைப் போற்றி, முதல்வா் வெளியிட்ட பதிவு: இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்!ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! என கூறியுள்ளார்.

10ம் வகுப்பிற்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு- சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார். அதன்படி, முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும், 2ம் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 முறை தேர்வு எழுதியவர்களில் அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்வில் மதிப்பெண் போதவில்லை எனக் கருதினால் 2ம் கட்ட தேர்வை எழுதலாம் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாலியல் உணர்வை தூண்டும் கொகைன்

தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வரும் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை இவர் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரது பின்னணியில் இருப்பவர்களை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள். இந்த இரண்டு போதைப்பொருள்களும் சென்னை மாநகரில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குகளில் நடைபெறும் விருந்துகளில் மதுவுடன் கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்கள் இரண்டுமே சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இளைஞர்களின் உடல் நலனை பாதிக்கும் வகையில்…

தி.மு.க. கூட்டணி ஒருபோதும் உடையாது- முத்தரசன்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி சேலத்தில் அதன் லோகோவை அறிமுகப்படுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் லோகோவை வெளியிட்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று திரும்ப திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல தலைவர்களும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.பா.ஜ.க. விரும்பும் கூட்டணி பலமான கூட்டணியாக அமையும், எதிரிகளால் எதிர்கொள்ள முடியாத கூட்டணியாக அமையும் என்று கற்பனையாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர பாரதிய ஜனதா…

நடிகர் கிருஷ்ணாவுக்கு தமிழக காவல்துறை விசாரணைக்கு அழைப்பு

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத் உள்ளிட்ட பலா் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு போதைப்பொருள் வழங்கிய சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் என்ற பிரடோ, சா்வதேச போதைப் பொருள்கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜான் ஆகிய இருவரையும் கடந்த 19-ஆம் தேதி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனா். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மருத்துவப்…

குடியரசு துணைத் தலைவரை சந்தித்த மீனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா. இவர் 45 ஆண்டு காலம் சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவரது கணவர் உடல்நலக்குறைவால் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தார். மீனாவுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகா விஜயுடன் ‘தெறி’ படத்தில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள மீனா பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட மீனா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.முன்னதாக மத்திய அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள மீனாவுக்கு…

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது

ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக எக்ஸ் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுக்க அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் கோகைன் போதைப்பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தீங்கிரை என்ற படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் மற்றும் பிரசாத் இடையே தொடர்பு…