இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் அவர்களது மீன்பிடி விசைப்படகும் நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் IND-TN-06-MM-1054 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை, தான் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளதாகவும், 2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர், இதுபோன்ற…
Category: தமிழ்நாடு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி உற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 4 மணிக்கு வெள்ளிப் பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தது. மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தன. கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் காலை 5.15 மணிக்கு ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தது. ஹரிஹர சுப்பிரமணிய சிவாச்சாரியார் கொடியேற்றினார். அப்போது…
“தமிழகம் இந்தியாவின் மாநிலம் தானா என்ற கேள்வி எழுகிறது”?-மத்தியஅரசுக்கு முத்தரசன் கண்டனம்
“தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக இலங்கை கடற்படை தொடர்ந்து கூறி வருகிறது.கடும் புயல், காற்று மழை காலங்களில், கடல் எல்லைகளை தீர்மானிப்பது கடினம் என, பல்வேறு கடல் சார் மீனவர் ஒப்பந்தங்கள் உள்ளன. அனைத்தையும் இலங்கை அப்பட்டமாக மீறுகிறது. மத்திய அரசும் வழக்கம் போல் நடந்து கொள்வது தமிழகம் இந்தியாவின் மாநிலம் தானா என்ற கேள்வி எழுகிறது?” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை நெடுந்தீவு அருகே நேற்று (ஆக. 23) இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேரை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் காங்கேயன் கடற்படை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இத்தகைய அட்டூழியத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. முன்னர்,…
சிவகங்கை பழமலைநகரில்எருமை மாட்டின் ரத்தம் குடித்து வழிபடும் திருவிழா!
சிவகங்கையில் 21 எருமைகள், 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு நடத்தினர். சிவகங்கை அருகே பழமலைநகரில் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தங்களது குல தெய்வங்களான காளியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன், மதுரைவீரனுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதற்காக நரிக்குறவர்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் சாமி கும்பிடுவதற்கான ஓலைக் குடில்களை அமைத்தனர். தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்தி வந்தனர். இன்று அதிகாலை சாமியாடிகள் சாமியாடினர். தொடர்ந்து, அனைவரும் நோய் நொடியின்றி வாழ, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட காளியம்மனுக்கு 21 எருமைகள் மற்றும் 120 ஆடுகளை பலியிட்டனர். பின்னர் எருமை ரத்தத்தை குடித்ததோடு, உடலிலும் பூசிக்கொண்டனர். இறைச்சியை காளிக்கு படையலிட்டு, பூஜை நடத்தினர்.…
இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்து அடாவடி தொடரும் அத்துமீறல்கள் மத்தியஅரசின் நடவடிக்கை என்ன?
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அழித்து வருகிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இதற்கிடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், நம்பியார் நகரைச் சேர்ந்த…
முத்தமிழ் முருகன் மாநாடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன. ‘உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.’ மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத் துலக முத்தமிழ் முருகன் மாநாடு மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். செயல்பாபு என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு அறநிலையத் துறை அமைச்சராக வந்த பிறகு இந்த துறை மிக…
தந்தை, மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது- ஈபிஎஸ்சிவராமன் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை- சீமான்
எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கை;கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மேலும், அவரது தந்தை திரு. அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி…
பாலியல் வழக்கில் கைதான சிவராமன் தற்கொலை தந்தையும் விபத்தில் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார். போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது அவரது வலது கால் முறிந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று காலை தகவல்கள் வெளியானது. இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் காவேரிப்பட்டினம் நடேசா திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின்…
சென்னை தனியார் கால் சென்டரில் உளவு பிரிவு அதிகாரிகள் சோதனை சட்டவிரோதசெயல்கள் கண்டுபிடிப்பு
கிரீம்ஸ்ரோடு முருகேசன் நாயகர் வணிக வளாகத்தில் ‘ஆப்செட் பிசினஸ் சொல்யூஷன்’ என்ற பெயரில் தனியார் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை 5 ஆண்டுகளாக கன்னிராஜ் என்பவர் நடத்தி வருகிறார். சுமார் 800 பேர் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். முன்னணி தனியார் வங்கிகளில் கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை இந்த நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு கடன் களை திருப்பி செலுத்தும்படி கூறுவார்கள். மத்திய அரசின விதி முறைகளை மீறி செல்போன் சிம்கார்டுகளை சிம்டூல் பாக்சில் பயன்படுத்தி லாபம் பெறும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படுவதாக வோடபோன் நிறுவன அதிகாரி பிரபு புகார் செய்ததையடுத்து மத்திய உளவுப் பிரிவு டி.எஸ்.பி. பவன் மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் குழுவினர் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள். 6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த…
கலைஞர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுமைமை ஆக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ” 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் கருணாநிதி படைத்துள்ளார்கள். தனியொரு மனிதரால் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என எண்ணும் வண்ணம் கலைஞர் சாதனை படைத்துள்ளார். கலைஞரின் இந்த நூல்கள் அனைத்தும் நூலுரிமை தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படும். தமிழ்நாட்டில் மட்டும் இன்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
