இலங்கை அதிபர் தேர்தலில்மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டி தமிழர்களின் முடிவு என்ன?

இலங்கையில் வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது. அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா களத்தில் உள்ளனர். இதற்கிடையே ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே(வயது 38) தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அக்கட்சி வேட்பாளருக்கு தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார். நமல் ராஜபக்சே…

காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி சியாமளா வீட்டில் ஒழிப்புத்துறை சோதனை

காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி சியாமளா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் சியாமளா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மண்டித்தெரு அருகே உள்ள சியாமளா வீட்டில் ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நொச்சிப்பட்டியில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டாபிராமர் சாமி ஊர்வலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டாபிராமர் சாமி ஊர்வலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை என 2 வேளை பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் செயல்பட தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக ஆடிப்பெருக்கு தினத்தில் ஸ்ரீ பட்டாபிராமர் சாமி கோவிலுக்கு அருகில் உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் உள்ள அனுமந்தீஸ்வரர் ஆலயத்தில் கொண்டு சென்று புனித தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் நொச்சிப்பட்டி கிராம பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத் துறை…

புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக புதிய பூங்காக்களை உருவாக்குதல், பழைய பூங்காக்களை புனரமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிண்டி சிறுவர் பூங்கா சென்னையில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய…

தென்காசி மாவட்ட கடனா அணை நீர்மட்டம் 78 அடியை எட்டியது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று அணை பகுதிகளிலும் மழை வெகுவாக குறைந்தது. இதனால் நீர்வரத்து குறைந்தது. மாவட்டத்தின் பிற இடங்களிலும் வெயில் அடிக்க தொடங்கியது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1317 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு 1154 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 143 அடி கொண்ட அந்த அணையில் 120.45 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 130 அடியை கடந்து விட்டது. கொடுமுடியாறு அணையில் 27 அடியும், மணிமுத்தாறு அணையில் 70.73 அடியும் நீர் இருப்பு உள்ளது. மாஞ்சோலை மற்றும் காக்காச்சி எஸ்டேட்டுகளில் தலா…

“திராவிட மாடலுக்கான அங்கீகாரம்” – உச்ச நீதிமன்றத்தின் உள்ஒதுக்கீடு தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதும் மேலும், பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளனர். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது! முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க – அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான்…

சென்னை வெள்ள தடுப்பு திட்டத்துக்கு முதல் தவணையாக மத்திய அரசு ரூ.150 கோடி ஒதுக்கீடு

சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு வெள்ளத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் முதல் நகர்ப்புற வெள்ளத்தணிப்புத் திட்டத்தில் ரூ.561.29 கோடி சென்னைக்கு ஒதுக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் ரூ.500 கோடியும் அடங்கும். இந்த நிலையில் சென்னை வெள்ள தடுப்பு திட்டத்துக்கு முதல் தவணையாக ரூ.150 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் மாநில அரசுக்கு முதல் தவணையாக இந்த மானியம் வழங்கப்படும். சிறு நீர்நிலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள சில உபரி வாய்க்கால்களை மேம்படுத்துதல், புதிய மழைநீர் வடிகால்களை நிர்மாணித்தல், கடற்பாசி பூங்காக்கள் மேம்பாடு, எட்டு நீர்நிலைகளை புத்துயிர் பெறுதல் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு மானியமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து நீர் வளத்துறை அதிகாரிகள் கூறும் போது, சில பணிகள் தொடங்கப்பட்டு…

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மதமாற்றம் தொடர்பான மோதலில் கடந்த 2019-இல் ராமலிங்கம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை என தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு…

மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமநாதபுரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் ராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று (01.08.2024) அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரிய…

இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு இந்நதிய வெளியுறவுத்துறை கண்டனம்

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் 2,000-த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து வந்துது. அவர்களைக் கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைகளை நோக்கி திருப்பினர். அப்போதும் விடாமல் இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகில் அவர்களை துரத்திச் சென்றனர். இதில் கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியது. இதனால் கார்த்திகேயனின் படகு நடுக்கடலில் மூழ்கி மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மாயமான ராமச்சந்திரன் என்ற மற்றொரு மீனவரி மீட்கும் பணி நடந்துவருகிறது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலால் தமிழக மீனவர் உயிரிழந்ததற்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை…