10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை காவல் நிலையத்துக்கு தீ வைப்பு

மேற்கு வங்கத்தில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கானாஸ் மாவட்டத்தில் ஜாய் நகர் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை டியூஷன் சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் காணாமல் போனதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் தேடுதலில் இறங்கிய கிராமத்தினரால் குளத்தில் இருந்து சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி வீட்டுக்கு வரும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லபட்டதாக பெற்றோரும் ஊராரும் தெரிவிக்கின்றனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். பெற்றோர் புகாரின் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியைக் காப்பாற்றி இருக்கலாம் எனவும் வேண்டுமென்றே அவர்கள் காலதாமதம் செய்ததாகவும் குற்றம் சாட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலரால் காவல் நிலையத்திற்கும்,…

ரயில்வே தனியாா் மயமாக்கப் படாது: மத்திய அமைச்சா் தகவல்

‘ரயில்வே தனியாா்மயமாக்கப்படும் என்கிற கேள்விக்கே இடமில்லை; ரயில் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்குவதே தற்போதைய நோக்கமாக இருந்து வருகிறது’ என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ரயில்வே பாதுகாப்புப் படையின் 40-ஆவது எழுச்சி தினம், மாபெரும் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டு பேசியதாவது: அடுத்த ஐந்தாண்டுகளில், ரயில்வே துறை முற்றிலுமாக மாற்றமடையும். வந்தே பாரத், நமோ பாரத், ‘கவச்’ ரயில் பாதுகாப்பு ஆகியவை இந்த மாற்றத்துக்கு வழிவகுக்கும். இது ரயில்வே மாற்றத்துக்கான சகாப்தம். இதில் தனியாா் மயமாக்கம் என்கிற கேள்விக்கே இடமில்லை. ரயில்வே மற்றும் பாதுகாப்பு ஆகியவை நாட்டின் முதுகெலும்புகள், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்பதை வதந்திகளைப் பரப்புபவா்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.…

அரியாணா சட்டப்பேரவைக்கு இளைஞர்கள் வாக்களிப்பு சாதனையை படைக்க மோடி வேண்டுகோள்

அரியாணா சட்டப்பேரவைக்கு,இன்று 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்து புதிய வாக்களிப்பு சாதனையை படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரியாணாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் சனிக்கிழமை (அக். 5) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 கோடிக்கும் மேற்பட்டோா் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 101 பேர் பெண் வேட்பாளர்கள். வாக்குப்பதிவு தொடங்கிய முக்கிய தொகுதிகளில், முதல்வா் நாயப் சிங் சைனி (லாட்வா), எதிா்க்கட்சித் தலைவா் பூபிந்தா் சிங் ஹூடா (கா்ஹி சம்பலா-கிலோய்), இந்திய தேசிய லோக்…

விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்- மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை மீட்பதற்கான விண்கலம் நேற்று [செப்டம்பர் 28] இரவு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 120 நாட்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க…

தெலுங்கானா துணை முதல் அமைச்சர் வீட்டில் திருடிய பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது

தெலுங்கானா துணை முதல் மந்திரி மல்லு பாட்டி விக்கிரமார்கா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார். அப்போது பஞ்சாரா ஹில்ஸ்சில் உள்ள அவரது வீட்டில் ரூ.22 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்க நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் இதர பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது சம்பந்தமாக பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்க போலீசார் அங்குள்ள ரெயில் நிலையத்தில் கட்டு கட்டாக பணத்துடன் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பீகாரை சேர்ந்த ரோஷன் குமார் மற்றும் உதயகுமார் என தெரியவந்தது. அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா துணை முதல் மந்திரி விக்கிரமார்கா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். 2 பேரையும் மேற்குவங்க போலீசார், ஆந்திரா…

தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பு.. நிர்மலா சீதாராமன் மீது எப்ஐ ஆர் பதிய நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதர்ஷ் தனது புகார் மனுவில், “நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக” குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக மத்திய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தைக் கொண்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் ஆடலும் பாடலும்தான் நடந்தது’ – ராகுல் காந்தி

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கட்டுமானப் பணிகள் மீதமிருந்த நிலையில் கடந்த கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அவசர அவசரமாக கோவிலின் மூல விக்ரகமான பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. இது மக்களவைத் தேர்தளுக்காக பாஜக நடத்திய நாடகமென எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியாவின் சினிமா, அரசியல் மற்றும் வியாபார பெரும்புள்ளிகள் பலர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாதது சர்ச்சையானது. தங்களுக்கு வந்த அழைப்பை நிராகரித்த காங்கிரஸ் இந்த விழா பெரும் பணக்காரர்களுக்காக நடத்தப்படுவது என்றும் அடித்தட்டு…

31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு” – முதல்வர் ஸ்டாலின் தகவல்

இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில். 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல்…

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலக தயார்- சித்தராமையா

கர்நாடகாவில் ‘முடா’ நில முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊழல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு…

ராஜிநாமாவுக்கு வாய்ப்பே இல்லை!-முதல்வர் சித்தராமையா

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார். இந்த வழக்கில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று உத்தரவிட்ட நீதிமன்றம், சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து சித்தராமையா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மைசூருவில் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சித்தராமையா, நான் முதல்வர் பதவியை ஒருபோதும் ராஜிநாமா செய்ய மாட்டேன். ஹெச்.டி. குமாரசாமி ஒரு அமைச்சர், அவர் மீது…