தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.9.2024) புதுதில்லியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இன்று மாலை 5.35 மணிக்கு தில்லியில் இருந்து புறப்படும் முதல்வர், இரவு 8.20 மணிக்கு சென்னை வந்தடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: இந்தியா
மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமர் மோடியிடம்தான் உள்ளது-தமிழக முதல்வர் ஸ்டாலின் பேட்டி
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சாணக்கியாபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று காலையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சென்று சந்தித்தார். பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பரிசளித்தார். பிரதமர் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, பனை ஓலை பெட்டியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி இன்னும் கிடைக்காததை சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் நிதியை விடுவிக்க…
ஆந்திராவில் மழைவேண்டி கழுதைகளுக்கு திருமணம்
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். விஜயவாடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளதால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கருகி நாசமானது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சத்ய சாய் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் ஆறுகள், ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. காரிப் பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப்போனது. இந்த நிலையில் வருண பகவானை மகிழ்விப்பதற்காக 2 கழுதைகளை குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம், மாலை யிட்டு, பட்டாசு வெடித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.…
சாலையில் துள்ளி குதித்த மீன்கள் அள்ளிசென்ற பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆந்திர மாநிலம், கம்மத்தில் இருந்து பிரகாசம் மாவட்டத்திற்கு உயிர் உள்ள மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. மெகபூபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மரிபெடா என்ற இடத்தில் சென்ற போது திடீரென நடுரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில் லாரியில் உயிருடன் இருந்த மீன்கள் சாலை முழுவதும் துள்ளி குதித்தன. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் ஓடிச்சென்று மீன்களை பிடித்தனர். அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் இருந்து சாக்கு பைகள் மற்றும் பாத்திரங்களைக் கொண்டு வந்து துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை விரட்டி அடித்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு போக்குவரத்து…
மேக் இன் இந்தியா திட்டத்தால் ஏற்றுமதி அதிகரிப்பு- பிரதமர் மோடி பெருமிதம்
‘மேக் இன் இந்தியா’ திட்டம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்பட்டது. 10-வது ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு துறைகளில் ஏற்றுமதி அதிகரிப்பதற்கும், திறன்களை உருவாக்குவதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இது வழிவகுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியதாவது:- மேக் இன் இந்தியா இன்று 10 ஆண்டுகளை கொண்டாடுகிறோம். இதை வெற்றி அடைய செய்ய அயராது உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்தத் திட்டம் நாட்டின் உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளின் அதிகார மையமாக மாற்ற 140 கோடி இந்தியர்களின் உறுதியை விளக்குகிறது. பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி போலீசில் புகார்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், லட்டு தயாரிக்க கலப்பட நெய் வழங்கியதாக, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுதொடர்பாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் புகார் அளித்துள்ளார். விலங்குகளில் கொழுப்புகள் உள்ளிட்ட பொருட்களை கலப்படம் செய்து 4 டேங்கர் நெய் சப்ளை செய்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனால்,…
சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லோக் ஆயுக்தாவிற்கு நீதிமன்றம் உத்தரவு
கர்நாடகாவில் ‘முடா’ நில முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு…
பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற 4 தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை- தமிழக முதலமைச்சர் வழங்கினார்
பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25.09.2024) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்…
நாட்டை உலுக்கிய பத்லாபூர் வன்கொடுமை: குற்றவாளி என்கவுன்டரில் கொல்லப்பட்டது எப்படி?
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் பத்லாபூா் நகரில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, காவல்துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, காவல்துறையினரிடமிருந்து கைத்துப்பாக்கியை பறித்து, காவல்துறை ஆய்வாளர் நிலேஷ் மோர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தற்காப்புக்காக, காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில், குற்றவாளி அக்சய் ஷிண்டே சம்பவ இடத்திலேயே பலியானதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில், நிலேஷ் மோருக்கு தொடை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாககக் கூறப்படுகிறது
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது மீண்டும் இலங்கை அத்துமீறல்
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
