இந்தியாவிற்கு ஒரு உண்மையான வரலாற்று நாள்- இந்திய செஸ் அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தனது முதல் தங்கப் பதக்கத்தை ஓபன் பிரிவில் வென்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். குகேஷ் தொம்மராஜு, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, பெண்டலா ஹரிகிருஷ்ணா, ஸ்ரீநாத் நாராயணன் மற்றும் அவர்களது குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் குறிப்பிடத்தக்க திறமை, சிறந்த உத்திகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பலனளித்துள்ளன. நீங்கள்…

பக்தர்கள் மாட்டிறைச்சி கொழுப்பில் தயாரிக்கப்பட்ட லட்டு உண்பது அருவருப்பானது- சத்குரு ஜக்கி வாசுதேவ் வேதனை

ஜக்கி வாசுதேவ்திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற பிரசாதமான லட்டுக்கள் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்று ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் காசை மிச்சப்படுத்த இந்த முறைகேடு நடந்துள்ளதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயடு குற்றம் சாட்டியுள்ளார். மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த திருப்பதி லட்டு விவகாரம் அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாட்டிறைச்சி கொழுப்பில் தயாரிக்கப்பட்டதை பிரசாதமாக உண்பது அருவருப்பானது. இந்த சம்பவம் மிகவும் அருவருப்பூட்டுகிறது. இதனால்தான் கோவில்கள் அரசின் கட்டுபாட்டிலன்றி பக்தர்கள் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும் என்று கூறுகிறோம், பக்தி இல்லாத இடத்தில புனிதத்தன்மையும்…

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது!” “சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது முதல் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2024 இல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வது வரை, என்ன ஒரு பயணம்! நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை…

பாபர் மசூதி சிதைந்ததை போல இன்று காங்கிரஸ் சிதைந்துவிட்டது – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் பாபர் மசூதி சிதைந்ததை போல காங்கிரசின் கட்டமைப்பு இன்று சிதைந்விட்டது என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக அம்மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் பிரச்சாரம் ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், இன்று காங்கிரசின் கட்டமைப்பு பாப்ரியை [பாபர் மசூதி] போல சிதைந்துவிட்டது. ராம பக்தர்கள் ‘இன்னும் ஒரு அடி , பாப்ரியை [பாபர் மசூதியை] இடி’ என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது. அடிமைத்தனத்தின் கட்டுமானம் உடைந்தது. அயோத்தியில் ராமர் கோவிலை எழுப்புவதற்கான பாதை வகுக்கப்பட்டது. இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன். அவர்கள்[காங்கிரஸ்] சாதி அரசியல் மூலம் உங்களை பிரிக்கின்றனர். நான்…

பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 85 ஆகும். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக தலைவர் முக ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். தேர்தல் சமயங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தூதுவராகவும் இவர் செயல்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர். இது ஒருபுறம் இருக்க தனது கருத்துகளுக்காக எஸ்றா சற்குணம் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜா கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபராகன ரவுடி சீசிங் ராஜா கைதாகியுள்ளார்.தலைமறைவாக இருந்த ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.அண்மையில் சீரிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்திருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு முன்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்புவை நேற்று டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்பு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ஆம்தேதி டெல்லி பயணம்

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 118.09 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு பல தடவை கேட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை மாநில அரசே செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் காரணமாக புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீட்டை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியை உடனே விடுவிக்குமாறு தமிழக…

ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் யூடியூப்

உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்பு செய்துவந்த அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த சேனல் நேரலையில் ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நாடாகும் விசாரணைகளின் நேரலை பாதிக்கப்ட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே சக்திவாய்ந்த அதிகார மையமாக விளங்கும் உச்சநீதிமன்றத்தின் பயன்பாட்டில் உள்ள சேனலே ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் டிஜிட்டல் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.

பூட்டியவீட்டில் 4 பேர் பிணம் காட்டி கொடுத்த துர்நாற்றம்

இரண்டு நாள்களாக பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில், உள்ளே சென்று பார்த்ததில் ஒரே குடும்பத்தினர் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். வடக்கு மகாராஷ்டிரத்தின் பிரமோத் நகர் பகுதியில் உள்ள சமர்த் காலனியில் வசித்து வந்த பிரவின்சின் கிராஸ் (53) என்பவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாகக் கூறி, சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமையில் பிரவின்சினின் வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர், அங்கு வசித்து வந்த பிரவின்சின் உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். பிரவின்சின் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களின் உடல்களும் அழுகிய நிலையிலும் தரையில் இருந்துள்ளன. மேலும், பிரவின்சின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், தற்கொலை குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, நால்வரின் உடல்களையும்…

ஆந்திர பிரதேசத்திற்கு ரூ. 25 கோடி அதானி குழுமம் வழங்கியது

ஆந்திர பிரதேச மாநில வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதானி குழுமம் சார்பில் நிவாரண பணிகளுக்காக ரூ. 25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. இம்மாத துவக்கத்தில் பெய்த கனமழை காரணமாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதிப்புகளுக்கு உதவும் வகையில் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 25 கோடி வழங்கியதாக கவுதம் அதானி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தார். இது தொடர்பான பதிவில், “ஆந்திராவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பெரும் சேதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.” “அதானி குழுமம் ஆந்திரப் பிரதேச மக்களுடன் ஒற்றுமையாக நிற்பதோடு, ஆந்திர மக்களுக்கு ஆதரவை வழங்கும் வகையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ. 25 கோடி வழங்குகிறது,” என குறிப்பிட்டுள்ளார்.