சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார். அதன்படி, முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும், 2ம் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 முறை தேர்வு எழுதியவர்களில் அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்வில் மதிப்பெண் போதவில்லை எனக் கருதினால் 2ம் கட்ட தேர்வை எழுதலாம் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Category: இந்தியா
ECE சான்று பெற்ற ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்
ரைஸ் மோட்டோ அதன் சமீபத்திய ஹெல்டன் ஹெல்மெட் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹெல்டன் சீரிஸ் ஹெல்மெட் விலை ரூ.3,499 ஆகும். ஹெல்டன் ISI, DOT மற்றும் ECE தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஹெல்மெட் மூன்று விதமான அளவுகளில் கிடைக்கிறது. ரைஸ் ஹெல்டன் சீரிஸ் மாடல் மேம்பட்ட பாலிகார்பனேட் மற்றும் ஷெல் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் எடை 1,500 கிராம். இந்த ஹெல்மெட் அதிக வேகத்தில் இழுவையைக் குறைக்கும் ஏரோடைனமிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த முன்புற வென்ட்கள் ஹெல்மெட்டுக்குள் காற்றைச் செலுத்துகின்றன, அதே நேரத்தில் பின்புற எக்ஸாஸ்ட் வென்ட்கள் வெப்பத்தை வெளியேற்றி, உங்களை குளிர்ச்சியாகவும் கவனம் சிதறாமலும் வைத்திருக்கின்றன.இதில் இரட்டை டி-ரிங் லாக் வழங்கப்படவில்லை. ஆனால் மைக்ரோமெட்ரிக் சின்ஸ்ட்ராப் சரிசெய்யக்கூடிய தன்மையை உறுதி செய்கிறது. இதில் ஃபேக்டரி ஃபிட்…
குடியரசு துணைத் தலைவரை சந்தித்த மீனா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா. இவர் 45 ஆண்டு காலம் சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவரது கணவர் உடல்நலக்குறைவால் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தார். மீனாவுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகா விஜயுடன் ‘தெறி’ படத்தில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள மீனா பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட மீனா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.முன்னதாக மத்திய அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள மீனாவுக்கு…
கேமரூனுக்கு இந்தியா! மீண்டும் 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைப்பு!
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா சார்பில் 1000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேமரூன் நாட்டின் வடக்கு மாகாணங்களில் கடந்த 2024-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்குத் தேவையான சுமார் 1000 மெட்ரிக் டன் அரசி மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை, கேமரூன் நாட்டுக்கான இந்தியாவின் உயர் ஆணையர் விஜய் கந்துஜா, அந்நாட்டு பிராந்திய நிர்வாக அமைச்சர் பால் அடாங்கா இன்ஞியிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து, விஜய் கந்துஜா வெளியிட்ட முகநூல் பதிவில், அவசரகாலத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்பின் அடிப்படையில், இந்த மனிதாபிமான உதவியானது மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் கேமரூன் நாட்டுக்கு இந்திய அரசு சார்பில் 1000 மெட்ரிக் டன் அளவிலான அரிசி…
ஜெகன் மோகன் கார் டயரில் சிக்கி உயிரிழந்த தொண்டர்
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கான்வாயைப் பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில், செலி சிங்கையா மலர்கள் தூவ முயன்றபோது தவறி விழுந்து, ஜெகனின் காரின் முன் வலது சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார். முதலில், விபத்து ஜெகனின் கான்வாயில் உள்ள மற்றொரு வாகனத்தால் நடந்ததாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால்,…
கேஜிஎஃப் தங்கச் சுரங்கம் திறப்பு
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கோலார் தங்க வயல் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, தங்கக் கட்டிகளை வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மூடப்பட்ட கோலார் தங்க வயலை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, சுரங்கத்தின் அடி ஆழத்தில் தோண்டி தங்கம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. மாறாக, தரைப்பகுதியில் மேலே இருக்கும் தங்கத்தை சேகரிப்பது புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு கலந்திருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பது போன்றவை மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இதனால் தங்கம் விலை குறையுமா என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவின் தங்க இறக்குமதி குறைந்து, அந்நியச்செலாவணி குறையலாம் மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்றுதான் கூறப்படுகிறது. கடந்த 1875ஆம் ஆண்டில் கோலார் தங்க வயலில் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு, சுரங்கம் அமைக்கும்…
இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து – 25 பேர் படுகாயம்
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. மண்டி மாவட்டம் பத்ரிகாட் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்தனர். 25 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு
நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெருந்துயா் நேரிட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காயமடைந்தோரை சந்தித்து நலம் விசாரித்த மோடி, உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ 171), இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புறப்பட்டது. ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் பி.ஜே அரசு…
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்திய வீராங்கனை சுருச்சி தங்கம் வென்றார்
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் வரும் 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 6வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார். பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங்…
மனைவியின் அஸ்தியை கரைக்க வந்தவர் பலயான சோகம்
மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார். மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி அவரும் பலியான நிலையில் அவரது இரண்டு மகள்களும் தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கிறார்கள். தாயை ஒரு வாரத்துக்கு முன்பு இழந்து, தந்தையையும் நேற்று இழந்த நிலையில், யார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள் என்பது தெரியவில்லை. லண்டனில், அர்ஜூன் தனது மனைவி பாரதிபென் மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், ஏழு நாள்களுக்கு முன்புதான் பாரதி பென் உயிரிழந்துள்ளார். சிகிச்சையில் இருந்து வந்த பாரதி பென், தான் உயிரிழந்துவிட்டால், எனது அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஆற்றில்…