கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனை அளிப்பதாக அத்தொகுதியின் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசுகையில், இழப்பீட்டு தொகையை உயர்த்தி, உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார். இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி…
Category: இந்தியா
பட்ஜெட் குறித்து – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, 2047 ல் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் வளரும் இந்தியாவை நோக்கி இந்த ஆண்டு முதலாவதாக புதிய பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது கடந்த ஆண்டை விட எதிலும் இந்த பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விவசாயிகள், வணிகர்கள் என ஒட்டுமொத்த மக்களின் பங்களிப்பில் தான் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்காக இந்திய மக்களுக்கு நான் கூறி கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக சுயதொழில் என்ற அர்த்தத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 2004-2005 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் சொல்லப்படவில்லை. அந்த நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு அந்த 17 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லையா?…
ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனை இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்மணி
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார். போட்டியின் 2-வது நாளில் அவர் பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இந்த நிலையில் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரும், சரப்ஜோத் சிங் ஜோடியும் இணைந்து நேற்று நடந்த தகுதி சுற்றில் 580 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இதன் மூலம் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று…
கேரளாவின் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு12 பேர் உயிரிழந்தனர்
உகேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 12 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடு – முண்டக்காய் பகுதியில் இன்று அதிகாலை கனமழையை தொடர்ந்து 2 மணியளவில் முதலில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கூடம் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் முகாமாக இருந்துள்ளது. பள்ளியின் அருகே அமைந்துள்ள வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு சென்று வருவதற்கான பாலம் இடிந்து சேதமடைந்துள்ளது. அதனால் சுமார் 400 குடும்பங்கள் வெளியேற முடியாமல் அங்கு சிக்கி உள்ளதாக தெரிகிறது. போலீஸார்,…
வயநாடு நிலச்சரிவு கவலையளிக்கிறது- பிரதமர் மோடி
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமான வயநாட்டில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் கவலையளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடுபத்தினருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து பேசினேன். மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
மோடி மார்பில் அணிந்திருக்கும் தாமரை சக்கரவியூகத்தை கட்டுப்படுத்தும் 6 பேர் முக்கியமாக ஏ1 ஏ2- எதிர்கட்சிதலைவர் ராகுல் காந்தி
பாஜக வைத்திருக்கும் சக்கர வீயுகத்துக்குள் ஆறு பேர் மட்டுமே போக முடியும். கோயிலின் கருவறைக்குள் கூட அனைவரும் போக முடியும், ஆனால், பாஜக சக்கரவியூகத்துக்குள் வேறு யாரும் நுழைய முடியாது என்றார் ராகுல் காந்தி. மக்களவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் பல்வேறு அடிப்படை மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, அம்பானி, அதானிக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பட்டியலிட்டார். அதற்கு, அம்பானி, அதானி பெயர்களைக் குறிப்பிடக்கூடாது என்று அவைத் தலைவர் கூறியதால், ஏ1 என அம்பானியையும் ஏ2 என அதானியையும் குறிப்பிட்டு கிண்டலாகப் பேசினார் ராகுல் காந்தி. தொடர்ந்து அவர் பேசுகையில், சாதிவாரி கணக்கெடுப்பே மக்களின் விருப்பம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 95 சதவீத மக்கள் விரும்புகிறார்கள். காங்கிர ஆட்சியல் செயல்படுத்திய திட்டங்களை சக்கரவியூகத்தின் மூலம்…
சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் பின் தங்கிய சமுதாயத்தின் விகிதாச்சாரத்தை தெரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். திமுக நடத்திய சமரசமற்ற சட்டப் போராட்டத்தால் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காணவும், சமூகநீதியை நிலைநாட்டவும் நமது உரிமையான பங்கைப் பெறவும் மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடிப் பணியாகும். இதை அடைய நாம் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.
மேகதாது குறித்து தமிழகத்துடன் விவாதிக்க தயாராக இருக்கிறோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுடன் விவாதிக்க கர்நாடக மாநில அரசு தயாராக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. மத்திய அரசு தேவையான அனுமதி அளித்தால், கர்நாடக மாநிலம் திட்டத்தை அமல்படுத்த தயாராக உள்ளது. நாங்கள் தயாராக இருக்கும் நிலையில், அவர்கள் விவாதிக்க தயாராக இல்லை. மேகதாது எங்களுடைய உரிமை. எங்கள் மாநிலத்தில் நீர்த்தேக்கம் கட்டப்படும். தமிழ்நாடு தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்குகிறது. வழக்கமான மழைக்காலங்களில் கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டும். அப்போது 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2022-23-ல் 665 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த வருடம் அதிகமான தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது. ஏற்கனவே 83 டிஎம்சிக்கு அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் குறைவான காலத்தில் எங்களால்…
ஆபாசப் படம் பார்த்து 9 வயது தங்கையை பலாத்காரம் செய்து கொன்ற 13 வயது அண்ணன்
ஆபாசப் படங்களால் ஏற்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் மனதைப் பதற வைப்பதாக அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி வீடு ஒன்றில் முன்னாள் இருந்த தோட்டத்தில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது . இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று பிரேதப் பரிசோதனையில் உறுதியான நிலையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தடயங்களை சேகரித்து பெண்ணின் குடும்பத்தினர் உட்பட சுமார் 50 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியலில் உயிரிழந்த சிறுமி அவளது 13 வயது அண்ணனால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. தொடர்ச்சியாக ஆபாசப் படங்களைப் பார்த்து வந்த அந்த சிறுவன்…
தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது
புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார். அனைத்து புதிய படங்களும் வெளியான அன்றைய தினமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் சிறிது நேரத்தில் வந்துவிடும். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்தும் அதனை பதவியேற்றம் செய்யும் அட்மினை கைது செய்ய முடியவில்லை. மேலும் ஒவ்வொரு முறை இணையதளம் தடை செய்யப்படும் போதும் புதிய முகவரியில் இருந்து சட்டவிரோதமாக படங்களை பதிவேற்றம் செய்து வந்தனர். இதுதவிர நீதிமன்றம் மூலம் தடை விதித்து நடவடிக்கை எடுத்த போதிலும் புதிய இணையதளம் தொடங்கப்படுவது வாடிக்கையாகி இருந்து வருகிறது. இதனால் திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் செய்வதறியாமல் திகைத்து வந்தனர். இந்நிலையில் கேரளத்தில் ஒரு திரையரங்கில் தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின்…
