திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு

திருப்பதி, திருமலை கோயிலில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். மேலும், டிடிடி குழு உறுப்பினர்களாக 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அறங்காவலர் குழு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் லோகேஷ் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அறங்காவலர் குழு தலைவராக பணியாற்றுவதை பாக்கியமாக கருதுகிறேன். கடந்த ஆட்சி காலத்தை போல் அல்லாமல் வெளிப்படைத்தன்மையாகவும் உண்மையாகவும் பாடுபடுவேன். திருமலை தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். தேவஸ்தானத்தில்…

தேர்தல் வாக்குறுதி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தது. சக்தி திட்டம் எனும் இத்திட்டத்தின் மூலம் கர்நாடகா முழுவதும் பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். இந்நிலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், “பஸ் டிக்கெட் எடுக்க எங்களுக்கு பொருளாதார வசதி உள்ளது. இலவச டிக்கெட் வேண்டாம்’ என சில மாணவிகள் இ – மெயில் மற்றும் ‘எக்ஸ்’ வலைத்தளம் வழியாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே சக்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் மாநில பிரிவுகள், சரியான பட்ஜெட்டையும், நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்காத தேர்தல் வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். கார்கேவின் இக்கருத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது…

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்- ராகுல் காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:- பண்டிட்ஜியின் இந்து, பாபுவின் அன்புக்குரியவர், அச்சமற்றவர், துணிச்சலானவர், நீதியை விரும்புபவர் – இந்தியாவின் இந்திரா! பாட்டி, தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான உங்கள் தியாகம், பொது சேவையின் பாதையில் நம் அனைவரையும் எப்போதும் ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

சிவகாசி பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாமு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்துள்ளனர். தயாரிப்பு குறைந்த நிலையில் கூட கடந்தாண்டை விட, நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாமல் இருக்கிறது. அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து சென்று வந்தனர். அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து, கடந்த…

பி.பி.எல். நிறுவனர் நம்பியார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு

இந்திய மின்னணு நிறுவனமான பி.பி.எல். குழும நிறுவனர் டி.பி. கோபாலன் நம்பியார் வியாழக்கிழமை காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 94 வயதான நம்பியார் கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். டிபிஜி (DPG) என்று பிரபலமாக அறியப்பட்டவர் கோபாலன் நம்பியார். இவர் பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் “பி.பி.எல். பிராண்டின் நிறுவனர் ஸ்ரீ டிபிஜி நம்பியாரின் மறைவு வருத்தமளிக்கிறது. நெடுங்காலமாக நெருங்கிப் பழகிய ஸ்ரீ நம்பியாரின் மகத்தான பங்களிப்புகள் மற்றும் அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோலமிட்ட பெண்கள் மீது கார் மோதி விபத்து

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 17 வயது சிறுவன் ஓட்டிவந்த கார் ரங்கோலி கோலம் போட்டி கொண்டிருந்த 2 பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ்யா (13) என்ற சிறுமியும் பிரியன்ஷி (21) என்ற இளம்பெண்ணும் தீபாவளியை ஒட்டி தங்களது வீட்டிற்கு வெளியே ரங்கோலி கோலம் போட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் இவர்கள் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமைடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நவ்யா (13) கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தியவுடன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், காரை அடித்து நொறுக்கி, ஓட்டுநர்…

வயநாடு இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி

பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ரேபரேலி தொகுதியில் அவர் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 649 வாக்குகள் பெற்றார். சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார். அதுபோல வயநாடு தொகுதியில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 444 வாக்குகள் பெற்று இருந்தார். அந்த தொகுதியில் அவர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி. பதவியில் நீடிக்க முடியும் என்பதால் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஏற்படுத்த…

வெடிகுண்டு மிரட்டலுக்கு உடந்தை.. ‘எக்ஸ்’ தளத்தின் மீது குற்றம்சாட்டும் மத்திய அரசு

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 200 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் வெடிகுண்டு மிரட்டல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு துணை போவதாக பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் மீது மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. எக்ஸ் தளத்தில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் யூசர் ஐடி மற்றும் டொமைன் தொடர்பான தகவல்களை போலீஸ் கோரியுள்ளது. ஆனால் தளத்தில் தனிநபர் உரிமைகள் காரணமாக அந்த தகவல்களைத் தர மறுத்துள்ளது எக்ஸ். இந்த தளத்தின் வாயிலாகவே பல…

இந்தியாவின் மதச்சார்பின்மை முகவுரையை மாற்ற சுப்ரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கு- தள்ளுபடி

இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘சோஷியலிச’ என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர். இந்நிலையில் இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திரா காந்தி அரசால் பாராளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் தன்னிச்சையாக இந்த வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது செல்லாது. அவ்வாறு செல்லும் என்றால், அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது. முகவுரையை எழுதியபோது, சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்த்தால்,…