மழைநீர் கசிவு ஏற்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடம்-பாராளுமன்றத்திற்கு வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே மழைநீர் கசிவு – எதிர்க்கட்சிகள் கிண்டல்

டெல்லியில் கனமழை பெய்து வருவதால், பாராளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. பாராளுமன்றத்திற்குள் தண்ணீர் ஒழுகும் வீடியோக்களை காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் தங்களது எஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் தண்ணீர் ஒழுகுவது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தார். புதிய பாராளுமன்ற கட்டிடம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். அப்போது, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நேரத்தை பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பாராளுமன்றத்திற்கு வெளியே வினாத்தாள் கசிவு, பாராளுமன்றத்திற்கு உள்ளே மழைநீர் கசிவு. புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டி ஓராண்டு முடிவடைவதற்குள்…

ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனை இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்மணி

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார். போட்டியின் 2-வது நாளில் அவர் பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இந்த நிலையில் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரும், சரப்ஜோத் சிங் ஜோடியும் இணைந்து நேற்று நடந்த தகுதி சுற்றில் 580 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இதன் மூலம் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று…

ஒலிம்பிக்ஸை நிறுத்த சதி? பிரான்சில் தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக அன்றைய தினம் காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்சின் ஆறு மாவட்டங்களில் இணைய தொடர்பு கம்பிகள் அறுக்கப்பட்டும், தீவைக்கப்பட்டும் உள்ளன. குறிப்பாக 4G சேவைகளை வழங்கும் இணையத்தொடர்பும், 5G இணைய சேவைகளை வழங்கும் FIBER கம்பிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த தீ விபத்து…

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது பதக்கப் பட்டியலைத் திறந்துள்ளது. கடந்தமுறை நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மனு பாக்கர் இழந்திருந்த நிலையில், இம்முறை பதக்கம் வென்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கின் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவில் (பிஸ்டல்) 221.7 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். தென்கொரியாவின் ஓ யே ஜின் என்பவர் 243.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு கொரிய வீராங்கனை கீ யேஜின் 241.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். மனு பாக்கர் பதக்கம் வென்றதன் மூலம் துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செருப்புத் தைக்கும் தொழிலாளியைச் சந்தித்துப் பேசிய ராகுல்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரில் சமூகத்தின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதற்காக செருப்புத் தைக்கும் தொழிலாளியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வழக்கில் சுல்தான்பூரில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுல்தான்பூரில் உள்ள செருப்புக் கடையில் ராகுல் காந்தி தனது காலணியைத் தைக்கும்போது தலித் தொழிலாளியிடம் சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினார். அதன் விடியோ பதிவு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடின உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், அவர்களுக்காக நாடாளுமன்றம் வரை குரல் எழுப்புவோம்.அவர்களின் நிகழ்காலம் பாதுகாப்பாகவும், எதிர்காலத்தை வளமாகவும் மாற்றுவதே எங்களின் நோக்கமாகும் என்று…

இளம் கிரிக்கெட் வீரர் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை

23 வயது இளம் கிரிக்கெட் வீரர் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ், விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கிரிக்கெட் பயிற்சியை முடித்து வீட்டுக்குத் திரும்பியபோது, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து யாரோ ஒருவர் குதிப்பதை பார்த்ததும், அங்குள்ளவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கும் காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சாமுவேல் ராஜ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாமுவேல் ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கத்திப்பாரா மேம்பாலத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நான் அமைதியாக இருக்க மாட்டேன்- இஸ்ரேலிடம் கமலா ஹாரிஸ்

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் காமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேசுவார்த்தையில் அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் நேதன்யாகுவிடம் பேசுகையில், கடத்த 9 மாதங்களாக காசாவில் நடந்தவை கொடூரமானது. இறந்த குழந்தைகளின் புகைப்படங்களையும், பசியில் துடித்தபடி தொடர்ந்து இடம்பெயரும் மக்களின் அவல நிலையையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எங்களை நாங்களே மரத்துப்போகச் செய்ய முடியாது. இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் நேதன்யாகுவிடம் பேசியது குறித்து பின்னர் மனம் திறந்த கமலா ஹாரிஸ், காசா மக்கள் படும் துயரம்…

தங்கள் குழந்தைகளை கண்காணிக்க புது அம்சம் ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸ் (For Your Kids) அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸால் உங்கள் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்கவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியை கண்காணிக்கவும், மேலும் ஆப்பிள் வாட்ச்சின் மற்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்த அனுமதிக்கும். இதன் மூலம் உங்கள் குழந்தைகள், தகவல்கள் மற்றும் போன் அழைப்புகள் மற்றும் நீங்கள் வழக்கமாக ஆப்பிள் வாட்சில் பெறும் அனைத்து உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களையும் பெறலாம். இந்த அம்சம் இப்போது இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் SE மற்றும் ஆப்பிள் வாட்ச் 4 அல்லது அதற்குப் பிறகு வெளியான மாடல்களில் இந்த அம்சம் வேலை செய்யும். வாட்ச்…

இந்தியா போங்க ஆனா மணிப்பூர் போகாதீங்க.. தன்நாட்டு அமெரிக்கா அரசு எச்சரிக்கை

அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களிடம் இந்தியா பயணம் செய்பவர்கள் மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீரில் நக்சலைட்டுகள் புழக்கம் அதிகளவில் இருப்பதால் அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது. “குற்றம் மற்றும் தீவிரவாதம் அதிகரித்து காணப்படுவதால் இந்தியா செல்வோர் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். சில பகுதிகளில் அதிகளவு அபாயம் கொண்டுள்ளது.” “இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயணம் செய்யாதீர்கள். அங்கு தீவிரவாதம் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியாகி இருக்கிறது. மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதியான மணிப்பூரிலும் வன்முறை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.” “இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் கற்பழிப்பு முதன்மையாக உருவெடுத்து வருகிறது. வன்முறை…

பராக் ஒபாமா மற்றும் அவரின் மனைவி மிட்சேல் ஒபாமா இருவரும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு

“கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என்ற ஆதரவுக் குரல் மூலம் அமெரிக்க அரசியல் களத்தில் நிலவிவந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதி காத்தது பேசுபொருளானது. அதேநேரம், பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்று, “அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியும் என ஒபாமா எண்ணவில்லை. கமலா ஹாரிஸ் இந்தப் போட்டியில் வெல்ல முடியாது. இதனால் ஒபாமா அதிருப்தியில் இருக்கிறார்” என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது பராக் ஒபாமா மற்றும் அவரின் மனைவி…