திருமலை நாயக்கர் அரண்மனையின் எழிலைக் காண்பதற்கு ஒளிவிளக்குகள்-அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. சங்க காலப் பாண்டியரின் தலைநகராக விளங்கியது. பல்வேறு இலக்கியங்களும் வெளிநாட்டார்க் குறிப்புகளும் மதுரையின் சிறப்பினை எடுத்துக்கூறுகின்றன. மதுரையைத் தலைமையிடமாக் கொண்டு கி. பி 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். நாயக்கர் மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவராக திருமலை நாயக்கர் கி.பி.1623- 1659 வரை ஆட்சிசெய்தார். திருமலை நாயக்க மன்னர் கி.பி.1636 ஆம் ஆண்டில் மதுரையில் அரண்மனை ஒன்றினைக் கட்டினார். இந்த அரண்மனையே தற்போது அம்மன்னரின் பெயரால் திருமலை நாயக்கர் அரண்மனை என்றழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்த அரண்மனைகளில் ஒன்றாக மதுரைத் திருமலை நாயக்கர் அரண்மனை திகழ்கிறது. திருமலை நாயக்கர் அரண்மனை சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டிருந்தது.…

ரஷியாவில் 13 வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிருடன் எழுந்த இளம்பெண்

ரஷியாவின் நோவோசிபிர்ஸ்க் [Novosibirsk] நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் 13 வது மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் அதிசயிக்கத்தக்க வகையில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். சைபீரியாவைச் சேர்ந்த 22 வயதான அந்த இளம்பெண் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அந்த கட்டிடத்தில் 13 வது மாடியில் இருந்த அறையின் ஜன்னலில் இருந்து இடறி விழுந்துள்ளார். இளம்பெண் கீழே புல் தரையில் விழுந்த உடனே நிதானித்து எழுந்து நின்ற காட்சிகள் வெளியாகி அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. இந்த விபத்தில் அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதற்கிடையில் இந்த வீடியோ இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.

சிங்களஅரசு மீண்டும் அட்டகாசம் ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது

சிங்களஅரசு மீண்டும் அட்டகாசம் ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது பாக் ஜலசந்தி, மன்னார் குளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 15-ந்தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து மீனவர்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இதற்கிடையே கடலில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று முன்தினமும், நேற்று காலை ராமேசுவரம் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 497 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இன்று அதிகாலையில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையை ஒட்டிய கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு…

அமெரிக்கா தெருவில் வாழ்ந்த பெண்ணுக்கு புதிய வீடு பரிசளித்த இன்ஸ்டாகிராம் பிரபலம்

ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் இசாஹியா கிராஸா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவர் தனது வாகனத்தில் ஒரு பெண்ணை வாழ்த்தும் காட்சிகள் உள்ளது. அப்போது அந்த பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார். அந்த பையில் வீட்டு சாவி இருக்கிறது. அப்போது, நான் உங்களுக்கு ஒரு குடியிருப்பை தருகிறேன் என கூறுகிறார். இதைகேட்டதும் அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. தொடர்ந்து வீடியோவில், அந்த பெண்ணை கிராஸா புதிய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அந்த வீட்டில் படுக்கை வசதி, டி.வி. உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இருக்கிறது. வீடியோவுடன்…

4 மணி நேர கொண்டாட்டத்துடன்.. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்

பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, ஒலிம்பிக்ஸ் விளையாட்டு. அங்கு ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது. இதில் யுத்தத்துக்கு தயாராவதற்கு உதவக்கூடிய ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு அனுமதி இல்லை. 2-வது ஒலிம்பிக்ஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1900-ம் ஆண்டில் நடந்தது. 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர், வீராங்கனைகள் 19 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.இந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும். ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம்…

சீனாவில் டோரிமான் ட்ரோன் ஷோகண்டுகளித்த பொதுமக்கள்

சீனாவில் உள்ள ஹாங்காங்கின் சாலிஸ்பரி சாலையில் இரவு நேரத்தில் 1000 ட்ரோன்களை பயன்படுத்தி ‘டோரிமான்’ கதாபாத்திரங்கள் வானில் காட்சிப்படுத்தப்பட்டன. சுமார் 15 நிமிடங்கள் வரை நிகழ்த்தப்பட்ட இந்த ட்ரோன் ஷோவை காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர். இதை கண்டுகளித்த மக்கள் இது தங்களது குழந்தை பருவத்தை நினைவுபடுத்தியதாக கூறி மெய்சிலிர்த்தனர். இது உலகின் 2 ஆவது டோரிமான் ட்ரோன் ஷோ ஆகும். கடந்த மே மாதம் ஹாங்காங்கில் முதலாவது டோரிமான் ட்ரான் ஷோ நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச கலவவரத்தில் 115 பேர் உயிரிழப்பு இந்திய மாணவர்கள் 998 பேர் நாடு திரும்பினர்

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களின் தொடர் கலவரத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளர். பாதுகாப்பு கருதி இந்திய மாணவர்கள் சுமார் 1,000 பேர் அங்கிருந்து நாடு திரும்பினர். வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை வங்கதேச அரசு அண்மையில் அறிவித்தது. இது பாரபட்சமானது என்றும் திறமை அடிப்படையில் அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 14-ம் தேதி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து போராட்டம் தீவிரம் அடைந்தது. நாடு தழுவிய இந்த போராட்டத்தில் பல இடங்களில்…

மைக்ரோசாப்ட் குளறுபடியால்ஒரே நாளில் ரூ.75,ஆயிரம் கோடியை இழந்த கிரவுட் ஸ்டிரைக்’ நிறுவனம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட் ஸ்டிரைக்’ என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று நடந்த சென்சார் மென்பொருள் அப்டேட்டில் குளறுபடி ஏற்பட்டதால் மைக்ரோசாப்ட் சர்வர்கள் முடங்கின. இந்த சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது. பாதிப்புகள் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில்பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள்…

வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்- தமிழக முதலமைச்சர்

வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வங்கதேசத்தில் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்க வேண்டும். வங்கதேசத்தில் கலவரம் காரணமாக தமிழக மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு அயலக தமிழர் நலன் ஆணையம் மூலம் உதவிகளை பெற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் அயலக தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: இந்தியாவிற்குள் – +91 1800 309 3793, வெளிநாடு – +91 80…

கோவா அருகே சரக்கு கப்பலில் தீவிபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலி.. மீட்புப்பணிகள் தீவிரம்

கோவா அருகே வணிக சரக்குக்கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். IMDG எனப்படும் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகம் நோக்கி 21 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் கோவாவின் தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நேற்று மதியம் வந்துகொண்டிருந்த்து. அப்போது சார்ட் சர்கியூட் காரணமாக கப்பலின் முன்புற செக்ஷனில் தீப்பற்றியுள்ளது. கப்பல் பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பயனளிக்கவில்லை. தீ மளமளவென பரவிய நிலையில் இந்திய கடலோரக் காவல்படையினர் 2 படகுகளில் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ…