புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அண்ணா திடலில், ரூ. 9.66 கோடி மதிப்பீட்டில், சிறு விளையாட்டரங்கம் மற்றும் இந்த திடலை சுற்றி 179 கடைகள் இயங்கிவந்தன. எனவே அவர்களுக்கு நகராட்சி கடைகள் கட்டும் பணியும் கடந்த 2021ம் ஆண்டு துவங்கியது. அப்போதைய முதல்வர் நாராயணசாமி இதனை தொடங்கிவைத்தார். ஸ்மார்ட் சிட்டி மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே சமூகமான உறவு இல்லாததால் கட்டுமான பணி இழுப்பறியாக இருந்தது. அண்ணாதிடலில் 14 ஆயிரத்து 435 சதுரமீட்டர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் கட்ட முடிவுசெய்யப்பட்டது. இதில் வீரா்கள் தங்குமிடம் கால்பந்து திடல்,டென்னீஸ்கோர்ட் உடற்பயிற்சிகூடம் பெத்தாங்கோர்ட் பார்வையாளர்கள் அமர்ந்து வகையில் கேலரிகள் அைமகிறது. ேமலும் இதை சுற்றி 179 கடைகளும் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், விளையாட்டரங்கம் கட்டும் பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று ஆய்வு செய்தார்.பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், ஸ்மார்ட் சிட்டி…
Category: முதன்மை செய்திகள்
உச்ச நீதிமன்ற நீதிபதி உடன் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் சந்திப்பு
உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவனை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து நேரில் சந்தித்து புதுவைத் தமிழ்ச் நிகழ்ச்சிக்கு வருகை தர வேண்டி அழைப்பு விடுத்தார். உடன்பொருளாளர் . அருள் செல்வம், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, சுந்தர முருகன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் உள்ளனர்.
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்- தூத்துக்குடியில் 30-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
2024-25ம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ந்தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் இனி மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.
வதந்தி பரப்பியவர்கள் வீடியோ
நேற்று 12.12.24 புதுச்சேரி அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காததற்கு முன்பே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று பொய்யான செய்தியை WhatsApp மூலம் இணையதளத்தில் பரப்பிய ஆட்டோ ஓட்டுநர்களான புதுச்சேரி சின்னையாபுரத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜ் மற்றும் கலைவாணன் ஆகியோர்கள் பொதுமக்களிடம் தங்களின் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்ட வீடியோ பதிவு.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்தது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் (டிச.14, காலை 9 மணி) மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
நிவாரணத் தொகையை பத்தாயிரம் ஆக உயர்த்து வழங்க வேண்டும்காங்கிரஸ் கோரிக்கை
. நிவாரணத் தொகையை பத்தாயிரம் ஆக உயர்த்து வழங்க வேண்டும்காங்கிரஸ் கோரிக்கை. புதுச்சேரி. டிச.12-புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்பியும் ஆன வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வைத்தியநாதன் எம் எல் ஏ காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் கவர்னர் கைலாசநாதனை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர் அதில் கூறியிருப்பதாவது பெண்கள் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள் மீண்டும் கிடைத்திட சிறப்பு முகாம் நடத்த வேண்டும் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் வெள்ளத்தால் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் மீனவர்களுக்கான இழப்பு தொகையை 20 ஆயிரம் ஆகும் ஹெக்டர் பயிரிழப்புக்கு ரூபாய் 50,000 ஆகவும் கால்நடைகள் இழப்பீட்டுத்…
தமிழ்நாட்டில் கோவில்கள் தணிக்கையின் கீழ் வரவில்லை
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது:- கோவில்களை தணிக்கையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறை ஏன் இருக்க கூடாது என்பதற்கு இது ஓரு சான்று. இதற்கு எதிராக தமிழக பாஜக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளது. தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும். அரசின் நிலை மோசமாக உள்ளது. அதானியை முதலமைச்சர் சந்தித்ததாக பாஜக ஒரு போதும் கூறவில்லை. அதானியை சந்திப்பது குற்றமில்லை. முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்தித்ததாக பாஜக குற்றம்சாட்டுகிறது. முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்திக்கவில்லை என முதலமைச்சர் கூறுவாரா ? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்
முன்னாள் முதல்வர் உடல் எரியூட்டப்பட்டதுமுதல்வர் அமைச்சர்கள் திமுக காங்க காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலிபுதுச்சேரி டிசம்பர் 10 புதுச்சேரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ராமச்சந்திரனின் உடல் 21 குண்டுகள் வழங்க முழு அரசு மரியாதை உடன் நேற்று தகரம் செய்யப்பட்டதுபுதுச்சேரி முன்னாள் முதல்வர் எம் டி ஆர் ராமச்சந்திரன் 93 வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார் திமுக அதிமுக காங்கிரஸ் கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்து வந்தார் அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் திமுக காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் மேலும்…
விடுதலை சிறுத்தைகள் நிவாரண உதவி
ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு விசிக சார்பில் நிவாரண உதவி விசிக சார்பில் நிவாரண உதவி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் விசிக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ₹10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் திருமாவளவன
7 கி.மீ. வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்- வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும். இதனால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது. இருப்பினும் சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கடும் மழையை பெய்துவருகிறது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. திரிகோணமலையின் கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
