நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்: தமிழக முதல்வர் ஸ்டாலின்

நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை – அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதாவது, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள். எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள். நாம் தீர்மானத்தில்…

40 ஆண்டுகள் தனியார் வசம் இருந்தரூ. 100 கோடி மதிப்புடைய கோவில் நிலம் மீட்பு

அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ. செங்கழுநீர் அம்மன் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் 11.5 ஏக்கர் நிலம் முதலியார் பேட்டை வேல்டராம்பட்டில் 40 ஆண்டுகள் தனியார் குத்துகைதாரர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை மூலம் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரப்பட்டு குமார் 40 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்கை அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்(எ)தட்சிணாமூர்த்தியின் பெரும் முயற்சியால் வீராம்பட்டினம் திருப்பணிக்குழு மக்கள் குழு ஆகியோரின் ஆதரவுடன் சுமார் 100 கோடி பொறுமான நிலம் மீட்டக்கப்ட்டது. புதுச்சேரி வருவாய்த்துறை வட்டாட்சியர் பிரித்திவிராஜ், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்(எ)தட்சிணாமூர்த்தி கோவில் தனி அதிகாரி சுரேஷ், வீராம்பட்டினம் மக்கள் குழு, திருப்பணிக்குழு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டு வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது இதில் முதலியார்…

முதியோர் உதவித் தொகைக்கான அடையாள அட்டைஎதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்

புதுச்சேரி அரசின் மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 161 பயனாளிகளுக்கு முதியோர், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.இந்நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.இதில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் அமுதா, நல ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத் தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன்,…

10-ம் வகுப்பில் தோல்விஅடைந்த மாப்பிள்ளை வேண்டாம். திருமணத்தை நிறுத்திய உ.பி மணப்பெண்

உத்தரப்பிரதேசத்தில் மணமகன் தன்னை விட குறைவாக படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 17 ஆம் தேதி சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கும் 30 வயது இளைஞருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மணப்பெண் மறுத்துள்ளார். மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார். ஆகவே 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் கறாராக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மணமகளிடம் பல மணிநேரம் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடுமபத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர்.

அதானிக்கு அமெரிக்கா பிடிவாரண்ட் ஒப்பந்தங்களை அதிரடியாக ரத்து செய்த கென்யா

சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவை தொடர்ந்து கென்யாவில் அதானி நிறுவனம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கம், மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான செயல்முறையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கென்யாவின் நைரோபி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆப்பிரிக்காவின் பரபரப்பான விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக அதனை 30 ஆண்டுகள் குத்தகைக்கு…

ரஷியா-உக்ரைன் அணு ஆயுதபோர். மூலும் அபாயம். மக்களை போருக்கு தயார்படுத்தும் நாடுகள்..!

ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகள் தங்கள் மக்களிடம் போருக்கு தயாராக இருக்கும் படி அறிவுறுத்தி வருகிறது. சமீபத்தில் தான் ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஆயிரமாவது நாளை கடந்தது. இதனிடையே ஸ்வீடன், பின்லாந்து, நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் தங்களது நாட்டினருக்கு ஆபத்து காலத்தில் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளன. இது தொடர்பாக ஸ்வீடன் மில்லியன் கணக்கான துண்டுப்பிரசுரங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. அவற்றில் போர், இயற்கை பேரழிவுகள் மற்றும் சைபர் அல்லது பயங்கரவாத தாக்குதல்களுக்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பது பற்றிய தகவல்கள் இடம்பெற்று இருந்துள்ளது. பின்லாந்து பல்வேறு நெருக்கடிகளுக்கான தயார்நிலை குறித்த தகவல்களை சேகரிக்கும் வலைத்தளத்தை தொடங்கியுள்ளது. ஸ்வீடன் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் “இராணுவ அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மோசமான சூழ்நிலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்…

புதுவை பெத்துசெட்டிப்பேட்டை சிவசுப்பிரமணியர்‌ கோயிவில்‌ தங்க தேர்‌ செய்யும்‌ பணிஆளுநர் தொடங்கி வைத்தார்

புதுவை பெத்துசெட்டிப்‌பேட்டை சித்தி விநாயகர்‌,சிவசுப்பிரமணியர்‌ கோயிலில்‌ தங்க தேர்‌ செய்யும்‌பணி தொடக்க விழாஇன்று காலை நடந்தது.விழாவில்‌ சிறப்புஅழைப்பாளராக ஆளுநர் ‌கைலாஷ்நாதன்‌ கலந்துகொண்டார்‌. அவருக்குகோயில்‌ நிர்வாக அதிகாரிபிரபாகரன்‌ தலைமையில்‌பூர்ணகும்ப மரியாதையுடன்‌ வரவேற்பு அளிக்‌கப்பட்டது. தொடர்ந்துகோயிலில்‌ கவர்னர்‌ சாமிதரிசனம்‌ செய்தார்‌.அதன்‌ பிறகு தங்கதேர்‌ செய்யும்‌ பணியைகவர்னர்‌ கைலாஷ்தாதன்‌பூஜை செய்து பணியைதொடங்கிவைத்தார்‌. இந்ததங்க தேர்‌ 12 1/2 அடி உயரத்‌தில்‌ தேக்கு மரத்தில்‌ செப்‌பட்டு செப்புத்தகடு பதித்து, அதல்‌ 600 பவுன்‌ தங்க முலாம்‌ பூசப்‌ பட உள்ளது. இதன்‌ மதிப்பு 4‌ கோடியாகும்‌.நிகழ்ச்சியில்‌ வைத்‌தியநாதன்‌ எம்‌எல்‌ஏ, முன்னாள்‌ சபாநாயகர்‌சிவகொழுதந்து, திருப்பணிக்குழு தலைவர்‌ மணி,உறுப்பினர்கள்‌ திருநாவுக்கரசு, தண்டபாணி, மணி,மோகன்ராஜ்‌, முருகவேல்‌,அண்ணாதுரை, மதியழகன்‌, முருகவேல்‌, செல்வகணபது, ராமநாதசுவாமி, உட்பட ஊர்‌ பொதுமக்கள்‌ பலர்‌ கலந்துகொண்டனர்‌.

பள்ளி ஆசிரியை கொலை சம்பவம் மிகவும் மிருகத்தனமானது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிதியுதவியும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) த/பெ.முத்து அவர்கள் இன்று (20.11.2024) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை…

மகாராஷ்டிரத்தில் 58% வாக்குப்பதிவு!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 58.22% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. (மாலை 5 மணி நிலவரம்) அதிகபட்சமாக நக்சல் அமைப்புகளின் நடமாட்டம் மிகுந்த கட்சிரோலி பகுதியில் 69.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக மும்பையில் 49.07% வாக்குகளும் பதிவானது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று (நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 288 தொகுதிகளிலும் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 9.7 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். சுமாா் 6 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45.53 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. மாலையில் வாக்குப்பதிவு வேகம் அதிகரித்தது. இதனால் மாலை 5 மணி நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 58.22% வாக்குகள் பதிவானதாகத் தேர்தல்…

ஜார்க்கண்ட் தேர்தல்: மொத்த வாக்குப்பதிவு நிலவரம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 38 தொகுதிகளில் இன்று(நவ. 20) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 மாவட்டங்களிலுள்ள 14,218 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முன்னதாக, முதல்கட்டமாக வாக்குப்பதிவுகடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கண்ட இடங்களில் 67.59 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முதல்கட்ட தகவலின்படி தெரிய வந்துள்ளது. வரும் சனிக்கிழமை(நவ. 23) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய நாளில், ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ஆர்ஜேடி’ இணைந்துள்ள இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா…