சென்னை மாநகரில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நுங்கம்பாக்கத்தில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியான பிரசாத் மற்றும் அவரது கூட்டாளி பிரதீப் ஆகியோர் போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த மற்றும் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதிப் குமார் உடன் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், பிரதிப் குமார் உடனான தொடர்ப்பு குறித்து வினோஜ் பி செல்வம் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஒன்றாக படிக்கும்போது எனக்கும் பிரதீப்பிற்கும் பழக்கம் ஏற்பட்டது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை…
Category: முதன்மை செய்திகள்
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சாமியார் பிரதிபாநந்தா மீது பாலியல் வன்கொடுமை புகார்
இந்த வருடம், நாட்டின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஸ்வாமி பிரதிபாந்தா மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். பாரத் சேவாஸ்ரம சங்கத்தின் முர்ஷிதாபாத் பிரிவில் பிரதிபாந்தா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆசிரமத்தின் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறியும் பின்னர் மிரட்டியும் கடந்த 2013 முதல் தன்னை பலமுறை பிரதிபாந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2012 டிசம்பரில் பிரதிபாந்தாவை சந்தித்தார். பள்ளியில் வேலை தருவதாக உறுதியளித்து அவரை ஆசிரம விடுதியில் தங்க வைத்துள்ளார். பின்னர் தினந்தோறும் அப்பெண்ணை 5வது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.பின்னர் அப்பெண்ணுக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவதாக கூறி விடுதியிலிருந்து அனுப்பி வைத்தார். இடையில் 2013 இல்…
கிரீன் கார்டு மற்றும் விசா ரத்து செய்யப்படும் – அமெரிக்கா
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அவர்களின் கிரீன் கார்டு மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்ந்தோர் சேவைகள் அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில், “பயங்கரவாதத்தை ஆதரிப்பது உள்ளிட்ட தீவிரமான குற்றங்களில் ஈடுபபவர்களின் கிரீன் கார்டு மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும். அமெரிக்காவில் குடியிருப்பது என்பது நிபந்தனை உடனான சலுகையே தவிர உத்தரவாதமுள்ள உரிமை இல்லை” என்று பதிவிட்டுள்ளது.
புரி ஜெகந்நாதர் கோயிலில்ரத யாத்திரை கோலாகலம்!
ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். ஒடிஸா மாநிலம், புரியில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஜெகந்நாதா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை பிரசித்தி பெற்ாகும். நிகழாண்டு ரத யாத்திரை வெள்ளிக்கிழமை மிக விமா்சையாக நடைபெற்றது. இதையொட்டி, கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்ட மூன்று பிரம்மாண்ட ரதங்களில் எழுந்தருள்வதற்காக, ஜெகந்நாதா், அவரது அண்ணன் பலபத்திரா், தங்கை தேவி சுபத்திரை ஆகிய மூவரின் மரச்சிற்பங்கள், கோயிலில் இருந்து வேத மந்திரங்கள்-மேளதாளங்கள்-சங்கொலி முழங்க வெளியே எடுத்துவரப்பட்டன. சுமாா் 2 மணிநேரம் நடைபெற்ற இச்சடங்கின்போது, வெள்ளமென பக்தா்கள் சூழ சுவாமி சிற்பங்கள் எடுத்துவரப்பட்டு, ரதங்களில் அமா்த்தப்பட்டன. ரத யாத்திரைக்கு முந்தைய சிறப்பு மிக்க இந்நிகழ்வில் மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான்,…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர்
தமிழ்நாடு அரசு சார்பில் டைடல் பூங்காவானது பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கேயே பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள்,…
ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை – அமித் ஷாவுக்கு கனிமொழி பதில்
இந்தி பற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார். டெல்லியில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். தொடர்ந்து நேற்று ராஜ்பாஷா துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ‘இந்தி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் போன்றது’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதுபற்றி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “சரியாகச் சொன்னீங்க. அதையேதான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் எந்த அணுசக்தி பேசுவார்த்தையும் கிடையாது – ஈரான் அறிவிப்பு
அணு ஆயுதங்கள் பற்றி அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மறுத்துள்ளார். அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது தங்கள் நலன்களுக்கு உதவுமா என்பதை ஈரான் இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் அணுசக்தி வசதிகள் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தடைபட்ட நிலையில் இந்த மதிப்பீடு நடைபெற்று வருவதாகவும் அரக்ச்சி தெரிவித்தார்.ஈரான் அணுசக்தி திட்டம் முழுக்க முழுக்க சிவில் நோக்கங்களுக்காகவே என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதை அரக்ச்சி ஒப்புக்கொண்டார். இத்தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக…
புதுச்சேரி பொதுப்பணித்துறை பணி நீக்க ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு
எருமை மாடு மீது மழை பெய்வது போன்று வரையப்பட்ட பேனரை கையில் பிடித்துக் கொண்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை பணி நீக்க ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 2642 பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும்…
முருகன் தமிழ் கடவுள் என்றால் அவன் அப்பன் சிவனும் தமிழ் கடவுளாக தானே இருக்க முடியும்-திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:- முருகன் தமிழ் கடவுள் என்றால் அவன் அப்பன் சிவனும் தமிழ் கடவுளாக தானே இருக்க முடியும். முருகன் தமிழ் கடவுள் என்றால், சிவனும் தமிழனாக இருந்தால் பார்வதியும் தமிழச்சியாகத் தான் இருக்க முடியும். இவர்கள் இருவரும் கையிலாய மலையில் இருக்கிறார்கள் என்றால், கையிலாயம் தமிழகத்தின் தேசம் தானே. அப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களின் தேசம் தானே. எங்கள் தமிழன் சிவப்பெருமான் கையிலாயத்தில் குடியிருக்கிறான் என்றால், கையிலாய மலையும் தமிழனுக்கு சொந்தம். அதனால், கையிலாயம் முதல் கன்னியாகுமரி வரை தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு சிவப்பெருமானே ஒரு சான்று. சிவன் தமிழன், பார்வதி தமிழச்சி, முருகன் தமிழன் என்றால், கணேசனும் தமிழர் தானே. அப்போ, கணேசனை ஏன் தமிழ் கடவுள் என்று யாரும் கூறுவதில்லை? இவ்வாறு நாம் லாஜிக்கா கேட்டால் கோபம்…
ரூ.197 கோடியில் கட்டப்பட்ட பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் காட்பாடி வந்தார். அவருக்கு வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் வேலூர் நோக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வேலூர் புதியபஸ் நிலையம் அருகே வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மேயர் சுஜாதா மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.…