பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். அந்தவகையில், இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பொது செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப்பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் ஆகியோரை புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் பா.ம.க. இணை பொதுச்செயலாளராக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை டாக்டர் ராமதாஸ் நியமித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆகஸ்டு 10-ந் தேதி…
Category: முதன்மை செய்திகள்
புதுச்சேரிஅரியாங்குப்பம் தொகுதிசிமெண்ட் சாலைகளை மறுசீரமைப்பு பணி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கத்தில் விடுபட்ட பகுதிகளான சேத்திலால் நகர் மற்றும் முருங்கப்பாக்கம் பகுதிகளில் உள்ள சிமெண்ட் சாலைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி பங்கேற்று ரூ.34.35 இலட்சத்திற்கு பணிகளை பூஜை செய்து துவக்கி வைத்தார். . இந்த திட்டத்தின்மூலம் முருங்கப்பாக்கத்தில் விடுபட்ட பகுதிகளான சேத்திலால் நகர் மற்றும் பழைய முருங்கப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3000 மக்கள் பயனடைவர்.இந்நிகழ்ச்சியின் போது தலைமைப் பொறியாளர் வீரசெல்வம் , கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி , பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் வாசு, உதவிப்பொறியாளர் சுந்தரி, இளநிலைப் பொறியாளர்கள் தணிகைவேல் மற்றும் செல்வி தேவிபாரதி , ஒப்பந்ததாரர் பரஞ்சோதி , முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடம்
கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் (வயது 101), கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த மருத்துவமனை தரப்பில் இன்று (ஜூன் 25) வெளியிடப்பட்ட அறிக்கையில், அச்சுதானந்தனின் உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை எனவும், தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூத்த தலைவர் அச்சுதானந்தனை, கேரள முதல்வர் பினராயி விஜயன், நேற்று (ஜூன் 24) நேரில் சந்தித்தார். கடந்த 1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து, அச்சுதானந்தன் உள்ளிட்ட தலைவர்கள்…
புதுச்சேரி மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் சாலை அமைக்கும்பணி- சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்தார்
மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் காந்தி நகர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் ரூ.16.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகளை சட்டப்பேரவை தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார். தவளக்குப்பம் பகுதியில் உள்ள காந்தி நகர் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக காந்தி நகரில் கழிவுநீர் வாய்க்கால் வசதியை ஏற்படுத்தித் தந்தார். அதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காந்தி நகர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் புதிய தார் சாலை அமைப்பதற்கு அரசாணை பெற்று தந்தார். இதன்படி தார் சாலை அமைக்கும் பணிகளை துவங்கும் முகமாக பணிகளுக்கான பூமி பூஜை…
சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஃபால்கன்-9 ராக்கெட் இன்று 12.01 மணியளவில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டது. இது 28 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையமான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடையவுள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று 14 நாள்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றது. இதுதொடர்பாக மோடியின் எக்ஸ் பதிவில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா, ஹங்கேரி, போலந்து, அமெரிக்க வீரர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை நாங்கள் வரவேற்கிறோம். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச்…
இந்திய ரயில்வே ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம்! – தமிழக முதல்வர் ஸ்டாலின்
இந்திய ரயில்வே என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருகிற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அதன்படி, மெயில் ரயிலில் கி.மீ.க்கு 1 பைசாவும் விரைவு ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்த முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ரயில்வே அமைச்சக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ரயில்களின் பயணக் கட்டணத்தை வருகின்ற ஜூலை 1 முதல் உயா்த்தவும், ஆனால் 500 கி.மீ. வரையிலான 2-ஆம் வகுப்பு பயணத்துக்கு கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை. 500 கி.மீ.க்கு மேலான ஒவ்வொரு கி.மீ.க்கும் அரை பைசா வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், வேலூர் மற்றும் திருப்பத்தூர்…
வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்- தமிழக முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவா்- சமூகநீதிக் காவலா் என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வி.பி.சிங் நினைவைப் போற்றி, முதல்வா் வெளியிட்ட பதிவு: இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்!ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! என கூறியுள்ளார்.
10ம் வகுப்பிற்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு- சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார். அதன்படி, முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும், 2ம் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 முறை தேர்வு எழுதியவர்களில் அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்வில் மதிப்பெண் போதவில்லை எனக் கருதினால் 2ம் கட்ட தேர்வை எழுதலாம் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ECE சான்று பெற்ற ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்
ரைஸ் மோட்டோ அதன் சமீபத்திய ஹெல்டன் ஹெல்மெட் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹெல்டன் சீரிஸ் ஹெல்மெட் விலை ரூ.3,499 ஆகும். ஹெல்டன் ISI, DOT மற்றும் ECE தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஹெல்மெட் மூன்று விதமான அளவுகளில் கிடைக்கிறது. ரைஸ் ஹெல்டன் சீரிஸ் மாடல் மேம்பட்ட பாலிகார்பனேட் மற்றும் ஷெல் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் எடை 1,500 கிராம். இந்த ஹெல்மெட் அதிக வேகத்தில் இழுவையைக் குறைக்கும் ஏரோடைனமிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த முன்புற வென்ட்கள் ஹெல்மெட்டுக்குள் காற்றைச் செலுத்துகின்றன, அதே நேரத்தில் பின்புற எக்ஸாஸ்ட் வென்ட்கள் வெப்பத்தை வெளியேற்றி, உங்களை குளிர்ச்சியாகவும் கவனம் சிதறாமலும் வைத்திருக்கின்றன.இதில் இரட்டை டி-ரிங் லாக் வழங்கப்படவில்லை. ஆனால் மைக்ரோமெட்ரிக் சின்ஸ்ட்ராப் சரிசெய்யக்கூடிய தன்மையை உறுதி செய்கிறது. இதில் ஃபேக்டரி ஃபிட்…
பாலியல் உணர்வை தூண்டும் கொகைன்
தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வரும் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை இவர் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரது பின்னணியில் இருப்பவர்களை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள். இந்த இரண்டு போதைப்பொருள்களும் சென்னை மாநகரில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குகளில் நடைபெறும் விருந்துகளில் மதுவுடன் கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்கள் இரண்டுமே சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இளைஞர்களின் உடல் நலனை பாதிக்கும் வகையில்…