தக்காளியை வீசி போராட்டம் 100 பேர் கைது

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் மீது தக்காளியை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர் புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 2642 பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை இதனை கண்டித்தும்…

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நேருஎம்எல்ஏ பேட்டி

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 27-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப் போவதாக தனி மாநில அந்தஸ்து போராட்ட குழு தலைவர் நேரு தெரிவித்துள்ளார் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நெடுங்காலமாக புதுச்சேரி அரசு மத்திய அரசை வலியுறுத்தி 15 தீர்மானங்கள் சட்டப்பேரவையில் இயற்றி உள்ளது. ஆனால் மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்று கைவிரித்த நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 16 வது முறையாக தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் ரங்கசாமியும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில்,புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.,நேரு தலைமையில் 22-க்கும் மேற்பட்ட சமூக…

தி.மு.க. கூட்டணி ஒருபோதும் உடையாது- முத்தரசன்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி சேலத்தில் அதன் லோகோவை அறிமுகப்படுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் லோகோவை வெளியிட்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று திரும்ப திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல தலைவர்களும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.பா.ஜ.க. விரும்பும் கூட்டணி பலமான கூட்டணியாக அமையும், எதிரிகளால் எதிர்கொள்ள முடியாத கூட்டணியாக அமையும் என்று கற்பனையாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர பாரதிய ஜனதா…

இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன: அமெரிக்கா அதிபர் டிரம்ப்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டது. இருநாடுகளுக்கும் இடையில் போர் தொடங்கிய நிலையில், ஈரான் உடனடியாக அதன் தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், பரம எதிரிகளாக அறியப்படும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போரானது 12-வது நாளை எட்டியதுடன், இன்று (ஜூன் 24) காலை அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார். இருப்பினும், இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் இஸ்ரேல் பிரதமர்…

நடிகர் கிருஷ்ணாவுக்கு தமிழக காவல்துறை விசாரணைக்கு அழைப்பு

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத் உள்ளிட்ட பலா் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு போதைப்பொருள் வழங்கிய சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் என்ற பிரடோ, சா்வதேச போதைப் பொருள்கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜான் ஆகிய இருவரையும் கடந்த 19-ஆம் தேதி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனா். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மருத்துவப்…

கிரீஸ் தீவில் 3 நாட்களாக எரியும் காட்டுத் தீ

கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவில், 3-வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டின் நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படை வீரர்கள் போராடி வருகின்றனர். கிழக்கு ஏகன் தீவான சியோஸிலுள்ள, வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களின் மீது, தொடர்ந்து பரவி பல அடி உயரத்துக்கு எரியும் காட்டுத் தீயால், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தீவின் மத்திய நகர் பகுதியில் இந்தக் காட்டுத் தீயானது பரவியுள்ளதால், கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் அங்குள்ள ஏராளமான கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜூன் 24) காலை நிலவரப்படி, அங்கு பரவி வரும் தீயை அணைக்க சுமார் 444 தீயணைப்புப் படை வீரர்கள், 85 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் போராடி வருகின்றனர். மேலும், 11 ஹெலிகாப்டர்கள் மற்றும் 2…

குடியரசு துணைத் தலைவரை சந்தித்த மீனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா. இவர் 45 ஆண்டு காலம் சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவரது கணவர் உடல்நலக்குறைவால் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தார். மீனாவுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகா விஜயுடன் ‘தெறி’ படத்தில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள மீனா பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட மீனா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.முன்னதாக மத்திய அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள மீனாவுக்கு…

கேமரூனுக்கு இந்தியா! மீண்டும் 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைப்பு!

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா சார்பில் 1000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேமரூன் நாட்டின் வடக்கு மாகாணங்களில் கடந்த 2024-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்குத் தேவையான சுமார் 1000 மெட்ரிக் டன் அரசி மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை, கேமரூன் நாட்டுக்கான இந்தியாவின் உயர் ஆணையர் விஜய் கந்துஜா, அந்நாட்டு பிராந்திய நிர்வாக அமைச்சர் பால் அடாங்கா இன்ஞியிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து, விஜய் கந்துஜா வெளியிட்ட முகநூல் பதிவில், அவசரகாலத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்பின் அடிப்படையில், இந்த மனிதாபிமான உதவியானது மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் கேமரூன் நாட்டுக்கு இந்திய அரசு சார்பில் 1000 மெட்ரிக் டன் அளவிலான அரிசி…

அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது

புதுச்சேரி அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை இணைந்து நியாய ஒளி திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் விஜய் வரவேற்புரை வழங்கினார் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் நோக்க உரையாற்றினர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை தலைவர் மரக்கன்றுகள் நட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உதவி…

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது

ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக எக்ஸ் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுக்க அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் கோகைன் போதைப்பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தீங்கிரை என்ற படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் மற்றும் பிரசாத் இடையே தொடர்பு…