மகாராஷ்டிரா மாநில ஆளுநருடன் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சந்திப்பு

இந்த சந்திப்பின்போது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை போற்றும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் தாங்கிய தியாகச் சுவர்கள் 8 இடங்களில் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது புதுச்சேரி மாநில பாஜக செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் சக்கரா பவுண்டேஷன் நிறுவனர் ராஜசேகரன் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆர்எஸ்எஸ் நிர்வாகி . கஹன் மகோத்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.தொழிலாளர் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொழிலாளர் துறை சமரச அதிகாரி மீது புதுச்சேரி அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.

மத்திய நிதியமைச்சரின் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்க அரசுமுறைப் பயணம் தொழில்துறையில் புதிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்னபூர்ணா விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அன்னபூர்ணா உரிமையாளரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கையைதான் அவர் முன்வைத்தார். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

புதுச்சேரி மராட்டியர் நல சங்கம் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி புதுச்சேரியில் நகை செய்யும் தொழில் ஈடுபட்டுள்ள மராட்டியர்கள் நல சங்கம் சார்பில் அம்பலத்தடையார் தெரு மற்றும் பாரதி வீதியில், மும்பையில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ராஜ்பாக் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். அதைதொடர்ந்து 7 நாளான நேற்று ராஜ்பாக் விநாயகர் சிலை மற்றும் கடை, வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மராட்டிய இசை கச்சேரியுடன் ஆண்களும், பெண்களுக்கு ஆடிப்பாடியவாறே காந்தி வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று புதுச்சேரி கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரில் உள்ள கடலில் சிலைகளை கடலில் கரைத்தனர்.

“கர்நாடக காங்கிரஸ் அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை புதுச்சேரி காங்கிரஸ் எதிர்க்கிறது” – நாராயணசாமி பேட்டி

கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முயற்சிப்பதை புதுச்சேரி காங்கிரஸ் எதிர்க்கிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், லடாக் பகுதியை சீனா ஆக்கிரமித்து வருவதாக காங்கிரஸ் தெரிவித்ததை பிரதமர் மோடி மறுத்தார். ஆனால் தமிழக ஆளுநர் ரவி தற்போது, இந்தியாவில் 5,500 கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மோடி, ரவி இவர்களில் யார் சொல்வது உண்மை என கேள்வி எழுகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 950 இடங்களை நிரப்ப முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதில் எந்தெந்த தேதிகளில் விண்ணப்பம் கோரப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், விண்ணப்பம்…

“ஆணவம் மிக்க பாஜ அரசு”மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரத்தை சுட்டிக்காடி ‘ஆணவம் மிக்க பாஜ அரசு’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் அதனை காங்கிரஸ் கட்சியினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த வீடியோக்களை மேற்கோள் காட்டி அது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர், நமது மக்கள் பணியாளர்களிடம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை குறித்து ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஆனால் இந்த அரசு அவரது கோரிக்கையை ஆணவத்தோடு அணுகியுள்ளது. அவரை அவமரியாதை செய்துள்ளது. ஆனால், அவரைப் போன்ற சிறு முதலாளியாக இல்லாமல்…

ஆந்திராவில் லாரி பேருந்து மோதல்- 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரா மாநிலம் சித்தூரில் லாரி மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், மொகிலி காட் அருகே சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில், திருப்பதியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து, லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். நாயுடு சம்பவத்தை பார்வையிட்டார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஏனாமில் மீண்டும் வெள்ளம் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

ஏனம் கோதாவரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சபரி, கவுதமி, கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கிளை நதிகள் வழியாக ஆந்திரா ஏனாம் பிராந்தியத்தையொட்டியுள்ள பத்ராச்சலம், தவிலேஸ்வரம் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளில் தண்ணீர் இருப்பு பாதுகாப்பு அளவை மீறி விட்டதால் நீர், கோதாவரி ஆற்று வழியே கடலுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கடல் மற்றும் கோதாவரி ஆற்றையொட்டி உள்ள ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இங்குள்ள பாலயோகி பாலத்தை தாண்டி வெள்ள நீர் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் ஏனாமிற்கு 2வது வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கோதாவரியை ஆற்றில் வெள்ள பெருக்கை பார்வையிட்டு ஆய்வு செய்த ஏனாம் மண்டல…

அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்கச் செய்த வீடியோ வைரல் நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்

கோவையில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் விடியோ தற்போது அகில இந்திய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. கோவையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய விடியோ கடந்த இரு நாள்களாக டிரெண்ட் ஆனது. இந்த நிலையில், கேள்வி கேட்ட சீனிவாசனை அழைத்து நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கேட்கச் செய்ததுடன், அந்த விடியோவையும் பாரதிய ஜனதா தரப்பிலிருந்து வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விடியோவுடன் இணைந்தே கேள்வி கேட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்ததாக, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோவையில் மத்திய…

மன்னிப்பு கோரிய தொழிலதிபரின் வீடியோ வெளியானதுமன்னிப்பு கேட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை

ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டது பதிவாகி உள்ளது. இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,தனிப்பட்ட இந்த சந்திப்பு குறித்த வீடியோவை எங்கள் நிர்வாகிகள் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். தமிழக பாஜக சார்பில் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சீத்தாராம் யெச்சூரி மறைவு முதல்வர் ரங்கசாமி இரங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மா.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு, இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான மா.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்திய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்த சீத்தாராம் யெச்சூரி, தனது வாழ்நாள் முழுதும் பொதுவுடைமை சித்தாந்தங்களை கடைப்பிடித்து, அதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர். ஏழை எளிய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பார்லி., உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வந்த அவரது மறைவு தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்த இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.