முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது. மாநாட்டில், பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள பதிவில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும். பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுகவுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை திராவிடத்தை அழிக்க முருகா வா என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத் தான் யாராவது அழித்துவிட முடியுமா? திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி! மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த…
Category: முதன்மை செய்திகள்
சேலத்தில் குழந்தைக் கடத்தல் கும்பல் கைது
கொங்கு மண்டலத்தில் குழந்தைகளை வாங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் சேலத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் நகர ஜோதிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் 43. இவர் மீது பண மோசடி புகார் தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் ஈரோட்டில் இருந்து ஆண் குழந்தையை வாங்கி வந்து சேலத்தில் விற்றதும் அதற்கு அவரது மனைவி நாகசுதா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அத்துடன் குழந்தையை வாங்கி கொடுத்த ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன் பானு, பத்மாவதி ஸ்ரீதேவி ஆகியோர் சேர்ந்து இதுவரை மோகன்ராஜ் மூலம் மூன்று குழந்தை விற்று இருப்பதும் மூன்று ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இன்று அதிகாலை மோகன்ராஜ், நாகசுதா, பர்வீன் பானு, பத்மாவதி, ஜனார்த்தனன் ஸ்ரீதேவி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை…
பசுமை பூங்காவாக மாறும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம்
ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், ‘வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்’ என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது. மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலர், சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை அமைக்கலாமா…
ஜெகன் மோகன் கார் டயரில் சிக்கி உயிரிழந்த தொண்டர்
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கான்வாயைப் பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில், செலி சிங்கையா மலர்கள் தூவ முயன்றபோது தவறி விழுந்து, ஜெகனின் காரின் முன் வலது சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார். முதலில், விபத்து ஜெகனின் கான்வாயில் உள்ள மற்றொரு வாகனத்தால் நடந்ததாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால்,…
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் . லட்சுமி சௌஜன்யா, தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் இவ்வாரம் மக்கள் மன்றம் நிகழ்ச்சி காரைக்கால் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர். லட்சுமி சௌஜன்யா. தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மரி கிறிஸ்டியன் பால், சிறப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் குமார், உதவி ஆய்வாளர்கள் முருகன், குமரன் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இன்றைய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது புகார்களை எழுத்து வடிவமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அளித்தனர். மேலும் மது அருந்திவிட்டு தந்தை வீட்டில் உள்ள அனைவரையும் அடித்து துன்புறுத்துவதாகவும், முதியவர்களிடம் நகை…
இஸ்ரேல் – ஈரான் போர்: தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு
இஸ்ரேல் – ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர், இஸ்ரேல் – ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட ஆணையிட்டுள்ளார். இந்த சூழலில் ஈரான் நாட்டிலிருந்து இந்திய வெளியுறவுத் துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.…
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. மறைவு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.துகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான T.K. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் அமுல் கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை…
புதுச்சேரியில் 11வது சர்வதேச யோகா தின விழா
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை, ஆயுஷ் இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் ஆகியவை இணைந்து நடத்திய 11வது சர்வதேச யோகா தின விழா – 2025, கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவிற்கு தொடக்கத்தை வழங்கினர். தொடர்ந்து யோகாசனம் பயிற்சி செய்தனர்.
தர்மாபுரி ஸ்ரீ அங்காளம்மன்ஆலய திருப்பணிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடைஎதிர்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் வழங்கப்பட்டது
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட தருமாபுரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இந்திராநகர் திமுக பிரமுகர் பசுபிக் சங்கர் ஆலய திருப்பணிக்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையை, மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான . சிவா முன்னிலையில் வழங்கினார். தொடர்ந்து ஆலய திருப்பணிகளை பார்வையிட்டார். தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள் ஆலய அறங்காவலர் குழு தலைவர் முருகன், நிர்வாகிகள் தன்ராஜ், சரவணன், ரகு, குமரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர்கள் வடிவேலு, சக்திவேல், தியாகராஜன், நிர்வாகிகள் ஆறுமுகம், பிரபு, சுப்பிரமணியன், செல்லதுரை, தேவநாதன், பாலு, பாஸ்கர், பூபாலன், ஜெகதீஷ், கோதண்டம், ராஜா, ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ரூ. 24.24 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்
தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் சார்பில் 33.23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 36 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, சுற்றுலாத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் சார்பில் 4.58 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 1,512 பயனாளிகளுக்கு 24.24 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், வருவாய்…
