புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவகணபதி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை போக்க மின்துறையின் மூலம் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் 200 KVA திறனுடைய புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி திருமலை வீதியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். இதில், மின்துறை உதவிப் பொறியாளர் முருகேசன், இளநிலைப் பொறியாளர் பாலமுருகன், சிவகணபதி நகர் ஊர் முக்கியஸ்தர்கள் தங்கராசு, வேதாச்சளம், சசிகுமார், பாபு, சண்முகம், குருசாமி, முருகையன், கந்தசாமி, வெங்கடேசன், கண்ணையன், சரவணன், கார்த்திகேயன், உதயகுமார், கன்னியப்பன், ஜாபர், தனக்கோடி, வீரமணி, கனகராஜ், பிரகாஷ், பாஸ்கர், சீதாராமன், வடமலை,…
Category: முதன்மை செய்திகள்
பிரதமர் மோடி செப்டம்பரில் ஓய்வு அறிவிக்கனும்.. இல்லை என்றால் வேறு வழி -சுப்ரமணிய சுவாமி
பாஜக மூத்த தலைவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்தப்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார். சமீபத்தில் பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும் என்று கடுமையாக விமர்சனத்தை முனைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கட்சி விதிப்படி மோடி, 2025 செப்டம்பர் 17 அன்று தனது 75 வது பிறந்தநாளில் அரசியலில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை என்றால் வேறு வழிகளில் அவர் தனது பிரதமர் நாற்காலியை இழக்கக்கூடும் என்று பதிவிட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 75 வயதில் ஓய்வு பெரும் விதி மோடிக்குப் பொருந்தாது என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில் சுப்ரமணிய…
3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை- முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டின் தொழில் துறை வரலாற்றிலும், வளர்ச்சி வரலாற்றிலும் இது மிக மிக முக்கியமான நாள்! நம்முடைய பொருளாதாரத் திறனை உலகிற்கு எடுத்துக் காட்டும் நாளாகவும், தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உணர்த்தும் நாளாகவும் இந்த நாள் அமைந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். மாநாடுகளை நடத்து வதைவிட, அந்த மாநாடுகள் மூலமாக எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தோம் என்பதில்தான்,…
மும்பை பத்லாபூரில் சிறுமிகள் பலாத்காரம் சம்பவம் கொந்தளித்த மக்கள் மீது தடியட- பதற்றம்
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, நகரம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளியின் பணியாளர்களில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோ வைரலானது. ரெயில்வே வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் காரணமாக உள்ளூர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பத்லாபூர்வழியாக செல்லும் 10க்கும் மேற்பட்ட ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட…
இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தத்தை உறுதி செய்ய முடியவில்லை நாடு திரும்பிய ஆண்டனி பிளிங்கன்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்காமல் உள்ளது. காசா மக்களை பாதுகாப்பதற்கும், பிணைக்கைதிகளை மீட்பதற்கும் போர் நிறுத்தம் அவசியம் என இந்த மூன்று நாடுகள் கருதுகின்றன. இதனால் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை தயார் செய்தது. இந்த பரிந்துரைகளை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்ற அவர், இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவின் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அதன்பின் மத்தியஸ்தராக விளங்கும் எகிப்து, கத்தார் நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினர்…
தீவிபத்தில் பாதிக்கப்ட்டவர்களுக்கு நிதியுதவி எம்எல்ஏ வழங்கினார்
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டு வீட மற்றும் உமைகளை இழந்த நபர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 3 நபர்களுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்
நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 1991-ம் ஆண்டு முதல் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்தேன். என்னுடைய கடும் உழைப்பால் முன்னேறி, 300 படங்களுக்கு மேல் நடித்து, பிரபல நகைச்சுவை நடிகரானேன். இன்றளவும் என்னுடைய நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்மனுதாரர் நடிகர் சிங்கமுத்துவும், நானும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஒன்றாக பல படங்களில் நடித்தோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், புகழையும் தந்தது. ஒரு காலக்கட்டத்தில், எனக்கு கிடைக்கும் வரவேற்பு சிங்கமுத்துவுக்கு கிடைக்காததால், அவருக்கு பொறாமை உண்டானது. அதனால், என் மீது பகை கொண்டார். 2015-ம் ஆண்டுக்கு பின்னர், என்னைப் பற்றி மோசமாக பேசத் தொடங்கினார். அதனால், அவர் இல்லாமல் நடிக்கத் தொடங்கினேன். இதற்கிடையில் தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய ஒரு நிலத்தை…
புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவிப்பு
புதுவை தமிழ் சங்கத்தில் தெய்வப்புலவர் ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி மாலை அணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழி குழு தலைவருமானநேரு(எ)குப்புசாமி . தெய்வப் புலவர் திருவள்ளுவர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.இந்நிகழ்ச்சியின் போது புதுவை தமிழ் சங்கத் தலைவர் கலை மாமணி முனைவர் வி. முத்து மற்றும் தமிழ்ச்சங்க செயலாளர் சீனு.மோகன்தாஸ் மற்றும் புதுவை தமிழ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
டெல்லி விடுதியில் நர்சிங் மாணவி மர்ம மரணம்
டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 22 வயது நர்சிங் மாணவி மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் உள்ளே பூட்டப்பட்டிருப்பதை கண்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது நர்சிங் மாணவி படுக்கையில் உயிரிழந்து கிடந்தார். அப்போது பக்கத்திலிருந்து சீலிங் பேனில் 2 ட்ரிப்ஸ் பாக்கெட் தொங்கவிடப்பட்டு அவளது கையில் ஊசி சொருகி ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. தங்கும் விடுதியில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரடி பணிநியமன முறையை ரத்துகடும் எதிர்ப்பால் மத்தியஅரச முடிவு
மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு முதல் நேரடி பணிநியமனம் என அரசுப்பணியில் அல்லாத துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பா.ஜ.க. அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, நேரடி பணிநியமன முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர்…
