புதிய குற்றவியல் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

புதிய குற்றவியல் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கமலா மார்கெட் காவல் நிலையம் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப்பிரிவு…

மகாராஷ்டிராவில் முதல் பெண் தலைமைச் செயலாளர் சுஜாதா சவுனிக் பொறுப்பேற்பு

மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா சவுனிக் இன்று பதவியேற்றார். 64 ஆண்டுகால வரலாற்றில் மகாராஷ்டிராவின் முதல் பெண் தலைமைச் செயலாளர் என்ற பெருமையைப் பெற்றார். தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற நிதின் கரீருக்குப் பிறகு 1987 பேட்ச்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சவுனிக் இன்று பதவியேற்றார். இவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒரு வருடம் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மும்பையில் உள்ள மாநிலச் செயலகமான மந்த்ராலயாவில் நடைபெற்ற விழாவில் சவுனிக்கிடம் கரீர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமைச் செயலாளராக பதவி உயர்த்தப்படுவதற்கு முன்பு, சவுனிக், அவரது கணவர் மனோஜ் சவுனிக் முன்னாள் மாநில தலைமைச் செயலாளரும் ஆவார். இவர், மாநில உள்துறைத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்தார். சுகாதாரம், நிதி, கல்வி,…

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் உபா சட்டத்தின் கீழ் 2 பேரை என்ஐஏ கைது செய்தது

தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பீகாரில் 11 நாட்களில் 5-வது பாலம் இடிந்து விழுந்தது: பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் குற்றச்சாட்டு

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மாதேபூர் நகரில் பூதாஹி ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. மதுபானியை சுபால் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் 75 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையின் மேற்பார்வையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தன.இந்த நிலையில் இந்த பாலம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கனமழையால் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து நீரோட்டம் அதிகரித்ததால் பாலம் இடிந்து விழுந்ததாகவும், நீர்மட்டம் குறைந்த பிறகு பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பீகாரில் கடந்த 11 நாட்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும். 18-ந் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட…

எங்களுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்-ஹேமந்த் சோரன் ஆவேசம்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கைதுசெய்தது. உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து அவர் நேற்று வெளியில் வந்தார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவரை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் வாழ்த்து கோஷமிட்டு வரவேற்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்று கட்சித் தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: எங்களுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. ஜார்க்கண்டில் இருந்து காவி கட்சி ஒழிக்கப்படும். இந்தியாவின் சமூக கட்டமைப்பை அழிப்பதில் பா.ஜ.க.வுக்கு நிபுணத்துவம் உள்ளது.2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வினருக்கு பாடம் புகட்டினார்கள். ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என…

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் “நன்றி தங்கச்சி” சென்னை மெரினா காட்சி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் பெண் ஒருவரிடம் “பேல் பூரி” வாங்கிய யூடியூபர், ஓகே… தாங்க்யூ என்று கூறினார். what do you say for like sister in… என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் “தங்கச்சி” என்று கூறுகிறார். younger sister is தங்கச்சி என்று கேட்கிறார். அந்த பெண்ணும் ஆம் என்று கூறுகிறார். இதையடுத்து “நன்றி தங்கச்சி” என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண்ணும் “நன்றி அண்ணா” என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார். தான் கூறியது சரியா என்று கேட்கிறார். அப்பெண்ணும் சரி என்கிறார். அவர் வாங்கியதின் பெயர் என்ன என்று கேட்கிறார். அப்பெண் மசாலா பொரி என்று கூறுகிறார். அந்த பெண்ணின் பெயரை கேட்கிறார். வெண்ணிலா என்று அப்பெண் பதிலளிக்கிறார். வெண்ணிலாவின் “பேல் பூரி” என்று சுவைக்கிறார். இந்த…

கர்நாடகத்தில் சோகம் சரக்கு டிரக் வாகனம் மீது பயணிகள் சென்ற மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் இன்று அதிகாலை புனே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு டிரக் வாகனம் மீது பயணிகள் சென்ற மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டத்தில் சாவாடத்தி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 13 பேகர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் இன்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை அதிகாலை புனே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு டிரக் வாகனம் மீது பயணிகள் சென்ற மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம்…

முடிவுக்கு வந்தஃபாக்ஸ்கான் சர்ச்சை

திருமணமான பெண்களை பணியமர்த்தவில்லை என்ற குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது. ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்த செய்திகளின் பின்னணியில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் கேட்டிருந்தது. இந்நிலையில், ஃபாக்ஸ்கான் இந்தியா இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விளக்கத்தில், “நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள். மொத்தப் பெண் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் திருமணமானவர்கள் என்பதே இதன் அர்த்தம். அதுமட்டுமில்லாமல், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 70% பெண்களே. 30%…

மகாராஷ்டிரா பள்ளி பாடபுத்தங்களில் மனுதர்ம சாஸ்திரங்கள் சேர்க்கப்படாது அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தகவல்

மகாராஷ்டிரா பள்ளி பாடபுத்தங்களில் மனுதர்ம சாஸ்திரங்கள் சேர்க்கப்படும் என்று தகவலை அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மனுதர்ம சாஸ்திரத்தை மஹாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை. மனுதர்ம சாஸ்திரத்திற்கு மகாராஷ்டிராவில் இடமில்லை. மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை. இது அம்பேத்கர், பூலே போன்றோர் பிறந்த பூமி. இவர்களின் முற்போக்கு சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா” என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், துணை முதலமைச்சருமான அஜித் பவார் இவ்வாறு பேசியிருப்பது பாஜக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் கனமழை வெள்ளகாடானது திப்ருகர் நகர்

அசாமில் பெய்து வரும் கனமழைக்கு பல மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோபிலி, பாராக், குஷியாரா உள்ளிட்ட பல முக்கிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டியுள்ளது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அசாமின் திப்ருகர் நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதால் வெள்ள பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.