புதுவை வீராம்பட்டிணத்தில் ரூ. 46.16 கோடியில் புதிய மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணி-முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி.நவ.4- புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் அரியாங்குப்பம், அடுத்த வீராம்பட்டினம் மீனவர் கிராமத்தில் தேங்காய்திட்டு அருகே அரிக்கன்மேடு சுற்றுலா தளத்தை ஒட்டியுள்ள மீன்பிடி துறைமுக கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசின் நிதி வழங்கும் திட்டமான பிராதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை முலம் ரூபாய்.53 கோடியே 38 லட்சம் அனுமதி பெறப்பட்டது. அதில் ரூ.46 கோடியே 16 லட்சம் செலவில் கட்டிட பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்ற தட்சிணாமுர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன், பொதுப்பணித்துறை செயலர் ஜெய்ந்தகுமார், தலைமைப்…

பாவேந்தர் பாரதிதாசனார் மகனார்தமிழறிஞர் மன்னர்மன்னன் பிறந்த நாள் விழா !

பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் “பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழா”பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.பாரதிதாசன் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் 97 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுப்“புரட்சிக்கவிஞர் போற்றிய மைந்தர் மன்னர்மன்னன்!” என்ற தலைப்பிலான 72 ஆவது மாத விழாவுக்குஅறக்கட்டளைத் தலைவர் தமிழறிஞர் கோ. பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த தமிறிஞர் மன்னர்மன்னன் திருவுருவப் படத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர், வி.பி. சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ரெவே சொசியால் சங்கத் தலைவர் துபாய் குழந்தை, திண்டிவனம் தாகூர் கல்விச் சங்க நிர்வாகிகள் ரவீந்திரநாத், தேவேந்திரநாத், கொஜிரியோ கராத்தே சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், காந்திநகர் நல வாழ்வுச் சங்கத்தினர், கலை பண்பாட்டு துறை இயக்குநர் வி. கலியபெருமாள் கலை முதியோர் இல்லம்…

புதுச்சேரியில் கல்லறை திருநாளைமுன்னிட்டு  கிறிஸ்தவர்கள்  வழிபாடு

.புதுச்சேரி.நவ.2-புதுச்சேரியில் கல்லறை திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையில் மலர் துாவி வணங்கினர்.கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் கல்லறை திருவிழா, இன்று நடந்தது.இதை முன்னிட்டு, முன்னோர்களின் கல்லறையை, அவரது குடும்பத்தார் பூக்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தேவாலயங்களில், சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையும் நடைபெற்றது.புதுச்சேரியில் உப்பளம், நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, வில்லியனுார் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறைகளில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடி, முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி விடுதலை நாள் விழாமுதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார்.

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை திடலில் நடைபெற்ற புதுச்சேரியின் விடுதலை நாள் விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். புதுச்சேரியின் விடுதலை நாள் விழா ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். கடற்கரை காந்தி சிலை திடலில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.பின்பு கலைக்குழுவினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் புதுச்சேரி விடுதலை நாள் காரைக்கால், ஏனாம், மாஹே பகுதியிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுசுமார் 300 ஆண்டுகளாக பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த புதுச்சேரிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம்…

புதுவை மணவெளி தொகுதியில் மருத்துவமுகாம்சபாநாயகர் தொடங்கிவைத்தார்

மணவெளி சட்டமன்ற தொகுதி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற இலவச பொது மருத்துவம் பல் மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாமினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் தொடங்கி வைத்தார். இந்த மாபெரும் மருத்துவ முகாமில் பிவேல் மருத்துவமனை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் Smile and Glow ஆசிய மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்தார் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

கவிஞர் புதுவைச் சிவம் பிறந்த நாள் விழா

புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காமராஜ் சாலை-சித்தன்குடி சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். பொதுப்பணித்துறை அமைச்சர். இலட்சுமிநாராயணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரியில் இலவச அரிசி சர்க்கரை வழங்கல் நிகழ்ச்சி ஆளுநர் முதல்வர் தொடங்கிவைத்தனர்

புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில்நியாய விலைக்கடைகள் திறப்புமற்றும் தீபாவளி பண்டிகை பரிசு பொருள் இலவசஅரிசி – சர்க்கரை வழங்கும் தொடங்க விழா மேட்டுப்பாளையம்தொழிற்பேட்டை சாலையில் நடைபெற்றது. இதில் துணைநிலைஆளுநர் கைலாஷ்தநாதன் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு பயனாளிகளுக்கு தலா 10 கிலோஅரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கி தீபாவளிபண்டிகை பரிசு பொருட்கள் வழங்குவதைதொட ங்கி வைத்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சட்ப்பேரவைத்தலைவர் செல்வம் அமைச்சர்கள், அமைச்சர்கள்நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜெயக்குமார்,திருமுருகன், சாய ஜெ சரவணன்குமார், துணைசபாநாயகர் ராஜவேலு மற்றும் எம்..எல்.ஏ.க்கள்ஏகேடி ஆறுமுகம், கேஎஸ்பி ரமேஷ், சிவசங்கர்,தலைமைச்செயலர் சரத்சவுகான், குடிமைப்பொருள்வழங்கல் மற்றும் நுகர்வோர் வழங்கள்துறைசெயலர் முத்தம்மா, இயக்குதர் சத்தியமூர்த்திஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் தோன்றிய நீல கடல்

புதுச்சேரி ராக் கடற்கரையில், நேற்று கடல் அலை நீல நிறத்தில் ஜொலித்தபடி கரையை முட்டி மோதி கரைந்தன. இந்த அழகிய காட்சியை மக்கள் வியப்புடன் பார்த்து வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதேபோல் மரக்காணம் பகுதிகளிலும் கடல் அலை நீல நிறத்தில் நேற்று ஜொலித்தது. இதுகுறித்து கடல் வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவர் கூறியிருப்பதாவது:- கடல் என்பது அதிக அளவு உயிரினங்கள் உள்ள பல்லுயிர் நிறைந்த பகுதி. இதில் நம் கண்களுக்கு தெரியாத பாக்ட்டீரியா மற்றும் பாசி போன்ற உயிரினங்கள் அதிகம் உள்ளன. அதுபோன்று கடலில் வாழும் ஒரு செல் உயிரியான ‘டைனோ ப்ளாச்சு லேட்’ வகையை சேர்ந்த ‘நாட்டிலுக்காசின்டிலன்ஸ்’ எனும் மிதவை நுண்ணுயிரியால் இப்போது கடல் நீல நிறத்தில் ஜொலித்து வருகிறது.…

தீபாவளி பண்டிகை- புதுவையில் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அக்.30 முதல் நவ.3-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை விடும் நிலையில் புதுவை விடுதலை நாள் உள்ளிட்ட 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.2 கல்லறை நாள், நவ.3 ஞாயிறு என மொத்தம் 5 நாட்கள் தீபாவளியை முன்னிட்டு புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்.31-ந்தேதி தீபாவளி பண்டிகை, நவ.1 வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளதால் சனி, ஞாயிறு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

தென் மண்டல அளவில் 3ஆம் இடம் பிடித்த புதுச்சேரி வாலிபால் அணிக்கு எம்எல்ஏ தட்சணாமூர்த்தி பாராட்டு

புதுச்சேரி.அக்.19-காந்திராம் நற்பணி இயக்கம் மற்றும் புதுவை அமெச்சூர் வாலிபால் சங்கம் இணைந்து தெண்மண்டல பள்ளிகளுக்கிடையிலான வாலிபால் போட்டி உப்பளம் உள் விளையாட்டு அரங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது, இதில் தென்மண்டல 5 மாநிலங்களிலிருந்து 25 மாணவர் அணியினரும் 15 மாணவியர் அணியினர் என மொத்தம் 40 அணிகள் பங்கு பெற்று 600 மாணவ-மாணவியர்கள் கலந்துகொண்டு விளையாடினர். 13 வயது முதல் 19 வயது வரை 5 பிரிவுகளின் கீழ் லீக் முறையில் நடத்தப்பட்ட போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடமும் கர்நாடகா இரண்டாவது இடமும் புதுச்சேரி மூன்றாவது இடமும் பிடித்தன, வெற்றபெற்ற அணிகளுக்குஅதற்கான வெற்றி கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது, இந்த நிலையில் மூன்றாம் பரிசு பெற்ற புதுவை அணியினரை இன்று காந்திராம் நற்பணி இயக்கத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி…