புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்துார் அருகே உள்ள மணமேடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கலையரங்கம், அங்கன்வாடி மையம், கழிப்பறை உள்ளிட்டவைகள் உள்ளது. மேலும், அங்குள்ள காலி இடத்தை, அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு திடலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், அங்கு ஒரு முருகர் சிலை வைத்து கொட்டகை கட்டி கோவிலாக வழிபட்டு வருகின்றனர். இதற்கு, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மேலும் சிலர் அங்கு வீடுகள் கட்டி ஆக்கிரமித்தனர். இதனால், அங்கு விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இது தொடர்பாக, அப்பகுதி மக்களிடையே பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகனது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வருவாய் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், சப் கலெக்டர் சோம…
Category: புதுச்சேரி
புதுச்சேரி சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக்குழுகூட்டம் தலைமைசெயலகத்தில் நடந்தது
புதுச்சேரி சட்டப்பேரவையின் மதிப்பீட்டு குழு கூட்டம் சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலையில் மதிப்பீட்டு குழு தலைவர் நாஜிம்எம்.எல்.ஏ தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் புதிய பணிகள் தொடங்குவது குறித்தும் காலத்தோடு பணிகளை முடிப்பது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள பணிகளை தொடர்ந்து புதிய பணிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு செயலர் மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குனர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்த மதிப்பீட்டு குழு கூட்டத்தில் முதலமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், அரசு கொறடா ஏ கே டி ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே எஸ் பி ரமேஷ், சம்பத் , ரிச்சர்ட் ஜான்குமார் , பி…
புதுவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முதல்வர் ரங்கசாமி ஆசிரியர் தின வாழ்த்து
புதுச்சேரி,செப்.5-வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்த வேண்டும் ஆளுநர் கைலாஷ் நாதன் வாழ்த்துபுதுச்சேரி துணைநிலைஆளுநர் கைலாசநாதன் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சமுதாய அளவில் பெற்றோர்களுக்கும் தெய்வத்திற்கும் இணையான மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கத்தையும் போதித்து நல்ல சமுதாயத்தை உருவாக்க அர்ப்பணிப்போடு கடமையாற்றும் ஆசிரியர்கள் உயர் நிலையில் வைத்து போற்றப்படுகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களின் கடமை உணர்வையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி போற்றும் நாளாக இந்த ஆசிரியர் தினம் அமைகிறது. சிந்தனை வளமும் செயல் திறமும் மிகுந்த வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும், என்று கேட்டுக்கொண்டு ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல்வர் ரங்கசாமியை விடுத்துள்ள ஆசிரியர் தின வாழ்த்து: புதுச்சேரி…
புதுச்சேரி ஒதுக்கீட்டில் ஜிப்மரில் வெளிமாநில மாணவர்களுக்கு வழங்கிய 9 இடம் ரத்து சபாநாயகர் பேட்டி
இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது- புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி, காரைக்காலில் 250 இடங்கள் உள்ளன இதில் 64 இடங்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரட்டை குடியுரிமை பெற்று பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் மத்திய அரசை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டமாணவர்களை நீக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி தற்போது அந்த 9 மாணவர்களின் பெயர்களையும் தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதனால் ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் 64 பேர் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. அனைவருக்குமான முதலமைச்சரின் மருத்துவ நிதியுதவி திட்டம் கொண்டுவரப்படும் (ரூ.5லட்சம் வரை சிகிச்சைபெற) என்று…
புதுவை தவளகுப்பம் அடுத்தகாட்டுக்குப்பம் மராட்டாற்றில் புதிய மேம்பாலத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
புதுச்சேரி கடலூர் சாலையில் தமிழக பகுதியான ரெட்டிச் சாவடிக்கும் காட்டு குப்பத்திற்கும் இடையே மலட்டாற்றின் குறுக்கே பாலமுள்ளது இது சிறிய பாலமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வந்தது. இதனால் இப்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதைபடுத்து புதுச்சேரி பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு சார்பில் ரூபாய் 5 கோடியே 25 லட்சம் செலவில் மலட்டாற்றில் புதிய பாலம் கட்ட கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். தற்பொழுது பணிகள் முடிவடைந்த நிலையில் பாலத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது இதில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை நடிகர் விஜய்சேதுபதி சந்தித்தார்
இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரைன்’ படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற நடிகர் விஜய் சேதுபதி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக ஆளுநர் கைலாசநாதனை சந்தித்த விஜய் சேதுபதி அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், நடிகர் விஜய் சேதுபதிக்கு, ஆளுநர் கைலாசநாதன் சால்வை அணிவித்தார். இவர்கள் இருவரும் சுமார் அரை மணி நேரம் உரையாடினார்.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவிகளுக்கு மழை அங்கி அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்
புதுச்சேரி அரசு கல்வித் துறை சார்பில், மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ், சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் மழைஅங்கி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிளஸ்1 வகுப்பு பயிலும் 85 மாணவிகளுக்கு மடிக்கணினி, பத்தாம் வகுப்பு பயிலும் 64 மாணவிகளுக்கு மழைஅங்கி வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் புவனேஸ்வரி, தலைமை ஆசிரியை குளோதின் மேம்பொலின், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் அதிமுகவினர் அண்ணாமலை படத்தை எரித்து அன்பழகன் தலைமையில் போராட்டம்
தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமியை தரக்குறைவாக பேசிய பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து, நேற்று புதுச்சேரி, உப்பளத்தில் அ.தி.மு.க.,வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அ.தி.மு.க.,வினர் அண்ணாமலை உருவப்படத்தை தீயிட்டு எரித்து கோஷமிட்டனர். இது குறித்து அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது: அ.தி.மு.க, பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி பேச, பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. கடந்த, 2021ம் ஆண்டு, ஜூலை 8ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவராக பதவி ஏற்ற அண்ணாமலை, கடந்த 2019ம் ஆண்டு அரசு அதிகாரியாக பணியில் இருந்தவர். மறைந்த மற்றும் தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
புதுச்சேரியில் 15 ஆண்டுகள் குடியிருந்தோர்க்கு மட்டுமே அரசு வேலை நேரு எம்எல்ஏ முதல்வரிடம் கோரிக்கை
புதுச்சேரி.ஆக.28- அபுதுச்சேரியில் 15 ஆண்டுகள் குடியிருந்தோர்க்கு மட்டுமே அரசு வேலை நேரு எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்பினர் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரசிதழ் பதிவு பெறாத (குரூப் பி) பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு நடைபெறும் தேர்வுகள் புதுச்சேரி காரைக்காலில் வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். குரூப் பி பணியிடங்களுக்கு புதுச்சேரி அரசே தேர்வுகள் நடத்தி பணியிடங்களை நிரப்பிக் கொள்ள முடிவெடுத்த புதுச்சேரி முதல்வருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். புதுச்சேரி அரசின் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத் துறை 22 8 2024 அன்று 256 அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பிலுவினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் தயார் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நடைமுறைக்கு எதிரானது, இது தாய் மொழியான தமிழை புறக்கணிக்கும் செயலாக உள்ளது.…
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.பொதுமக்களுக்கு ஐயப்பன் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவி
கடலூர் ஒன்றியம் மதலப்பட்டு ஊராட்சி பெரியகாட்டுபாளையம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது. புதுவையை அடுத்த மதலப்பட்டு உள்ளிட்ட 5 ஊரக மக்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய அரசால் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு சென்றடையும் முறையில் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆட்சியர், அரசு அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று மதலப்பட்டு ஊராட்சியில் பெரிய காட்டுபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் மதலப்பட்டு, கிளிஞ்சிக்குப்பம், மேல் அழிஞ்சப்பட்டு, கீழ்…