செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் ஆய்வு

சென்னையில் பெய்து வரும் மழையால் இடைவிடாது தொடர்ந்து பணியாற்றி வரும் மாநகராட்சி முன்கள பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவு மற்றும் உதவிப் பொருட்களை வழங்கினார். சேப்பாக்கத்தில் உள்ள தொகுதி சட்டமன்ற அவலகத்துக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு இந்த நிவாரண பொருட்களை வழங்கினார். போர்வை, பிரட், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றுடன் உதவித் தொகையையும் அவர் வழங்கினார். இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வீரம் செறிந்த வரலாற்று பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்- முதலமைச்சர்

புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள்! அந்நியரின் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்திப் போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட சிகரெட் கடத்தல் 129 பண்டல்கள் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பெருமளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் பயணிகள் வருகை மற்றும் கார்கோ சேவையும் அதிகரித்துள்ள அதேவேளை தங்கம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இதனிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஏர்ஏசியா விமானம், திருச்சி விமான நிலையம் வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது அவர் தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட சிகரெட் வகைகளை விமானத்தில் கடத்தி வந்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீராணம் ஏரி நீர் வரத்து 46 அடியை எட்டியது

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கல்லணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் தற்போது அணை 8.5 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வருவதாலும், தொடர் மழை காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் தண்ணீரை சேமித்து வருகின்றனர். வீராணம் ஏரியில் 47.5 அடி…

சென்னையில் 21 சுரங்கப் பாதையில் போக்குவரத்து சீரானது!

சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தேங்கிய 542 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையில் நேற்று 131 மி.மீ. மழை பெய்தபோதும் அதிகளவில் பாதிப்பில்லை. சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டன. சென்னையில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து மிதமான மழையே பெய்து வருகின்றது. சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துள்ளது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில், நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு மழை படிப்படியாக குறைந்து தற்போது மிதமான மழையே பெய்து வருகின்றது. நேற்று முழுவதும் பெய்த கனமழையினால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேங்கியது. அதனைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து களப்பணியில் உள்ளார். பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று(புதன்கிழமை) காலை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைக்கப்படவிருக்கும் நீர் நிலை, பூங்கா குறித்த பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளிக்கரணை பகுதியில் மழை…

சென்னை மழை, வெள்ளம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்

சென்னையில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் யானைகவுனி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று கனமழையும், நாளையும் அதி கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மழை, வெள்ளம் குறித்த பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். யானைக்கவுனி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து சென்னை பெரம்பூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து துய்மை பணியாளர்களுடன் தேநீர் குடித்தார்.அவர்களுக்கு பிஸ்கட்வழங்கினார்.

பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கஆவின் நிறுவனம் முன்னேற்பாடு

ஆவின் முன்வடகிழக்குப் பருவமழையின்போது பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 50,000 லிட்டா் பால் மற்றும் 20,000 கிலோ பால்பவுடரை ஆவின் நிறுவனம் தயாா் நிலையில் வைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் எதிரொலியாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருளான பால் மற்றும் பால் பவுடா் பல இடங்களில் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். ரூ.40 மதிப்புடைய ஒரு லிட்டா் பால் அந்த நேரத்தில் சில இடங்களில் ரூ.200-க்கும் அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் இது போன்ற சிக்கல்களைத் தவிா்ப்பதற்காக ஆவின் நிறுவனம் அனைத்து வகையான முன்னேற்பாட்டுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவா்…

பள்ளி விடுமுறை குறித்து ஒருநாள் முன்னதாக ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் குறித்த அறிவிப்பை ஒருநாள் முன்னதாகவே ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளையும் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மாவட்ட ஆட்சியர்களே வெளியிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருநாள் முன்னதாகவே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.மேலும், இணையவழி வகுப்புகளை பள்ளிகள் தவிர்க்குமாறு அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்…

தமிழகத்தின் பருவமழையை எதிா்கொள்ள அரசு தயாா் அமைச்சா் கே.என்.நேரு பேட்டி

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு தயாா் நிலையில் உள்ளது என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தண்டையாா்பேட்டை, பெரம்பூா் பகுதிகளில் தேங்கும் மழைநீரை கால்வாயில் வெளியேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளையும், ஓட்டேரி நல்லா கால்வாயில் தண்ணீா் தடையின்றி செல்வதையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகாா் பெறுவதை ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. சென்னை போன்ற நகரங்களில் சராசரியாக 15 முதல் 20 செ.மீ. மழை பெய்யும்போது உடனே வடிந்துவிடும்.…