மத்திய அரசின் புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிந்த் மோகன் கலாசாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
Category: இந்தியா
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிநடிகை குஷ்பு விலகல்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பின், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு விலகினார். அவரது ராஜினாமா கடிதத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு மக்களின் கடன் தள்ளுபடி கேரள வங்கி அறிவிப்பு
இந்த வங்கி கிளையில் 100 கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். இந்த கிளையில் நிலச்வயநாடு மக்களின் கடன் தள்ளுபடி கேரள வங்கி அறிவிப்புகேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளதாக அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதலைமைச்சர் நிவாரணம் நிதி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை கேரள வங்கி நிர்வாகம் வழங்கியுள்ளது. இதைத்தவிர, வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது 5 நாட்கள் ஊதியத்தை கேரள முதல்வர் நிவாரன நிதிக்கு வழங்கினர். இருப்பினும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களில் எத்தனை பேர் இந்த வங்கியில் கடன் வைத்திருக்கிறார்கள் என்ற விவராம் இன்னும் வெளியாகவில்லை. இந்த அறிவிப்பின் மூலம், கூடுதலான மக்கள் பயன்பெறுவார்கள் என்று…
‘பாரம்பரிய முறையில் மயில் கறி செய்வது எப்படி?’ சமையல் வீடியோவால் சிக்கலில் மாட்டிய யூடியூபர்கைது செய்யப்டுவார் எஸ்பி தகவல்
தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து வம்படியாக வந்து சிக்கலில் மாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.ஆனால் மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடைப்போம் எனவும் சிர்சில்லா மாவட்ட எஸ்.பி ராஜண்ணா உறுதியளித்துள்ளார். 117 வீரர், வீராங்கனைகளுடன் பாரீசுக்கு படையெடுத்த இந்தியா இந்த முறை 6 பதக்கங்களுடன் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) முடித்துக் கொண்டது. இந்தியா…
முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் நட்வர் சிங் உயிரிழப்பு
முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் நட்வார் சிங் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 93 ஆகும். நீண்ட காலம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நட்வர் சிங் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நட்வர் சிங் நேற்றிரவு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த நட்வர் சிங் கடந்த 1931 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இறுதிச் சடங்கு இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். 2004-2005 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக நட்வர் சிங் இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஆவார். முன்னதாக 1966 முதல் 1971 வரையிலான…
இந்திய எல்லைகளில் வங்கதேச இந்துக்கள் தடுத்து நிறுத்தும் இந்தியா
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.இதில் 560 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனாகடந்த 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். தற்போது, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்று உள்ளார். இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையை பகிர்ந்துள்ளன. மேற்குவங்கம், திரிபுரா,அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன. இந்த5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் குவிந்து வருகின்றனர். மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி, வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இங்கு 50 மீட்டர் தொலைவு இடைவெளியில் பிஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேகாலயா மாநிலம் வங்கதேசத்துடன் 443 கி.மீ. தொலைவை…
வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் வினேஷ் போகத் -தீர்ப்பு 13-ஆம் தேதி ஒத்திவைப்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார். அவர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார். இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. அதன்படி ஆகஸ்டு 11-ந் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பு 13-ந் தேதித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படி…
நாடுமுழுவதும் இன்று நீட் முதுகலை நுழைவுத் தேர்வு
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணியில் இருந்து 12.30 மணி வரை முதல் ஷிப்டும், பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7.30 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்வும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுதுகின்றனர். நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகின்றனர். முன்னதாக கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த தேர்வானது இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், மல்யுத்தம், ஆக்கியில் தலா ஒரு வெண்கலம், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன. தற்போதைய நிலவரப்படி பதக்கப்பட்டியலில் சீனா 37 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்திலும், அமெரிக்கா 35 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய இந்த விளையாட்டு திருவிழா இன்று இரவு விமரிசையாக நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, ஹேண்ட்பால், வாலிபால், மல்யுத்தம் உள்பட 9 விளையாட்டுகளில் 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறுகின்றன. போட்டிகள் முடிவடைந்ததும் நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரும் வசதி…
வளர்ப்பு பூனை கடித்து பெண் பலியானார்
கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனை கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தோற்றால் 50 வயதான கங்கிபாய் என்ற பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 2 மாதத்திற்கு முன்பு அப்பெண்ணின் வளர்ப்பு பூனை அவளை கண்டித்துள்ளது. பூனை கடிக்கு தேவையான தடுப்பூசிகளை அவர் எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்துள்ளார். பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் பரவி உயிரிழப்பார்கள். தற்போது பூனை கடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
