ஆப்பிரிக்காவில் அதிகரித்துவரும் குரங்கு அம்மை நோய் பாதிப்பால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை அறிவித்தது. இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பைப் பொது சுகாதார அவசர நிலையாக செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தது. ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோயால் 14,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 524 பேர் பலியானதாகவும், இந்த பாதிப்பு கடந்த வருடம் வெளியான புள்ளி விவரத்தைவிட, அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுவரை காங்கோவில் 96%-க்கும் அதிகமாக நோய் பாதிப்புகளும்,…
Category: உலகம்
தங்கப்பதக்கம் வென்ற நதீமுக்கு மானார் எருமை மாட்டை பரிசாக வழங்கினார்
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார். இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது. ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார். மேலும் அவரது சொந்த ஊரான கானேவாலில்…
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி 2024 கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகல நிறைவு
நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கும். சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களோடு இரண்டாவது இடம் பிடித்தது. அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தில் இருந்தது. 33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் 32…
இந்திய எல்லைகளில் வங்கதேச இந்துக்கள் தடுத்து நிறுத்தும் இந்தியா
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.இதில் 560 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனாகடந்த 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். தற்போது, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்று உள்ளார். இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையை பகிர்ந்துள்ளன. மேற்குவங்கம், திரிபுரா,அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன. இந்த5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் குவிந்து வருகின்றனர். மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி, வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இங்கு 50 மீட்டர் தொலைவு இடைவெளியில் பிஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேகாலயா மாநிலம் வங்கதேசத்துடன் 443 கி.மீ. தொலைவை…
வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் வினேஷ் போகத் -தீர்ப்பு 13-ஆம் தேதி ஒத்திவைப்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார். அவர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார். இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. அதன்படி ஆகஸ்டு 11-ந் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பு 13-ந் தேதித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படி…
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், மல்யுத்தம், ஆக்கியில் தலா ஒரு வெண்கலம், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன. தற்போதைய நிலவரப்படி பதக்கப்பட்டியலில் சீனா 37 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்திலும், அமெரிக்கா 35 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய இந்த விளையாட்டு திருவிழா இன்று இரவு விமரிசையாக நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, ஹேண்ட்பால், வாலிபால், மல்யுத்தம் உள்பட 9 விளையாட்டுகளில் 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறுகின்றன. போட்டிகள் முடிவடைந்ததும் நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரும் வசதி…
யூடியூப் முன்னாள் சி.இ.ஓ.வுக்கு சுந்தர் பிச்சை இரங்கல்
2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. சூசன் வோஜ்சிக்கி இன்று காலமானார். சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நல பிரச்சனை காரணங்களால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். சூசன் மரணத்திற்கு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த என் நண்பர் சூசனின் இழப்பு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் சூசன் முக்கிய பங்கு வகித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் பதக்கம் வென்றது இந்தியா அணி
பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் அரை இறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதியது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்க வைக்குமா என்று எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் முதல் கால் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனையடுத்து நடந்த 2-வது கால் பாதியின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் தனது முதல் கோலை பதிவு செய்தது. 2-வது கால் பாதியின் இறுதி வரை போராடிய இந்திய அணி 30-வது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்தது. இதனால் 1-1 என்ற கணக்கில் 2-வது கால் பாதி சமன் நிலையில்…
‘இதற்குமேல் போராட என்னிடம் வலிமை இல்லை’
மகளிருக்கான மல்யுத்தத்தில் 53 கிலோ எடைப் பிரிவிலேயே வினேஷ் போகத் போட்டியிட விரும்பியதாகவும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் கட்டாயத்தால்தான் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் செவ்வாய்க்கிழமை களம்கண்ட முதல் சுற்றிலேயே நடப்பு சாம்பியனான ஜப்பானின் யுய் சுசாகியை தோற்கடித்த வினேஷ் போகத், அடுத்தடுத்து காலிறுதி, அரையிறுதிகளில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் ஏற்கெனவே இரண்டு முறை வினேஷ் போகத்தால் தோற்கடிக்கப்பட்ட சாரா ஹில்டெப்ராண்ட்டை அவர் எதிர்கொள்ள இருந்த நிலையில், புதன்கிழமை காலை செய்யப்பட்ட பரிசோதனையில் கூடுதலாக 100 கிராம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ரியோ ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத், எடையை நிர்வகிக்க கடினமாக இருந்த காரணத்தால் 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வந்தார். இந்த…
ஜப்பான் நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக ஜப்பானியை தீவுகளான குய்ஷூ மற்றும் ஷிகோகு ஆகிய பகுதிகளை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நிலநடுக்கம் மியாசகியில் இருந்து 20 மைல் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்துள்ளது.