மேட்டூர் அணை நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 29) காலை வினாடிக்கு 2701 கன அடியிலிருந்து 2516 கன அடியாக சற்று குறைந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.72அடியிலிருந்து 119.80அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.15 டிஎம்சியாக உள்ளது.
Category: முதன்மை செய்திகள்
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனையில் கரைப்பு!
மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் இன்று(டிச. 29) கரைக்கப்பட்டது. அன்னாரது உடல் தில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நேற்று(டிச. 28) தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எரிவூட்டப்பட் அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட அஸ்தி சீக்கிய மரப்புப்படி இன்று கரைக்கப்பட்டது. இதற்காக மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கௌர், அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் குருத்வாரா அருகே யமுனை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள அஸ்தி படிக்கரைக்கு இன்று காலை சென்று அங்கு யமுனை நதியில் கரைத்தனர். தில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, நாட்டின் முதல் சீக்கிய பிரதமராகப் பதவி வகித்த…
எதிர்ப்புக்கு மத்தியில் பொறுப்புக்கு வந்தால் செயல்பட முடியாது- பாமக பதவி முகுந்தன் விலகுகிறார்
?விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார்.இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ”இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்” என்றார். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை…
குஜராத்தில் ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்
குஜராத் மாநிலத்தின் கட்சி மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 10.07 மணியளவில் பச்சாவ் நகரின் வடகிழக்குப் பகுதிக்கு 18 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று கட்ச் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது கட்ச் மாவட்டத்தில் இந்த மாதம் ஏற்பட்ட 3 வது நிலநடுக்கமாகும். இதற்கு முன்னர், டிச. 7 அன்று 3.2 ரிக்டர் அளவிலும், டிச. 23 அன்று 3.7 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. கடந்த நவம்பர் 15 அன்று குஜராத்தின் பதான் நகரில் 4.2 ரிக்டர் அளவிலும், நவம்பர் 18 அன்று கட்ச் மாவட்டத்தில் 4 ரிக்டர்…
100 வயதை கடந்தும் நல்லகண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் ‘நூறு கவிஞர்கள் – நூறு கவிதைகள்’ என்ற கவிதை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது, நல்லகண்ணுவிற்கு கம்பீரம் மற்றும் செவ்வணக்கத்தை தெரிவிக்கிறேன். நான் இங்கு வாழ்த்த வரவில்லை. வாழ்த்து பெற வந்துள்ளேன். 100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். அகத்தில் இருக்கும் கண் நல்லகண்ணு என கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டார். தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட ஊக்கம் எதுவும் இல்லை; கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கினேன். பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. பொதுவுடைமை, திராவிடம், தமிழ்த் தேசிய இயக்கம் ஒன்றாக இணைந்து விழா. இயக்கம் வேறு,…
உலகில் மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழி- ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையாகும்.- வானொலியில் பிரதமர் மோடி உரை
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். 117-வது நிகழ்ச்சி இன்று ஒலி பரப்பானது. இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ உரையில் மோடி பேசியதாவது:- அடுத்த ஆண்டு முதல்முறையாக உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கிறது. மீடியா, பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவான்கள், படைப்பாற்றல் உலகைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன மரபுடன் இணைக்க ஏதுவாக constitution75.com என்ற பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனமே நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது. உலகிலேயே மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையாகும். இது எங்களுக்கு பெருமையான விஷயம். உலக நாடுகளில் தமிழ்மொழியை கற்று கொள்பவர்களின்…
புதுவை தமிழ்ச்சங்கம் சார்பில்திமுக முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுகரசுக்கு பாரதி பொற்பதக்கம்
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் முதல்வர் ந. ரங்கசாமி வழங்கி சிறப்புரை ! புதுவை தமிழ்ச்சங்கத்தில் மகாகவி பாரதி விழா மற்றும் பாரதி பொற்பதக்கம் வழங்கும் விழா நேற்று மாலை தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்ச்சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமை வகித்தார். செயலாளர் சீனு. மோகன்தாசு வரவேற்று பேசினார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணைச் செயலர் தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி புலவர் உசேன், கலைமாமணி எம்.எஸ். ராஜா, பொறிஞர் மு. சுரேசுகுமார், பாவலர் அ. சிவேந்திரன், பாவலர் ர. ஆனந்தராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கோவிந்தராசு தலைமையில் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற தலைப்பில் பாவரங்கம் நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும்,…
தடையை மீறி தேமுதிகவினர் பேரணி
விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்தின் நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்த தமிழக அரசிடம் தேமுதிக கோரிக்கை வைத்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதி என்பதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படும் எனக்கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அவர்களுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், விஜய பிரபாகரன் மற்றும் தொண்டர்கள் பலரும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.மாநில…
இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு டெல்லியில் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்கள் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, பிரதமராக நாட்டை வழிநடத்தியவா் மன்மோகன் சிங். இந்திய பொருளாதார சீா்திருத்தங்களின் சிற்பியாக விளங்கிய அவா், முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் வியாழக்கிழமை காலமானாா். அரசியல் பாகுபாடின்றி தலைவா்கள் அஞ்சலி: இதைத்தொடா்ந்து அவரின் உடல் தேசிய கொடியால் போா்த்தப்பட்டு மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா்…
உச்சநீதிமன்ற உத்தரவின்படிபுதுச்சேரியில் ஜன.12 ஆம் தேதி முதல் ஹெல்மட் கட்டாயம்- அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரியில் ஜன. 12ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், டி.ஜி.பி, ஷாலினி சிங் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.பின், அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் மற்றும் 500 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வருபவர்களுக்கு 10 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் இரவு 12:30 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி கவர்னர் தலைமையில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.ஜனவரி 12…
