ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார். ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார் பதவி பிரமாணமும் ரகசகய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், காங்கிரஸ் தலைவர்…
Category: முதன்மை செய்திகள்
லெபனான்- இஸ்ரேல் போர் நிறுத்தம்! -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
லெபனான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான 14 மாதங்களாக நடைபெற்றுவந்த போரை நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்கா – பிரான்சின் ஒப்பந்தம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகை தொலைக்காட்சி உரையில் பேசுகையில், “இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த ஒப்பந்தத்தின்படி, புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வரும்.இதனால், லெபனான்- இஸ்ரேல் எல்லையில் போர் முடிவுக்கு வரும். போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை நிரந்தரமாக நிறுத்தப்படும். இது இரு நாடுகளுக்கு இடையேயான விரோதப் போக்கை நிரந்தரமாக நிறுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. போரை…
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், அதானி விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தனர். மக்களவை நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மக்களவைத் தொடங்கியது. அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல், மணிப்பூர் வன்முறை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. இதனால், மக்களவைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை செயல்பாடுகள் பிற்பகல் 12 மணி வரை…
டிசம்பர் 15-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19 (vii) மற்றும் 25 (ii)-ன்படி, வருகின்ற 15.12.2024 (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்திட கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் – சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் – சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழ் ஓங்குக! உயர்கல்வியிலும் – வேலைவாய்ப்புகளிலும் – தலைமைப் பொறுப்புகளிலும் நமது திறமையால் சாதனை படைத்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம் படியில் குழு புகைப்படம் எடுத்த காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் புனிதமாக கருதப்படும் ஒன்று பதினெட்டாம் படி. மாலையணிந்து கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். அதிலும் பக்தர்கள் படியில் ஏறிச்செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்களே தவிர, இறங்கி வர அனுமதி கிடையாது. பந்தள மன்னரின் பிரதிநிதிகள், கோவிலில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் மட்டுமே பதினெட்டாம் படியில் மேலே இருந்து கீழே இறங்க அனுமதி உள்ளது. அவ்வாறு அவர்கள் இறங்கும் போது பின்நோக்கியே இறங்குவார்கள். சாமிக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பின்நோக்கி வரக்கூடிய மரபே சபரிமலையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இருமுடி கட்டாமல் பதினெட்டாம் படியில் ஏறுவதற்கு, அங்கு பக்தர்களை படியேற உதவக்கூடிய போலீசார் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றியே பதினெட்டாம் படியில் நிற்பார்கள். இந்த நிலையில் பதினெட்டாம் படியில் பணியில்…
புதுச்சேரியில் 28-வது தேசிய புத்தகக் கண்காட்சி டிசம்பர் மாதம் 13ஆம் முதல் 10 நாள் நடக்கின்றது
புத்தக கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 70 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகள் அமைக்கின்றனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. கண்காட்சியில் 15 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களுக்குத் தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது. கண்காட்சியில் இடம்பெறும் நூல்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் 1000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழ்களும், ஆயிரம் மடங்கில் நட்சத்திர சான்றிதழ்களும் வழங்கப்படும்.10 ஆயிரத்திற்கு மேல் புத்தகம் வாங்குவோர்களுக்கு புத்தக சிறந்த நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. அனுமதி இலவசம். ஏற்பாடுகளை புத்தக…
புதுச்சேரி அரசின் 2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 2025ம் ஆண்டிற்கான அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் 17 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஆணைப்படி, புதுச்சேரி அரசு விடுமுறை நாள்கள் கவர்னர் ஒப்புதலின் பேரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவா் தினம், மார்ச் 31ம் தேதி ரம்ஜான், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு, 18ம் தேதி ஏப்ரல் புனித வெள்ளி, மே 1ம் தேதி மே தினம், ஜூன் 7ம் தேதி பக்ரித் பண்டிகை, ஆகஸ்ட்1௫ம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 16ம் தேதி டிஜுரே டிரான்ஸ்பர் தினம், ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் மாதம் 5ம் தேதி மிலாடி…
உதயநிதி பிறந்தநாள்- கமல்ஹாசன், வைரமுத்து வாழ்த்து
தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய்த் திகழும் துணை முதல்வர், என் அன்புத் தம்பி உதயநிதிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். அதேபோல் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஒருநாள் கலைஞரும் நானும் கோபாலபுரத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம் உதயநிதி தன் மனைவி கிருத்திகாவோடு வந்தார்; நின்றுகொண்டே பேசினார் கலைஞர் மறுத்த ஒருகருத்தை தன் வாதத்தை முன்னிறுத்திச் சாதித்துச் சென்றார் அப்போதே தெரிந்துகொண்டேன் வலிவும் தெளிவும் மிக்க வல்லவர் இவரென்று…
இன்று 47-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்
தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவர், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார். பின்னர், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- துர்காவை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின்னர் அவர், அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
