தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு, தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், ‘எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் ஒட்டுமொத்த தெலுங்கு சமுதாயத்தில் உள்ள அனைத்து பெண்களையும்…
Category: முதன்மை செய்திகள்
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் 20 பேர் பலி
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர் ஓர் ஆண்டைக் கடந்துள்ளது. இந்தப் போரில் இதுவரை சுமார் 43,000 பேர் பலியாகினர். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி வரும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த சில வாரமாக வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், வடக்கு காசாவில் பெய்ட் லாஹியா நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாமில் இறைச்சிக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்கள் மீட்பு – 4 பேர் கைது
அசாம் மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்களை போலீசார் மீட்டனர். நாய்களை கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர் இந்த நாய்களை அசாம் மாநிலத்தில் இருந்து நாகாலாந்திற்கு கொண்டு சென்று நாய் இறைச்சிக்கு விற்பனை செய்ய கைது செய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். 2020 ஆம் ஆண்டு நாய் இறைச்சி வியாபாரத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. நாகாலாந்தில் நாய் இறைச்சி சாப்பிடப்பட்டாலும் பிற மாநில மக்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவதில்லை. ஆகையால் பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்தும் போக்கு அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.
ஆக்ரா அருகே இந்திய மிக்-29 போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது
மிக்-29 போர் விமானம், உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது எனவும் விபத்தின் போது விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்றும் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பயிற்சிக்காக போர் விமானம் ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல. செப்டம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் மிக்-29 போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது. விபத்திற்கு முன் விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை வீராம்பட்டிணத்தில் ரூ. 46.16 கோடியில் புதிய மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணி-முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி.நவ.4- புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் அரியாங்குப்பம், அடுத்த வீராம்பட்டினம் மீனவர் கிராமத்தில் தேங்காய்திட்டு அருகே அரிக்கன்மேடு சுற்றுலா தளத்தை ஒட்டியுள்ள மீன்பிடி துறைமுக கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசின் நிதி வழங்கும் திட்டமான பிராதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை முலம் ரூபாய்.53 கோடியே 38 லட்சம் அனுமதி பெறப்பட்டது. அதில் ரூ.46 கோடியே 16 லட்சம் செலவில் கட்டிட பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்ற தட்சிணாமுர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன், பொதுப்பணித்துறை செயலர் ஜெய்ந்தகுமார், தலைமைப்…
பாவேந்தர் பாரதிதாசனார் மகனார்தமிழறிஞர் மன்னர்மன்னன் பிறந்த நாள் விழா !
பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் “பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழா”பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.பாரதிதாசன் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் 97 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுப்“புரட்சிக்கவிஞர் போற்றிய மைந்தர் மன்னர்மன்னன்!” என்ற தலைப்பிலான 72 ஆவது மாத விழாவுக்குஅறக்கட்டளைத் தலைவர் தமிழறிஞர் கோ. பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த தமிறிஞர் மன்னர்மன்னன் திருவுருவப் படத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர், வி.பி. சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ரெவே சொசியால் சங்கத் தலைவர் துபாய் குழந்தை, திண்டிவனம் தாகூர் கல்விச் சங்க நிர்வாகிகள் ரவீந்திரநாத், தேவேந்திரநாத், கொஜிரியோ கராத்தே சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், காந்திநகர் நல வாழ்வுச் சங்கத்தினர், கலை பண்பாட்டு துறை இயக்குநர் வி. கலியபெருமாள் கலை முதியோர் இல்லம்…
பொருட்களின் ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி ரூ.1.29 கோடி மோசடி -ராஜஸ்தானைச் சேர்ந்த 2 பேர் கைது
அமேசான் நிறுவனத்தில் பொருட்களை ஆர்டர் செய்து ரூ.1.29 கோடி மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோர் மீது அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுபாஷ் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் அமேசானில் அதிக மதிப்புள்ள கேமராக்கள், ஐபோன்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள வேறு சில பொருட்களையும் போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி ஆர்டர் செய்வார்கள். டெலிவரி நேரத்தில், அவர்கள் டெலிவரி முகவர்களின் கவனத்தை திசை திரும்புவார்கள். பின்னர் அதிக மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை குறைவான மதிப்புடைய பொருட்களுக்கு ஒட்டுவார்கள். குறைவான மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை அதிக மதிப்புடைய பொருட்களுக்கு ஓட்டுவார்கள் ஸ்டிக்கர்களை மாற்றிய…
அமரன் படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களின் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது.இந்நிலையில், அமரன் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து மகிழ்ந்துள்ளார். கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த ரஜினிகாந்த் இந்தப் படத்தை தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து…
புதுச்சேரியில் கல்லறை திருநாளைமுன்னிட்டு கிறிஸ்தவர்கள் வழிபாடு
.புதுச்சேரி.நவ.2-புதுச்சேரியில் கல்லறை திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையில் மலர் துாவி வணங்கினர்.கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் கல்லறை திருவிழா, இன்று நடந்தது.இதை முன்னிட்டு, முன்னோர்களின் கல்லறையை, அவரது குடும்பத்தார் பூக்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தேவாலயங்களில், சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையும் நடைபெற்றது.புதுச்சேரியில் உப்பளம், நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, வில்லியனுார் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறைகளில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடி, முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்…
