காற்று மாசு பிரச்னையால் திணறி வரும் தலைநகர் டெல்லியின் சூழல் நாளுக்குநாள் கடுமையாகி வருகிறது. இன்றைய தினம் [வெள்ளிக்கிழமை] டெல்லியின் காற்று மாசு அளவு 293 என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது. டெல்லியில் பாயும் யமுனை நதியில் பனிப்படலம் போன்று ரசாயனங்கள் நுரைகளாக உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் காணப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Category: முதன்மை செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா- மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டம் வழங்கினார்
சேலம் பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அவரை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்றனர். இதனையடுத்து பேண்டு வாத்தியம் முழங்க கவர்னர் ஆர்.என்.ரவி, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் விழா மேடைக்கு வந்தார். இதனையடுத்து நடந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். இந்தநிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் க.ஜ.ஸ்ரீராம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி முனைவர்…
தென் மண்டல அளவில் 3ஆம் இடம் பிடித்த புதுச்சேரி வாலிபால் அணிக்கு எம்எல்ஏ தட்சணாமூர்த்தி பாராட்டு
புதுச்சேரி.அக்.19-காந்திராம் நற்பணி இயக்கம் மற்றும் புதுவை அமெச்சூர் வாலிபால் சங்கம் இணைந்து தெண்மண்டல பள்ளிகளுக்கிடையிலான வாலிபால் போட்டி உப்பளம் உள் விளையாட்டு அரங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது, இதில் தென்மண்டல 5 மாநிலங்களிலிருந்து 25 மாணவர் அணியினரும் 15 மாணவியர் அணியினர் என மொத்தம் 40 அணிகள் பங்கு பெற்று 600 மாணவ-மாணவியர்கள் கலந்துகொண்டு விளையாடினர். 13 வயது முதல் 19 வயது வரை 5 பிரிவுகளின் கீழ் லீக் முறையில் நடத்தப்பட்ட போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடமும் கர்நாடகா இரண்டாவது இடமும் புதுச்சேரி மூன்றாவது இடமும் பிடித்தன, வெற்றபெற்ற அணிகளுக்குஅதற்கான வெற்றி கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது, இந்த நிலையில் மூன்றாம் பரிசு பெற்ற புதுவை அணியினரை இன்று காந்திராம் நற்பணி இயக்கத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி…
செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் ஆய்வு
சென்னையில் பெய்து வரும் மழையால் இடைவிடாது தொடர்ந்து பணியாற்றி வரும் மாநகராட்சி முன்கள பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவு மற்றும் உதவிப் பொருட்களை வழங்கினார். சேப்பாக்கத்தில் உள்ள தொகுதி சட்டமன்ற அவலகத்துக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு இந்த நிவாரண பொருட்களை வழங்கினார். போர்வை, பிரட், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றுடன் உதவித் தொகையையும் அவர் வழங்கினார். இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வீரம் செறிந்த வரலாற்று பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்- முதலமைச்சர்
புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள்! அந்நியரின் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்திப் போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட சிகரெட் கடத்தல் 129 பண்டல்கள் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பெருமளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் பயணிகள் வருகை மற்றும் கார்கோ சேவையும் அதிகரித்துள்ள அதேவேளை தங்கம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இதனிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஏர்ஏசியா விமானம், திருச்சி விமான நிலையம் வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது அவர் தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட சிகரெட் வகைகளை விமானத்தில் கடத்தி வந்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீராணம் ஏரி நீர் வரத்து 46 அடியை எட்டியது
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கல்லணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் தற்போது அணை 8.5 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வருவதாலும், தொடர் மழை காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் தண்ணீரை சேமித்து வருகின்றனர். வீராணம் ஏரியில் 47.5 அடி…
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து பொதுமக்கள் 94 பேர் பலியான சோகம்
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 94 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுயாகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தின்போது, டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியுள்ளது. அருகிலிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால், டேங்கர் லாரி தீப் பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 94 பேர் இதுவரை உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சரக்கு ரயில் போக்குவரத்து நைஜீரியாவில் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், சாலைமார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள்…
உங்களுக்கு ஓட்டு போட்டேன்.எம்.எல்.ஏ.விடம் தனக்கு பெண்பார்க்க கோரிக்கை வைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்
உத்தர பிரதேச மாநிலம் சர்க்காரி தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் பிரிஜ்பூஷண் ராஜ்புட். இவர் தனது காரில் பயணம் மேற்கொண்டபோது, மஹோபா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி எரிபொருள் நிரப்பினார். அப்போது பெட்டோல் நிரப்பும் ஊழியர் எம்.எல்.ஏ.-விடம் தனக்கு பெண் பார்க்க உதவும்படி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக இருவரிடையே நடைபெற்ற உரையாடல் வைரலாகி வருகிறது. சர்க்காரி என்ற இடத்தில் வசித்து வரும் பெட்ரோல் நிரப்பும் ஊழியரான அகிலேந்திர கரே, எம்.எல்.ஏ.விடம் “தனக்கு பெண் பார்க்க உதவுங்கள்” எனக் கேட்கிறார். அதற்கு எம்.எல்.ஏ. பிரஜ்பூஷண் ராஜ்புட் “உங்களுக்கு என்ன வயது ஆகிறது” எனக் கேட்க, அந்த ஊழியர் “44 வயது ஆகிறது” எனக் கேட்கிறார். “உங்களுக்கு பெண் தேடுவதற்காக என்னை தேர்ந்தெடுத்தது ஏன்?” என எம்.எல்.ஏ. கேட்க, அந்த ஊழியர், “நான் உங்களுக்கு வாக்களித்துள்ளேன்”…
ரஷியா தனது நவீன டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல்
உக்ரைன் பகுதிகளை குறிவைத்து ரஷியா இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 130 டிரோன்கள் உக்ரைனின் கீவ் மற்றும் பல நகரங்களை குறிவைத்து செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஏவுகணைகள் கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் வான் பாதுகாப்பு சிஸ்டம் 136 டிரோன்களில் 68 டிரோன்களை தடுத்து அழித்துள்ளது. இரண்டு டிரோன்கள் மீண்டும் ரஷியா பகுதிக்கு சென்றுள்ளது. 64 டிரோன்கள் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது. டெர்னோபில் வடக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களில் ரஷியாவின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும். ரஷியாவின் படையெடுப்பை தடுப்பதற்கான திட்டத்தை ஜெலன்ஸ்கி வெளியிடுவதற்கு முன்பாக ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரண்டு ஏவுகணைகளை…
