சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார். ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். துணை முதலமைச்சர், புதிய மாவட்ட செயலாளர்கள், 2026 சட்டசபை தேர்தல் போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட வாய்ப்பு என கருதப்படும் நிலையில் கட்சி தொண்டர்கள் பலரும் அறிவாலயத்திற்கு வெளியே குவிந்துள்ளனர்.
Category: முதன்மை செய்திகள்
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர் உடல் 25 நாட்களுக்கு பிறகு புதுவை வந்தது
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது39). இவர் அமெரிக்காவின் ஒஹாயோவில் உள்ள சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி, குழந்தைகள் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இதற்கிடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 21-ந்தேதி மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது மனைவி சவுமியாவை சுட்டு கொலை செய்தார். அதன் பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியை கொன்று கணவரும் தற்கொலை செய்து கொண்டதால் 3 குழந்தைகள் ஆதரவற்று இருந்தனர். அவர்களை அங்குள்ள தமிழர்கள் பராமரித்து வந்தனர். பின்னர்…
ஒடிசாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர்!
ஒடிசா அரசின் பெண்களை மையமாகக் கொண்ட சுபத்ரா யோஜனா திட்டத்தையும், மாநிலத்தில் ரூ.3,800 கோடி மதிப்பிலான ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநிலத்தில் 2,871 கோடி மதிப்பிலான தேசிய ரயில்வே திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் ஜனதா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தா சுபத்ரா திட்டத்தின் கீழ் 2024-25 முதல் 2028-29 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 21-60 வயதுக்குள்பட்ட அனைத்து தகுதியான பயனாளிகளும் ரூ.50 ஆயிரம் வரை பெறுவார்கள். இரண்டு தவணைகளில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் இதுவரை 76 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது, சுபத்ரா திட்டத்தின் கீழ் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட…
புதுவை அதிமுக முன்னால் அவை தலைவர் பாண்டுரங்கன் நினைவு நாள் படதிறப்பு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னால் அவை தலைவர் பாண்டுரங்கன் நினைவு நாள் அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடந்தது. ரவி பாண்டுரங்கன் தலைமையில் மதிப்பிற்குரிய பாண்டுரங்கம் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தொகுதி கழக செயலாளர் ராஜா மாநில துணை செயலாளர் பிஎல் கணேசன் அவைத்தலைவர் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் பாலன் மாநில அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் பரசுராமன் அதிமுக பிரமுகர் ஜீவா வார்டு கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், சிவரவி, பாலு, ரங்கநாதன், ஜெயக்குமார் மாநில இலக்கிய அணி தட்சிணாமூர்த்தி மற்றும் தொகுதி கழக நிர்வாகிகள் கோபி, செல்வம், சரவணன், சிவா, சிவபாரதி, ஆறுமுகம், ஏழுமலை, நாராயணன், காண்டீபன், சையது அகமது, ராமலிங்கம் , கலைச்செல்வம், நாகப்பன், குமரன், பாரதி,…
புதுவை அரசு சார்பில் பெரியார் பிறந்தநாள்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலையணிவிப்பு
தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிள்ளைத்தோட்டம் சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன்.ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா .ஆறுமுகம் (எ) ஏகேடி, சட்டமன்ற உறுப்பினர்கள்.பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, .ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை பெரியார் நினைவிடத்தில் தவெக தலைவர் விஜய் மரியாதை
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக்கழத் தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியார் பிறந்தநாளில் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என இன்று காலை விஜய் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முடங்கியது ஜியோ-சிக்கித் திணறிய பயனர்கள்
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் மட்டும் ஜியோ சேவைகள் இயங்குவதாக கூறப்படும் நிலையில், மும்பையில் ஜியோ சேவைகள் இயங்கவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக டவுன் டிடெக்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஜியோ நெட்வொர்க் கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 65 சதவீதம் பேருக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று பிரச்சினையும், 19 சதவீதம் பேருக்கு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. மேலும் 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை. நெட்வொர்க் கோளாறு தவிர்த்து மைஜியோ செயலி கூட இயங்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டினர். நெட்வொர்க் கோளாறு தொடர்பாக ஜியோ…
தி.மு.க. கூட்டணியை சிலர் உடைக்க நினைக்கின்றனர்- தொல். திருமாவளவன்
மது போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்த விளக்க மண்டல செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:- மது ஒழிப்பு என்கிற உணர்வு பூர்வமான பிரச்சனையை கையில் எடுத்துள்ளேன். அனைத்து கட்சிகளும் மதுவேண்டாம், மதுவிலக்கு வேண்டும் என்பார்கள், ஆனால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். இதனால் தான் இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து மதுவிலக்கு என்ற முடிவு எடுத்தால் நிச்சயம் மதுவை ஒழிக்க முடியும் மது என்பது மிகப்பெரிய லாபம் தரும் தொழில், மிகப்பெரிய கட்டமைப்பினை கொண்டது. மதுக்கடைகளை மூடுவது என்பதை விட மது ஆலைகளை மூட வேண்டும். டாஸ்மாக் கடையை மூடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. டாஸ்மாக் என்பது கார்பரேசன் தமிழ்நாடு அரசே உருவாக்கி உள்ளது. இதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்…
புதுவை சிறுமியை பாலியல் வண்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி காலப்பட்டு சிறயைில் தூக்கி தற்கொலை
புதுச்சேரி.செப்.16-புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது மகள் கொலைசெய்யப்பட்டு, கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்தாள். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன்(56) ஆகியோரை கைது செய்தனர். வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ளவிவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரும், விவேகானந்தனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் மூச்சுத் திணறி மயங்கி விழுந்த சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டி, உடலை வேட்டியில் மூட்டையாகக் கட்டி, வீட்டுக்கு பின்புறமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது..இதனையடுத்து கருணாஸ் (வயது19) மற்றும் விவேகானந்தன் (57)…
இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள் நடிகர் விஜய் வாழ்த்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவை தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளிலும் விஜய் பதிவிட்டுள்ளார்.
