சேலம் ஓமலூரில் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. அரசு திட்டமிட்டு பழி வாங்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. இவற்றை முறியடிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. அண்மையில் தி.மு.க. சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம், சென்னையில் வெளியிடப்பட்டடது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த மத்திய மந்திரி கலந்து கொண்டார். மேலும் விழாவில் பா.ஜனதா மாநில தலைவர், தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி மற்றும் பா.ஜனதாவினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் தி.மு.க. இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. அவர்கள் அந்த கூட்டணியின் தேசிய தலைவர்களான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அல்லது ராகுல்காந்தியை அழைக்கவில்லை. தி.மு.க. ஆட்சியை…
Category: முதன்மை செய்திகள்
தலைநகர் டெல்லியில் மாணவன் புத்தகப் பையில் துப்பாக்கி
தலைநகர் டெல்லியில் நஜப்கர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். அப்போது ஒரு மாணவன் தயக்கத்துடன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், அந்த மாணவனை அழைத்தனர். அவன் வைத்திருந்த புத்தகப் பையை சோதனையிட்டனர். அந்தப் பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு மிரண்டனர். உடனே இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் துப்பாக்கியை வாங்கி பரிசோதித்தனர். விளையாட்டுப் பொருள் என நினைத்து அதை கொண்டு வந்ததாக மாணவன் கூறினான். துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார் உடனே அதற்கான உரிமத்தை ரத்துசெய்யும் நடவடிக்கையில் இறங்கினர். விசாரணையில், அந்த துப்பாக்கி மாணவனின் தந்தைக்குச் சொந்தமானது என்பதும், அவரது பெயரில் உரிமம் வாங்கப்பட்டுள்ளதும், சில மாதங்களுக்கு முன் மாணவனின்…
முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி- அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தமிழ்க் கடவுள் முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது. பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முப்பரிமாண பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தது. குடவரைக்கோவில் போன்ற அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த இதனை ஏராளமான பக்தர்கள் ரசித்தனர். முதல் அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 2-ம் நாள் நிகழ்ச்சி முதல் நாள் மாநாட்டில் 300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 800 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 1300…
தெலுங்கானாவில் தெருநாயை கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற நபர்
தெலுங்கானாவில் தெருநாயை ஒருவர் கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ப்ரீத்தி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ப்ரீத்தி தனது புகாரில், குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு தெருநாயை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். பின்பு நாய் இறந்த பிறகு, உடலை பக்கத்தில் உள்ள அவரது வயலில் புதைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் துரோவ் பிரான்சில் அதிரடி கைது!
பிரபல சமூக செய்தி பரிமாற்ற செயலியாக விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதான பாவெல் துரோவ் தனது சகோதரர் நிகோலாய் உடன் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டில் டெலிகிராம் செயலியை நிறுவினார். தற்போது துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் பணியாற்றி வரும் பாவெல் துரோவ் துபாய் குடிமகனாக அங்கு வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து வாரண்ட்டோடு பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. தீவிரவாத இயக்கங்களுக்குத் துணைபோவது,…
ஐதராபாத்தின் குகட்பல்லி பரபரப்பான சாலையில் பறந்த ரூபாய் நோட்டுகள்- யூடியூபர் கைது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர். யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விடுகிறார். இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீடியோ வைரலானதை அடுத்து ஹர்ஷா மீது வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
ஏலியன்கள் இருப்பது உண்மை தான்.. இஸ்ரோ
இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வேற்றுகிரக வாசிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, “பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயம் உள்ளன. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.” “100 ஆண்டுகளுக்கு முன் நமது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை அடியோடு மாறியிருக்கிறது. இத்தகைய மைக்ரோபோன், கேமரா, லைட் மற்றும் தகவல் பரிமாற்ற வசதிகள், தொலைகாட்சி என எதுவும் இல்லாமல் இருந்தது. இவை அனைத்தையும் நாம் 100 ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம்.” “அந்த வகையில் இதே போன்ற நாகரீகம் இருக்கிறது என நினைத்துக் கொள்ளுங்கள். அவைகள் நம்மை விட 1000 ஆண்டுகள் முன்னேறி இருக்கின்றார்கள் எனில் அவர்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெறும் 100 ஆண்டுகளில் நாம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற முடியும்…
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்- 2025 ஏப்ரலில் அமல்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற முடியும் என தெரிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியருக்கு, குறைந்தபட்ச…
பல்லாயிரம் பேர் திரண்ட பழநி அனைத்துலக முருகன் மாநாடு
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டினர் உட்பட பல்லாயிரம் பேர் திரண்டனர். இம்மாநாட்டில் கலந்து கொண்ட நீதிபதி வி.சிவஞானம் பேசுகையில், ‘அவன் இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்த்துவதன் பயன்தான் இந்த முருகன் மாநாடு. இறைவனை எப்படி எல்லாம் பாடுவோம் என்று நம்முடைய முன்னோர்களும், அறிஞர்களும் பாடிக்காட்டி இருக்கிறார்கள்’ என்றார். நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பேசுகையில், ‘தமிழ் அறிஞர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்துவது தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது’ என்றார். நீதிபதி பி.புகழேந்தி பேசுகையில், ‘தமிழ் மருத்துவத்தில் சித்த…
நாகை மீனவர்கள் கைது- மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் அவர்களது மீன்பிடி விசைப்படகும் நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் IND-TN-06-MM-1054 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை, தான் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளதாகவும், 2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர், இதுபோன்ற…
