வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் வினேஷ் போகத் -தீர்ப்பு 13-ஆம் தேதி ஒத்திவைப்பு

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார். அவர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார். இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. அதன்படி ஆகஸ்டு 11-ந் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பு 13-ந் தேதித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படி…

நாடுமுழுவதும் இன்று நீட் முதுகலை நுழைவுத் தேர்வு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணியில் இருந்து 12.30 மணி வரை முதல் ஷிப்டும், பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7.30 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்வும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுதுகின்றனர். நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகின்றனர். முன்னதாக கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த தேர்வானது இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், மல்யுத்தம், ஆக்கியில் தலா ஒரு வெண்கலம், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன. தற்போதைய நிலவரப்படி பதக்கப்பட்டியலில் சீனா 37 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்திலும், அமெரிக்கா 35 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய இந்த விளையாட்டு திருவிழா இன்று இரவு விமரிசையாக நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, ஹேண்ட்பால், வாலிபால், மல்யுத்தம் உள்பட 9 விளையாட்டுகளில் 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறுகின்றன. போட்டிகள் முடிவடைந்ததும் நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரும் வசதி…

மின்துறை தனியார்மயம் ஆக்கமாட்டோம் என சட்சபையில் உறுதி- நீதிமன்றத்தில் கால அவகாசம் ஏமாற்றும் ரங்கசாமி -முன்னாள் முதல்வர் நாராணசாமி குற்றசாட்டு

புதுச்சேரி முன்னாள்‌ முதல்வர் ‌நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம்‌ கூறியதாவது: வக்பு வாரிய சட்டத்தில்‌ மோடி கொண்டுவந்ததிருத்தங்கள்‌ மதத்தின்‌ அடிப்படையை தவிர்க்கின்றவகையில்‌ உள்ளது. அனைத்து மதத்தினரும்‌ தங்கள்‌கொள்கை, கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த உரிமை உண்டு. ஆனால்‌ புதிய திருத்தத்தில்‌இந்துக்கள்‌ வக்பு வாரியத்தில்‌ உறுப்பினர்களாகசேர்க்கப்பட்டுள்ளனர்‌. அறங்காவலர்‌ குழுவில்‌இந்துக்களை தவிர யாரும்‌ இருக்க முடி யாது. ஆனால்‌ வக்பு வாரியத்தில்‌ இந்துக்கள்‌ இருப்பார்கள்‌ என்பதைஎப்படி ஏற்க முடியும்‌? திட்டமிட்டு இஸ்லாமியர்களை பழிவாங்கும்‌ நடவடிக்கையாகத்தான்‌ இதனை பார்க்கின்றோம்‌. இந்தியா கூட்டணி இந்தசட்டத்தைஒருபோதும்‌ அனுமதிக்காது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற இந்தியகூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும்‌ என்று முதல்வர்‌ரங்கசாமி கூறியுள்ளார்‌. இது முதல்வர்‌ ரங்கசாமிஅங்கமாக உள்ள பாஜக அரசு புதுச்சேரிக்கு மாநிலஅந்தஸ்து தர முடியாது என்பதை தெளிவாககி விட்டதாக தெரிகிறது. முதல்வர்‌ ரங்கசாமி கடந்த2022ல்‌ சட்டமன்ற தேர்தலில்‌ பாகைவோடு கூட்டணிவைத்த சமயத்தில்‌ புதுச்சேரிக்கு மாநி அந்தஸ்து…

வளர்ப்பு பூனை கடித்து பெண் பலியானார்

கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனை கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தோற்றால் 50 வயதான கங்கிபாய் என்ற பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 2 மாதத்திற்கு முன்பு அப்பெண்ணின் வளர்ப்பு பூனை அவளை கண்டித்துள்ளது. பூனை கடிக்கு தேவையான தடுப்பூசிகளை அவர் எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்துள்ளார். பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் பரவி உயிரிழப்பார்கள். தற்போது பூனை கடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசம் டாக்காவை விட்டு வெளியேறிய பிரதமர் ஹசீனா- ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் காரணமாக நேற்று காலவரையற்ற நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில்…

நிலச்சரிவு இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள், 206 பேரை காணவில்லை – முதல்வர் பினராயி விஜயன்

வயநாட்டின் சூரமலா பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பினராயி விஜயன்திருவனந்தபுரம்: பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும், எனினும் இன்னும் 206 பேரை காணவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “இதுவரை 215 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள். இதுவரை 148 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேர் காணவில்லை. 81 பேர் காயமடைந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் பாகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் தெரியாத உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் பணியை பஞ்சாயத்துகள் மேற்கொள்ளும். தீயணைப்புப் படை, தேசிய…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இந்தியா முழுவதும் 200 கோடி மோசடி உத்தரபிரதேத்தை சேர்ந்த 4 பேர் கைது

புதுச்சேரி, லாஸ்பேட்டை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு குறித்து பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் மர்மநபர் ஒருவர், கனடாவில் வேலை தருவதாக உறுதியளித்தார். அவரை நம்பர் வைத்து, மேலும் விசா (வேலை அனுமதி), மருத்துவ பரிசோதனை, இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு பணத்தை டெபாசிட் செய்தால் மேற்படி வெளிநாட்டு வேலை உறுதியாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி 17,77 லட்சத்தை பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியள்ளார். அதைத் தொடர்ந்து ரஅமஷ்குமார் புதுச்சேரி இணைய வழி போலீசில் புகார் கொடுத்தார்.புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் அவர்களின் உத்தரவின்பேரில் ஈன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீழ்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை…

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்

மூன்றாவது முறையாக பாரத பிரதமராக பதவி ஏற்றுள்ள திரு .நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து 12,700 கோடி ரூபாய்க்கான நிதி நிலை அறிக்கையை முதல்வர் தாக்கல் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்..பட்ஜெட் முக்கிய சில அம்சங்கள்2024-25 ஆம் ஆண்டிற்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுஉள்நாட்டு நிதி வருவாயாக ரூ.6,914 கோடியாகவும், மத்திய அரசின் கொடை ரூ.3,268 கோடியும், நிதி பற்றாக்குறையை போக்க ரூ.2, 066 கோடி கடன் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரங்கசாமி பேரவையில் தகவல். புதுச்சேரியில் மானிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்புகாரைக்காலில் பழைமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும். பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்.இலவச அரிசி மாணிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் என ரங்கசாமி அறிவிப்பு.

ஸ்ரீரங்கம் பள்ளியில் திடீர் ஆய்வில் இறங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்- மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டார்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அல்லூர் பாரதி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாவணர்களுடன் அமர்ந்து காலை உணவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாப்பிட்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.