மூன்றாவது முறையாக பாரத பிரதமராக பதவி ஏற்றுள்ள திரு .நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து 12,700 கோடி ரூபாய்க்கான நிதி நிலை அறிக்கையை முதல்வர் தாக்கல் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்..பட்ஜெட் முக்கிய சில அம்சங்கள்2024-25 ஆம் ஆண்டிற்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுஉள்நாட்டு நிதி வருவாயாக ரூ.6,914 கோடியாகவும், மத்திய அரசின் கொடை ரூ.3,268 கோடியும், நிதி பற்றாக்குறையை போக்க ரூ.2, 066 கோடி கடன் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரங்கசாமி பேரவையில் தகவல். புதுச்சேரியில் மானிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்புகாரைக்காலில் பழைமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும். பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்.இலவச அரிசி மாணிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் என ரங்கசாமி அறிவிப்பு.
Category: புதுச்சேரி
லஞ்சம் பெற்று சிகப்பு ரேஷன்கார்டு விநியோகம்சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சட்டசபையில் எம்எல்எக்கள் வலியுறுத்தல்
புதுவை சட்டசபையில் புதுச்சேரி சட்டசபையில்ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில்சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் பேசியதாவது: டெல்லி செல்லாவிட்டால் எப்படி நிதி பெறமுடியும்? கவர்னர் உரையில் பெரிய வளர்ச்சி திட்டம் ஏதும் குறிப்பிடவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் அரசு தோல்வி அடைந்துள்ளது. ஆண்டுதோறும் என்ஜினியரிங் முடித்து 5 ஆயிரம் மாணவர்கள் வெளியே வருகின்றனர். ஆனால், அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை தேடும்சூழல்தான் உள்ளது. பல்வேறு துறைகளில் திட்டங்கள் போட்டாலும்போதிய நிதி இல்லாமல் வங்கியில் கடன் பெற்றுதான்செய்ய வேண்டிய நிலை உள்ளது. கூட்டணி ஆட்சிஎன்று கூறி டெல்லி செல்லாவிட்டால் எப்படி நிதிபெற முடியும்? சிவப்பு ரேஷன் கார்டு தந்ததில் முறைகேடுநடந்துள்ளது. 25 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கைவிட சிவப்பு கார்டு அதிகம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஒரு…
புதுச்சேரியின் தனிநபர் வருமானம் 7.61 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. ஆளுநர் உரையில் அறிவிப்பு
புதுச்சேரி.ஆக.1-புதுச்சேரி சட்டசபையின் 5வது பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது.புதுச்சேரி சட்டசபையில் 24-25ம் ஆண்டுக்கான எனது உரையை நிகழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 15வது சட்டசபையின் 5வது கூட்டத் தொடரை தொடங்கி வைத்து பெருமை வாய்ந்த இந்த அவையில் என் முதல் உரையை ஆற்றுகிறேன். 2016ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான நிலுவைத்தொகை, அரசு கல்வி நிறுவனங்கள், சார்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலுவைத் தொகைக்காக மத்திய அரசு 2023-24ம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில் ரூ.271 கோடி வழங்கியுள்ளது. இதன்மூலம் 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், ஆயிரத்து 500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக புதுச்சேரி நிர்வாகம் மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவிக்கிறது. ஏழைகள், சமுதாயத்தில் நலிவுற்றோர்…
புதிய அமைச்சர் திருமுருகனுக்கு குடிமை பொருள் வழங்கல் துறை ஒதுக்கீடு ஆளுநர் உத்தரவு
புதுச்சேரி அமைச்சர் அவையில் துறைகள் மாற்றி அமைத்து முதல்வர் ரங்கசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். எந்த துறையும் வழங்காமல் இருந்த திருமுருகனுக்கு குடிமை பொருள் வழங்க துறையை ஒதுக்கினார்.புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் என்ஆர்.காங்கிரசை சேர்ந்த 3 பேரும் பாஜகவை சார்ந்த 2 பேரும் அமைச்சர்களாக உள்ளனர் . இதில் என்.ஆர்.என்ன காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி அமைச்சராக காரைக்காலை சேர்ந்த திருமுருகன் பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக துறை ஒதுக்கவில்லை. இந்நிலையில் நேற்று சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக முதல்வர் ரங்கசாமி ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணனை…
புதுச்சேரி அரசின் ஊழல்கள் குறித்துகுடியரசு தலைவரிடம் ஆதாரத்துடன் புகார் தருவோம்முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணாசமி நேற்று நிருபர்களிடம்கூறியதாவது: 2024 பாராளுமன்ற தோர்தலில் மோடி அரசு பெரும்பான்மை பெறாமல் 240இடங்களை மட்டும் பெற்று கூட்டணியோடுஆட்சி அமைத்த சமயத்தில், பதவியேற்புவிழாவில் பாஜக ஆளும் முதல்வர்கள் கலந்துகொண்டனர், எதிர் கட்சிகள் புறக்கணித்தன .ஆனால் புதுச்சேரியில் பாஜகவோடு கைகோர்த்து ஆட்சி அமைத்துள்ள முதல்வர்ரங்கசாமியும் புறக்கணித்தார். இது புதுச்சேரிமக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும்ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போது கூட நிதி ஆயோக் கூட்டத்தில்முதல்வர் பங்கேற்பார் என்ற எண்ணம்இருந்தது. புதுச்சேரிக்கு நிதி பற்றாக்குறைஉள்ளது. அந்த நிதியை பெற்று தருகின்றஅமைப்பாக உள்ளது நிதி ஆயோக்,அதில் கலந்து கொண்டால்தான் மாநிலபிரச்சனைகளை முதல்வர் முன்வைக்கமுடியும். அதை கருத்தில் கொண்டு மோடிஅரசு நிதியை உயர்த்தி கொடுப்பதற்கானவாய்ப்புகளும், வளர்ச்சி திட்டங்களை கொடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில்சேர்ப்பு, 9 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்வது உள்ளிட்ட. நிறைய தேவைகள்…
ஓய்வு பெற்ற துணை இராணுவத்தினருடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்
ஓய்வு பெற்ற துணை இராணுவத்தினருடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்/ அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நம் பாரத நாட்டின் எல்லைப் பகுதிகளில் கடும் குளிர், வெய்யில் என்றும் பாராமல் எல்லை சாமிகளாக நம்மையெல்லாம் பாதுகாத்து வருகின்ற துணை இராணுவப் படை வீரர்கள் சுமார் 20 ஆண்டுகாலம் தொடர் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெறுகின்றனர். அப்படி ஓய்வு பெறுகின்ற துணை இராணுவப் படை வீரர்களுக்கு, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று அவர்களுக்கும் வழங்க வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் 2012–ஆம் ஆண்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதனடிப்படையில் கோவா, டையூ & டாமன் மற்றும் தாத்ரா நகர் & ஹவேலி யூனியன் பிரதேசங்கள் தங்கள் மண்ணின் மைந்தர்களின்…
ஆசியாவிலேயே 8 மணி நேர பணி-‘ஜூலை 30’ தியாகிகளுக்கு புதுச்சேரி தொழிற்சங்கத்தினர் அஞ்சலி
ஆசியாவில் முதன் முதலில் 8 மணி நேர பணிக்கான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த ‘ஜூலை 30’ தியாகிகளுக்கு புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அஞ்சலி செலுத்தினர். முந்தைய காலத்தில் புதுவையில் இயங்கிய பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அப்போதெல்லாம் குறைவான கூலிக்கு தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனை எதிர்த்தும் 8 மணி நேர வேலையை அமல்டுத்த வலியுறுத்தியும் வ.சுப்பையா தலைமையில் புதுச்சேரி சவானா பஞ்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். 84 நாட்கள் நடைபெற்ற போராட்டத்துக்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அமலாகவில்லை. இதையடுத்து 1936 ஜுலை 23-ம் தேதியிலிருந்து உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் தொடங்கினார்கள். 1936 ஜுலை 30-ம் நாள் நடந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 12 தொழிலாளர்கள்…
புதுச்சேரி வீராம்பட்டினம் மாங்குரோவ் காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த மரங்கள்
புதுச்சேரி வீராம்பட்டினம் முகத்துவாரம் அருகே மாங்குரோவ் காட்டில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சுனாமி பேரழிவின் போது, கடற்கரையில் வளர்ந்திருந்த அடர்ந்த மாங்குரோவ் காடுகள் தடுப்புச் சுவராக நின்று சுனாமி அலைகளை தடுத்து, கரையோரம் வாழும் மக்களை காத்தன. இதனால், சுனாமிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரி கடற்கரையோரம் மாங்குரோவ் காடுகள் வளர்க்க அரசுகள் பரிந்துரை செய்தது. இதையடுத்து, தேங்காய்த் திட்டு துறைமுக பகுதியில் ஏற்கனவே இருந்த மாங்குரோவ் காடுகளுடன், புதிதாக பல இடங்களில் மாங்குரோவ் செடிகள் நட்டு வளர்க்கப்பட்டன. அவை சிலரது சுயநலத்தால் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேங்காய்த் திட்டு துறைமுகத்தின் தெற்கு பக்கம் வீராம்பட்டினம் கரையோரம் மாங்குரோவ் மரங்களுடன், கருவேல மரங்களும் சேர்ந்து வளர்ந்து இருந்தது. இதற்கிடையில், அரசு இடத்தில் இருந்த கருவேல மரங்கள் மற்றும் மாங்குரோவ்…
மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காமல் புதுச்சேரி மக்களை வஞ்சித்துள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, புதுச்சேரி மாநில திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகில் நடந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பூ. மூர்த்தி வரவேற்று பேசினார். கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் துணைவேந்தருமான முனைவர் சபாபதி மோகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன…
புதுச்சேரியில் புனரமைக்கம்பட்ட தீயணப்பு ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள்அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் திறந்து வைத்தனர்
புதுச்சேரி, ஜூலை 30- புதுச்சேரி அரசு தீயணைப்புதுறையின் கீர் செயல்பட்டு வரும்திருக்கனூர், மடுகரை, பாகூர் ஆகியதீயணைப்பு நிலையங்களில் உள்ள தீயணைப்புஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள்புனரமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா மேற்கொள்ளப்பட்டது. திருக்கனூரில்நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம்,சாய் ஜெ சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மடுகரையில் அமைமச்சர் சாய் ஜெ சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலுஆகியேயோர் திறந்து வைத்தனர். பாகூரில் அமைச்சர் சாய் சரவணகுமார் ,செந்தில்குமார் எம்எல்ஏ கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அரசு சார்பு செயலாளர் ஹிரண், கோட்ட தீயணைப்பு அதிகாரி, அனைத்து நிலைய அதிகாரிகளும் மற்றும் அரசு செயலர் துறை ஊழியர்களும் பங்கேற்றனர்.