புதுவை அரசு சார்பில் பெரியார் பிறந்தநாள்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலையணிவிப்பு

தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிள்ளைத்தோட்டம் சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி,‌ பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன்.ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா .ஆறுமுகம் (எ) ஏகேடி, சட்டமன்ற உறுப்பினர்கள்.பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, .ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுவை சிறுமியை பாலியல் வண்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி காலப்பட்டு சிறயைில் தூக்கி தற்கொலை

புதுச்சேரி.செப்.16-புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது மகள் கொலைசெய்யப்பட்டு, கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்தாள். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன்(56) ஆகியோரை கைது செய்தனர். வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ளவிவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரும், விவேகானந்தனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் மூச்சுத் திணறி மயங்கி விழுந்த சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டி, உடலை வேட்டியில் மூட்டையாகக் கட்டி, வீட்டுக்கு பின்புறமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது..இதனையடுத்து கருணாஸ் (வயது19) மற்றும் விவேகானந்தன் (57)…

புதுவை ஏம்பலம் தொகுதியில் அண்ணா பிறந்தநாள் விழாதிமுக தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது

பேரறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா புதுவை மாநில கழக அமைப்பாளர் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் இன்றைய புதுச்சேரி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் நாளைய புதுச்சேரியின் முதல்வர் சிவா எம்எல்ஏவின் மேலான ஆலோசனையின் படி ஏம்பலம் தொகுதி கழகத்தின் சார்பில் ஏம்பலம் தொகுதி கழகத்தின் செயலாளர் பி ஆர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. கிருமாம்பாக்கம் கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருஉருவப்படத்திற்கு புதுச்சேரி மாநில முன்னாள் மீனவர் அணி அமைப்பாளர் கழக முன்னோடி தேவநாதன் அவர்களும் தொகுதி பொருளாளர் இளம்பரிதி அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.இந்நிகழ்வில் மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திருமதி சுமதி மற்றும் ஏம்பலம் தொகுதியின் செயற்குழு உறுப்பினர் விஜயன் தொகுதி துணைச் செயலாளர் வாலிமுருகன் கிளைக் கழக செயலாளர்கள் பிண்ணாச்சி குப்பம் சங்கர் கிருமாம்பாக்கம்…

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்-சிலைக்கு புதுச்சேரி திமுக மாநில அமைப்பார் சிவா தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 116–வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில், திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தலைமையில் 500–க்கும் மேற்பட்ட திமுகவினர் சுதேசி மில் அருகில் இருந்து ஊர்வலமாக வந்து, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. திருநாவுக்கரசு, சண். குமரவேல், முன்னாள் பாராளுமன்ற செயலர் பூ. மூர்த்தி, கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் வே. கார்த்திகேயன், ந.…

புதுவை தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் போலீசார் ஆய்வு

பயணிகளிடம் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், தனியார் பெருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.புதுச்சேரி – கடலுார் வழித்தடத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்திட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில், பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடலுாரில் இருந்து கிருமாம்பாக்கம் செல்ல வேண்டுமானாலும் 20 ரூபாய் கட்டணம் செலுத்திட வேண்டும் என கேட்டு நடத்துனர், பயணிகளிடம் அடாவடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, ஆளுநர் மற்றும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இந்நிலையில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்று காலை கிருமாம்பாக்கம் சந்திப்பில்…

மகாராஷ்டிரா மாநில ஆளுநருடன் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சந்திப்பு

இந்த சந்திப்பின்போது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை போற்றும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் தாங்கிய தியாகச் சுவர்கள் 8 இடங்களில் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது புதுச்சேரி மாநில பாஜக செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் சக்கரா பவுண்டேஷன் நிறுவனர் ராஜசேகரன் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆர்எஸ்எஸ் நிர்வாகி . கஹன் மகோத்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.தொழிலாளர் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொழிலாளர் துறை சமரச அதிகாரி மீது புதுச்சேரி அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி மராட்டியர் நல சங்கம் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி புதுச்சேரியில் நகை செய்யும் தொழில் ஈடுபட்டுள்ள மராட்டியர்கள் நல சங்கம் சார்பில் அம்பலத்தடையார் தெரு மற்றும் பாரதி வீதியில், மும்பையில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ராஜ்பாக் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். அதைதொடர்ந்து 7 நாளான நேற்று ராஜ்பாக் விநாயகர் சிலை மற்றும் கடை, வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மராட்டிய இசை கச்சேரியுடன் ஆண்களும், பெண்களுக்கு ஆடிப்பாடியவாறே காந்தி வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று புதுச்சேரி கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரில் உள்ள கடலில் சிலைகளை கடலில் கரைத்தனர்.

“கர்நாடக காங்கிரஸ் அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை புதுச்சேரி காங்கிரஸ் எதிர்க்கிறது” – நாராயணசாமி பேட்டி

கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முயற்சிப்பதை புதுச்சேரி காங்கிரஸ் எதிர்க்கிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், லடாக் பகுதியை சீனா ஆக்கிரமித்து வருவதாக காங்கிரஸ் தெரிவித்ததை பிரதமர் மோடி மறுத்தார். ஆனால் தமிழக ஆளுநர் ரவி தற்போது, இந்தியாவில் 5,500 கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மோடி, ரவி இவர்களில் யார் சொல்வது உண்மை என கேள்வி எழுகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 950 இடங்களை நிரப்ப முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதில் எந்தெந்த தேதிகளில் விண்ணப்பம் கோரப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், விண்ணப்பம்…

ஏனாமில் மீண்டும் வெள்ளம் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

ஏனம் கோதாவரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சபரி, கவுதமி, கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கிளை நதிகள் வழியாக ஆந்திரா ஏனாம் பிராந்தியத்தையொட்டியுள்ள பத்ராச்சலம், தவிலேஸ்வரம் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளில் தண்ணீர் இருப்பு பாதுகாப்பு அளவை மீறி விட்டதால் நீர், கோதாவரி ஆற்று வழியே கடலுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கடல் மற்றும் கோதாவரி ஆற்றையொட்டி உள்ள ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இங்குள்ள பாலயோகி பாலத்தை தாண்டி வெள்ள நீர் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் ஏனாமிற்கு 2வது வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கோதாவரியை ஆற்றில் வெள்ள பெருக்கை பார்வையிட்டு ஆய்வு செய்த ஏனாம் மண்டல…

சீத்தாராம் யெச்சூரி மறைவு முதல்வர் ரங்கசாமி இரங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மா.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு, இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான மா.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்திய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்த சீத்தாராம் யெச்சூரி, தனது வாழ்நாள் முழுதும் பொதுவுடைமை சித்தாந்தங்களை கடைப்பிடித்து, அதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர். ஏழை எளிய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பார்லி., உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வந்த அவரது மறைவு தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்த இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.