சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் பின் தங்கிய சமுதாயத்தின் விகிதாச்சாரத்தை தெரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். திமுக நடத்திய சமரசமற்ற சட்டப் போராட்டத்தால் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காணவும், சமூகநீதியை நிலைநாட்டவும் நமது உரிமையான பங்கைப் பெறவும் மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடிப் பணியாகும். இதை அடைய நாம் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.

திருத்தணியில் இன்று ஆடிக் கிருத்திகை பெருவிழா கோலாகலமாக கொண்டாட்டம் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை பெருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த கிருத்திகை தினத்தில் விரதம் இருந்தால் முருகன் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் கிருத்திகை ஆகும். அதிலும் மாதந்தோறு் கிருத்திகைகள் வந்தாலும் ஆண்டுக்கு 3 முறை வரும் கிருத்திகைகள் மிகவும் முக்கியமானதாகும். உத்திராயன காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபம், தட்சிணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாதம் வரும் ஆடி கிருத்திகை ஆகியவை ஆகும். இந்த 3 கிருத்திகைகளில் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடிக் கிருத்திகை அன்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த…

சமூக ஊடகங்கள் எல்லை மீறுவதாகவே இருக்கிறது. நடவடிக்கை எடுக்க நடிகர் சரத்குமார் வலியுறுத்தல்

பாஜக உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சமூக ஊடகங்கள் என்பவை சமூக அவலங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். பல முக்கியத் தகவல்களை பகிர்வதாகவோ அல்லது மக்களை மகிழ்விக்கும் விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயார் செய்வதாகவோ அவர்களது பணி அமையலாம். ஆனால் தற்போது பலவகையிலும் சமூக ஊடகங்கள் எல்லை மீறுவதாகவே இருக்கிறது. பிரபலங்களின் கருத்துக்களை விமர்சிப்பதற்குப் பதிலாக அவர்களைத் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்குவது, உருவக்கேலி செய்வது, அவர்களது சொந்த தனிப்பட்ட வாழ்வைக் கிளறி அருவெறுக்கத் தக்க வகையிலான தவறான விமர்சனங்களைப் பதிவு செய்வது என்று சமூக ஊடகப் போர்வையில் சிலர் செய்யும் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை என்பதோடு, யாரது தனிப்பட்ட வாழ்விலும் தலையிட ஊடகங்களுக்கு உரிமை இல்லை…

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்ரூ.70 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்

சென்னையில் ரூ.70 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமென் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது போதைப் பொருள் சிக்கியது. பிடிபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல் ரஹ்மானிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் சென்குன்றத்தில் சோதனை நடத்தப்பட்டது. செங்குன்றம் பகுதியில் மன்சூர், இப்ராஹிம் ஆகிய இருவரை கைது செய்து, குடோனில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 6.92 கிலோ மெத்தபெட்டமென் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் போதைப் பொருட்களை சென்னையில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்று, அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார். அனைத்து புதிய படங்களும் வெளியான அன்றைய தினமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் சிறிது நேரத்தில் வந்துவிடும். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்தும் அதனை பதவியேற்றம் செய்யும் அட்மினை கைது செய்ய முடியவில்லை. மேலும் ஒவ்வொரு முறை இணையதளம் தடை செய்யப்படும் போதும் புதிய முகவரியில் இருந்து சட்டவிரோதமாக படங்களை பதிவேற்றம் செய்து வந்தனர். இதுதவிர நீதிமன்றம் மூலம் தடை விதித்து நடவடிக்கை எடுத்த போதிலும் புதிய இணையதளம் தொடங்கப்படுவது வாடிக்கையாகி இருந்து வருகிறது. இதனால் திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் செய்வதறியாமல் திகைத்து வந்தனர். இந்நிலையில் கேரளத்தில் ஒரு திரையரங்கில் தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின்…

மேட்டூர் அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறப்பு டெல்டா நோக்கி சீறிப் பாய்ந்த காவிரி ஆறு

டெல்டா பாசனத்திற்கு இன்று(ஜூலை 28) மாலை 3 மணிக்கு மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது. வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து வைக்கப்படுகிறது. இதனையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. அணைகளுக்கு 1.48 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு இதன் காரணமாக கடந்த 17 ம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. தற்போதைய நிலையில் அணை நீர்மட்டம் 109.20 அடியாகவும் நீர்இருப்பு 77.30 டி.எம்.சி., ஆகவும் உள்ளது. காவிரியில் நீர் வரத்து மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை திறந்து விடுவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.…

சிவகங்கையை அருகே பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை- உறவினர்கள் சாலை மறியல்

சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். சென்னை கிண்டியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். சேலம் மாவட்டம் கோட்டை மைதானம் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் ஒருங்கிணைந்த திமுக சார்பில் நடைபெறும்…

புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் சவுந்தர்யா மரணம்

தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சவுந்தர்யா. கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். இவருடைய கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியதோடு, பிரபலமடைந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சவுந்தர்யாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீராகாததை அடுத்து, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் சவுந்தர்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மேலும், 4வது ஸ்டேஜில் இருப்பதும் கண்டறியப்பட்டது. தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார். கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம்…

இளம் கிரிக்கெட் வீரர் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை

23 வயது இளம் கிரிக்கெட் வீரர் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ், விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கிரிக்கெட் பயிற்சியை முடித்து வீட்டுக்குத் திரும்பியபோது, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து யாரோ ஒருவர் குதிப்பதை பார்த்ததும், அங்குள்ளவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கும் காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சாமுவேல் ராஜ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாமுவேல் ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கத்திப்பாரா மேம்பாலத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.