வியாழன் கிரகத்தைச் சுற்றிவரும் ‘யுரோப்பா’ நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்கலம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ளது. தொழிலதிபா் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ஃபால்கன் ஹெவி பிளாக் 5 ராக்கெட் மூலம், ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து அது விண்ணில் செலுத்தப்பட்டது. ‘யுரோப்பா க்ளிப்பா்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம், வியாழன் கிரகத்தை அடைவதற்கு ஐந்தரை வருடங்கள் ஆகும். அதையடுத்து அந்த கிரகத்தின் சுற்றுப் பாதைக்குச் சென்று அதை சுற்றிவரத் தொடங்கும் அந்த விண்கல், யுரோப்பா நிலவை 44 முறை நெருக்கமாகக் கடந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். கடந்த 1995 முதல் 2033 வரை வியாழனைச் சுற்றி வந்த நாசாவின் கலீலியோ விண்கலம், யுரோப்பாவின் பனிக்கட்டி படலத்துக்கு அடியில் பெருங்கடல்கள் இருக்கலாம் எனவும் அதில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் கண்டறிந்தது.…
Category: முதன்மை செய்திகள்
சென்னையில் 21 சுரங்கப் பாதையில் போக்குவரத்து சீரானது!
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தேங்கிய 542 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையில் நேற்று 131 மி.மீ. மழை பெய்தபோதும் அதிகளவில் பாதிப்பில்லை. சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டன. சென்னையில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து மிதமான மழையே பெய்து வருகின்றது. சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துள்ளது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில், நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு மழை படிப்படியாக குறைந்து தற்போது மிதமான மழையே பெய்து வருகின்றது. நேற்று முழுவதும் பெய்த கனமழையினால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேங்கியது. அதனைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து களப்பணியில் உள்ளார். பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று(புதன்கிழமை) காலை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைக்கப்படவிருக்கும் நீர் நிலை, பூங்கா குறித்த பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளிக்கரணை பகுதியில் மழை…
சென்னை மழை, வெள்ளம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்
சென்னையில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் யானைகவுனி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று கனமழையும், நாளையும் அதி கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மழை, வெள்ளம் குறித்த பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். யானைக்கவுனி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து சென்னை பெரம்பூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து துய்மை பணியாளர்களுடன் தேநீர் குடித்தார்.அவர்களுக்கு பிஸ்கட்வழங்கினார்.
பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கஆவின் நிறுவனம் முன்னேற்பாடு
ஆவின் முன்வடகிழக்குப் பருவமழையின்போது பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 50,000 லிட்டா் பால் மற்றும் 20,000 கிலோ பால்பவுடரை ஆவின் நிறுவனம் தயாா் நிலையில் வைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் எதிரொலியாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருளான பால் மற்றும் பால் பவுடா் பல இடங்களில் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். ரூ.40 மதிப்புடைய ஒரு லிட்டா் பால் அந்த நேரத்தில் சில இடங்களில் ரூ.200-க்கும் அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் இது போன்ற சிக்கல்களைத் தவிா்ப்பதற்காக ஆவின் நிறுவனம் அனைத்து வகையான முன்னேற்பாட்டுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவா்…
கொட்டும் மழையில்முதல்வரின் வீட்டின் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்
புதுச்சேரி கல்வித்துறையில் ஒப்பந்த முறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரியும் 288 தமிழ் ஆசிரியர்கள்,பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாலை 7 மணி முதல் முதல்வர் வீட்டின் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில், பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 288 பேர் முதல்வர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர். அப்போது, அப்பா பைத்தியசாமி கோவிலில், முதல்வர் பூஜை செய்து கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்ற ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து, நாங்கள் 5 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் முதல்வர்…
பள்ளி விடுமுறை குறித்து ஒருநாள் முன்னதாக ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஸ்
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் குறித்த அறிவிப்பை ஒருநாள் முன்னதாகவே ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளையும் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மாவட்ட ஆட்சியர்களே வெளியிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருநாள் முன்னதாகவே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.மேலும், இணையவழி வகுப்புகளை பள்ளிகள் தவிர்க்குமாறு அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்…
தமிழகத்தின் பருவமழையை எதிா்கொள்ள அரசு தயாா் அமைச்சா் கே.என்.நேரு பேட்டி
வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு தயாா் நிலையில் உள்ளது என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தண்டையாா்பேட்டை, பெரம்பூா் பகுதிகளில் தேங்கும் மழைநீரை கால்வாயில் வெளியேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளையும், ஓட்டேரி நல்லா கால்வாயில் தண்ணீா் தடையின்றி செல்வதையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகாா் பெறுவதை ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. சென்னை போன்ற நகரங்களில் சராசரியாக 15 முதல் 20 செ.மீ. மழை பெய்யும்போது உடனே வடிந்துவிடும்.…
இந்திராகாந்தி அரசு கல்லூரியின்கழிவறை மேற்கூரை இடிந்து மாணவி விழுந்து படுகாயம்மாணவர்கள் சாலைமறியல்
புதுச்சேரி.அக்.15-அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், கழிவறையின் மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்ததில் மாணவி படுகாயமடைந்தார். இதனைக் கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது. கல்லுாரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். அங்கு, இடம் பற்றாக்குறை காரணமாக கோரிமேடு, இந்திரா நகர் அரசு பள்ளி வளாகத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கல்லுாரியின் மைக்ரோ பையாலஜி, 2ம் ஆண்டு பயிலும் மாணவி நேற்று மதியம் 1:00 மணி அளவில் மாணவிகள் கழிவறைக்கு சென்று உள்ளார். அப்போது, மழையின்…
மகாராஷ்டிராவில் பரபரப்பு: தேசியவாத காங்கிரஸ் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார். உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு, தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு மாதிரிகளைச் சேகரித்தது. மேலும் தாக்குதல் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கு அருகிலுள்ள இடங்களின் சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு குற்றவாளி தலைமறைவாக உள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்…
