மெரினாவில் உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் தமிழக முதல்வர் அறிவித்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நேற்று சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிருவாகரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல்…

2024-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு யாருக்கு தெரியுமா?

சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது ‘கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்’ எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம். இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களை கொண்ட ‘நோபல் அசெம்பிளி’ (Nobel Assembly) எனும் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. 2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை விளக்குவதற்கு இவர்கள் இருவரின் கண்டுபிடிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று…

அனைவருமே பொறுப்பு: செல்வப்பெருந்தகை பேட்டி

மெரீனாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ‘மத்திய அரசின் விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. லிம்கா சாதனையில் பதிவு செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்திய விமானப்படை மேற்கொண்டது. 15 லட்சம் மக்கள் கூடும் அளவிற்கு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது. இதில் ஐந்து நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பாக அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இனிவரும் காலங்களில் இது போன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் மரணம் ஏற்படாமல் துயரங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் எங்களது வேண்டுகோள். இது மிகப்பெரிய படிப்பினை. ஆனால்,…

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐநா விருது – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது. ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி – கண்காணித்து – மேம்படுத்தி வரும் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப்…

புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி அரசு தொடக்கபள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்றலின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அந்த வகையில் எல்லைப்பிள்ளைசாவடியில் அமைந்துள்ள அரசு தொடக்கபள்ளியில் அறிவியல் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் நடந்த அறிவியல் கண்காட்சியை விழாவினை எஸ். எம். சி. தலைவர் திலகவதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இரண்டு பிரிவாக நடந்த நிகழ்ச்சியில் காலையில் முன் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கலர்ஸ் கிளே கொண்டாட்டத்தில் அனைத்து விதமான வண்ணங்களும், பொருட்கள், ஆடைகள், பூக்கள், கட்அவுட், மிட்டாய்கள், பொம்மைகள் மற்றும் பழங்களை கொண்டு காட்சிக்கு வைத்த விதம் பெற்றோர்களையும் பொது மக்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனை பொறுப்பாசிரியர் எழிலரசி மற்றும் சுப்புலட்சுமி செய்திருந்தனர். மாலையில் அறிவியல் கண்காட்சி பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி முன்னிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.…

ரயில்வே தனியாா் மயமாக்கப் படாது: மத்திய அமைச்சா் தகவல்

‘ரயில்வே தனியாா்மயமாக்கப்படும் என்கிற கேள்விக்கே இடமில்லை; ரயில் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்குவதே தற்போதைய நோக்கமாக இருந்து வருகிறது’ என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ரயில்வே பாதுகாப்புப் படையின் 40-ஆவது எழுச்சி தினம், மாபெரும் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டு பேசியதாவது: அடுத்த ஐந்தாண்டுகளில், ரயில்வே துறை முற்றிலுமாக மாற்றமடையும். வந்தே பாரத், நமோ பாரத், ‘கவச்’ ரயில் பாதுகாப்பு ஆகியவை இந்த மாற்றத்துக்கு வழிவகுக்கும். இது ரயில்வே மாற்றத்துக்கான சகாப்தம். இதில் தனியாா் மயமாக்கம் என்கிற கேள்விக்கே இடமில்லை. ரயில்வே மற்றும் பாதுகாப்பு ஆகியவை நாட்டின் முதுகெலும்புகள், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்பதை வதந்திகளைப் பரப்புபவா்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.…

லெபனான் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் அதன் தலைவர் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. இருந்தபோதிலும் லெபனான் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையல் இன்று காலை வடக்கு லெபனானில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹமாஸ் அதிகாரி சயீத் அதல்லா அலி கொல்லப்பட்டார். அத்துடன் அவரது குடும்பமும் இந்த வான்தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளது. சிரியாவுடன் லெபனானை இணைக்கும் மிகப்பெரிய சாலையை இஸ்ரேல் ராணுவம் துண்டித்துள்ள நிலையில்…

அரியாணா சட்டப்பேரவைக்கு இளைஞர்கள் வாக்களிப்பு சாதனையை படைக்க மோடி வேண்டுகோள்

அரியாணா சட்டப்பேரவைக்கு,இன்று 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்து புதிய வாக்களிப்பு சாதனையை படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரியாணாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் சனிக்கிழமை (அக். 5) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 கோடிக்கும் மேற்பட்டோா் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 101 பேர் பெண் வேட்பாளர்கள். வாக்குப்பதிவு தொடங்கிய முக்கிய தொகுதிகளில், முதல்வா் நாயப் சிங் சைனி (லாட்வா), எதிா்க்கட்சித் தலைவா் பூபிந்தா் சிங் ஹூடா (கா்ஹி சம்பலா-கிலோய்), இந்திய தேசிய லோக்…

குரங்கு பெடல்‌’ திரைப்படத்திற்கு‌ புதுவை அரசின்‌சங்கரதாஸ்‌ சுவாமிகள்‌ விருது ரூ. 1 லட்சம் பரிசுமுதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து, ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகின்றன. இந்த விழாவில் ஒரு சிறந்த தமிழ் படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு ‘குரங்கு பெடல்’ படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. குரங்கு பெடல்’ படம் ஒரு சிறுவனின் சைக்கிள் கனவை சொல்லும் படமாக உருவாகி இருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்குவிருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குநர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலாளர் கேசவன், அலையன்ஸ்பிரான்சேஸ் தலைவர் சதீஷ்நல்லாம்,நவதர்ஷன் திரைப்படகழகத்தின் செயலாளர் பழனி, ஆகியோர் வாழ்த்தினர். விழாவில், குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குநர் கமலக் கண்ணனுக்கு விருது வழங்கி…

ராணுவ கட்டுபாட்டுடன் நடக்கவேண்டும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை

நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். உங்களை நானும். என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை. ஏனெனில், நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம். தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை. அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல். இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக…