வில்லியனூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள்- பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை

வில்லியனூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்தாலோசனைக் கூட்டம் சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மதியம் நடந்தது. கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், நெடுஞ்சாலைப் பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் அனைத்தும் மழைக்காலத்திற்கு முன்பாக தூர்வாரப்பட வேண்டும். மணவெளி மல்லிகா நகர், ஜி.என்.பாளையம்பேட், ஆத்துவாய்க்கால்பேட், கொம்பாக்கம் செட்டிக்களம் ரோடு, லட்சுமி அவென்யூ வில்லியனூர் புல்வார் பகுதிகளில் கல்வெட்டு அமைத்தல், கருப்பட்டிச் சேனல் வாய்க்காலின் இருபுறமும் நபார்டு வங்கி நிதியுதவியுடன் சிமெண்ட் கட்டை…

ஓடும்பேருந்தில்பெண்ணிடம் 27 பவுன் நகை கொள்ளைவழக்குபதிவு செய்ய போலீசார் மறுப்புஎதிர்கட்சி தலைவர் முயற்சியால் முதல்வரிடம் முறையீடு

புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்தசாலை புதுநகர்‌ கண்டாக்டர்‌ தோட்டத்தை சேர்ந்தவர்‌ சலீம்‌. இவரின்‌ மனைவி சுமைனா பானு (24). இவர்‌ சென்னையில்‌ உள்ள தனது தங்கையின்‌ வளைகாப்புக்காக மாமியார்‌ ஜீவா (55) மற்றும்‌3 ஆண்‌ குழந்தைகளுடன்‌ நேற்று முன்தினம்‌ மாலை 5மணிக்கு வீட்டிலிருந்து ஆட்டோவில்‌ புதிய பேருந்து நிலையம்‌ சென்றார்‌. அங்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும்‌ பேருந்தில்‌ சென்னைக்கு ஏறினார்‌. அப்போது கையில்‌ வைத்திருந்த சூட்கேசை லக்கேஜ்‌ வைக்கும்‌ இடத்தில்‌ வைத்திருந்தார்‌. அந்த சூட்கேசில்‌ 27 பவுன்‌ நகை, பணம்‌ இருந்தது. பேருந்து காலாப்பட்டு பிள்ளைச்சாவடி அருகே சென்ற போது லக்கேஜில்‌ வைத்திருந்த, சூட்கேசை காணாமல்‌ போனது கண்டு அதிர்ச்சி அடைந்த சுமைனா பானு, தமது மாமியாருடன் சேர்ந்து கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினார்‌.பேருந்து நடத்துநர்‌ பேருந்தில்‌ இருந்து யாரையும்‌இறங்கவிடாமல்‌ காலாப்பட்டு போலீஸ்‌ நிலையம்‌கொண்டுசென்றார்‌. அங்கு பயணிகளை…

மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர்  முத்து பாராட்டு

புதுவைக்கு வருகைத் தந்த மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இராசேந்திரன் அவர்களுக்கு புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்துபொன்னாடை அணிவித்து தீந்தமிழ் திறவுகோல் எனும் நூலினை வழங்கினார். உடன் புதுவை தமிழ்ச் சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன்தாசு, மலேசிய தமிழ் எழுத்தாளர்கள்  சங்கப் பொருளர் ஞான சைமன், குளோபல் சங்கமம் தினேஷ் ஆகியோர் உள்ளனர்.

இந்தியா முழுவதும்‌ 42 வழக்குகளில்‌ தொடர்புடைய2 அரியானா இளைஞர்கள் கைதுபுதுச்சோரி சைபர்‌ கிரைம்‌ போலீசார் நடவடிக்கை

புதுச்சேரி, ஜூலை.18- அரியானா கேலஎச்‌ வெகேஷன்‌ கிளப்‌ என்ற நிறுவனம்‌ கடந்த ஆண்டு ரூ.85,000 பிரீயம்செலுத்தினால்‌ ஓர்‌ ஆண்டு பிரீமியம்‌ அடிப்படையில்‌, இந்தியாவில்‌ இருக்கிற சுற்றுலா தலங்களில்‌ எங்கு வேண்டுமானாலும்‌ குறைந்த பட்சம்‌ ஐந்து நாட்கள்‌ இலவசமாக தங்க உணவு, போக்குவரத்து வசதிகளைஅடங்கும்‌ டூரிஸ்ட்‌ பேக்கேஜ்‌ செய்து தருவதாகஆன்லைனில்‌ விளம்பரம்‌ செய்தது.இதனை பார்த்து புதுச்சேரியைச்‌ சேர்ந்த ராகுல்‌ கிருஷ்ணா என்பவர்‌ தொடர்பு கொண்டார்‌. அப்போது மிக குறைந்த விலையில்‌ ஆண்டுக்கு பத்து நாட்கள்‌குறிப்பிட்ட மலைவாழ்‌ தளங்களில்‌ சென்றுதங்கி சாப்பிட அனைத்து ஏற்பாடுகளையும்‌ அமைத்துதருகிறோம்‌ என்று கூறினர்‌. அதை நம்பி ஒரு ரூ.1 லட்சத்து 63 ஆயிரம்‌ ‌ பணத்தை இணைய வழியில்‌ ராகுல்‌ கிருஷ்ணா செலுத்தினார்‌.அப்படி பணத்தை செலுத்தி எட்டு மாதகாலமாகியும்‌, அவருக்கு எந்த ஒரு இடத்திற்கும்‌ சென்று தங்குவதற்கு அவர்கள்‌ பேக்கேஜ்‌ அனுப்பவில்லை அதனால்‌ அவர்‌…

கீழ செம்பிய‌‍‌ங்கால் கிராமம் அருள்மிகு சீதலா தேவி மாரியம்மன் கோவில் தனி அதிகாரி நியமனம்.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கீழ செம்பிய‌‍‌ங்கால் கிராமம் அருள்மிகு சீதலா தேவி மாரியம்மன் ஆலய தனி அதிகாரியாக அருளரசன் நியமிக்கப்பட்டார்.இன்று 18.07.2024 கீழ செம்பிய‌‍‌ங்கால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சீதலா தேவி மாரியம்மன் கோவில் நடந்த நிகழ்ச்சியில் அருளரசனுக்கு தனிஅதிகாரிக்கான ஆணையினை நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களும்,என்ஆர் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

வில்லியனூரில் ரூ. 35 லட்சம் செலவில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் குறுக்குச் சாலைகள் அமைக்கும் பணி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்

புதுச்சேரி வில்லியனூர் கண்ணகி அரசு பள்ளி சந்திப்பு முதல் எம்.ஜி.ஆர். சிலை வரை தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் பைபாஸ் சாலையை இணைக்கும் கலைவாணன் நகர், எம்.என்.ஆர். நகர், கிருஷ்ணா நகர், ராஜா மஹால் தெரு, பெருமாள்புரம், பழநிசாமி நகர், கூடப்பாக்கம் இணைப்புச் சாலைகளை இணைக்கும் குறுக்குச் சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு, புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை கிருஷ்ணா நகரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு, தேசிய நெஞ்சாலையை இணைக்கும் குறுக்குச் சாலைகளை மேம்படுத்தும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவிப் பொறியாளர் முனைவர் ஆறுமுகம், இளநிலைப் பொறியாளர்…

புதுச்சேரியில் பிரான்ஸ்நாட்டின் தேர்தல்

புதுச்சேரியில் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாவது சுற்று வாக்கு பதிவு ஜூலை ஏழாம் தேதி நடைபெற்றது இதில் அந் நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்தனர்

புதுச்சேரி இரட்டை கொலை வழக்கு 31 பேர் விடுதலை புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுச்சேரி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 31 பேர் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பளித்ததுபுதுச்சேரி முதலியார் பேட்டை தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி(33).இவர் மீது 6 கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.ஜாமீனில் வெளியே வந்த ரவி, வாணரப்பேட்டையை சேர்ந்த பரிடா அந்தோணி ஸ்டீபன்(28) என்ற நண்பருடன் 2021 அக்டோபர் 24ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அவர்களை வாணரப்பேட்டை ஆலன்வீதி,ராஜராஜன் வீதி சந்திப்பில் வழிமறித்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. அதில் தப்பித்த 2 பேரையும் கத்தியால் வெட்டி படுகொலை செய்தது.இந்த கொலை தொடர்பாக ரவுடி வினோத், தீன், மர்டர் மணிகண்டன், தியாகு, பிரேம், ராஜா, தேவேந்திரன், அருண், பிரவீன், ரோமாக், ஆட்டோ மணி உட்பட 31 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது.இந்த இரட்டை…

சென்னையை சேர்ந்த ஆன்லைன் அமாசடி பேர்வழி புதுச்சேரி சைபர்கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

ஜஸ்ட் டயல் என்ற ஆப்பை பயன்படுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை ஏமாற்றிய சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 52 வயதுடைய ஜெயக்குமார் என்பவரை புதுச்சேரி இணையவழி போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவர் கோவில் திருவிழாவுக்காக தவில் மற்றும் நாதஸ்வரம் வேண்டுமென்று ஜஸ்ட் டயல் ஆப்பில் தேடிய பொழுது ஒரு நபர் தன்னிடம் தவில் மேளம் இருப்பதாக கூறியதையடுத்து, புகார்தாரர் இந்த தேதிக்கு எங்களுடைய கோவில் திருவிழாவிற்கு நாதஸ்வரம் தவில் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கான முன்பணம் 22 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்., மேற்படி நபர் கூறியபடி குறிப்பிட்ட தேதியன்று நிகழ்ச்சிக்கு நாதஸ்வரம் மேளத்தை அனுப்பவில்லை. இது குறித்து இணைய வழி போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 52 வயதுடைய ஜெயக்குமார்…

என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியின் ஊழல் குறித்து காங்கிரஸ் கூறிய ஊழல் புகார்கள் உண்மை என்பதை அவர்களே கூறுகிறார்கள் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி முன்னாள்‌ முதல்வர்‌ நாராயணசாமி நேற்று நிருபர்களிடம்‌கூறியதாவது:29வது பாராளுமன்றத்தின்‌முதல்‌கூட்டத்தொடர்‌ஜூன்‌ இறுதியில்‌ தொடங்கியது. ஜூலை 2, 4ம்‌தேதிகளில்‌ மக்களவையும்‌, மாநிலங்கள்‌அவையும்‌,ஐனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து முடித்துவைக்கப்பட்டது. ராகுல்‌ பாராளுமன்ற மக்களவைஎதிர்‌கட்சி தலைவராக பொறுப்பேற்று முதல்‌உரைஆற்றும்போது, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு,இந்த நாட்டில்‌அனைத்து மதத்தினரும்‌ஒற்றுமையாகஇருந்து வருகிறார்கள்‌. ஆனால்‌ பாஜக ஆர்‌எஸ்‌எஸ்‌தாங்கள் ‌இந்து மதத்தின்‌ காவலர்கள்‌ என்று சொல்லிமற்ற மதத்தினர்‌ மீது வெறுப்பை அள்ளி வீசுவதும்‌,மற்ற மதத்தினரை உதாசீனப்படுத்துவதுமானவேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள்‌ என்றுபேசினார்‌. ஆனால்‌அதை பிரதமர்‌மோடி ஓட்டுமொத்தஇந்துக்களையும்‌ ராகுல்‌ தவறாக பேசியதாக திரித்துகூறியபிறகு பாஜக காங்கஸ்‌ கட்சியை எதிர்த்துபோராட்டம்‌ நடத்தியது. பொய்யையே மூலதனமாகவைத்து பாஜக செயல்பட்டு வருகிறது.பாராளுமன்ற நடவடிக்கையை தொலைக்காட்சியில் ‌நேரடியாக பார்த்தேன்‌. இந்து மதத்தின்‌ பிரதிநிதிகள்‌ பாஜகஆர்‌எஸ்‌எஸ்‌ மட்டுமல்ல. இந்து மக்கள்‌ அன்பைகொடுக்கிறவர்கள்‌, மக்களை நேசிக்கிறவர்கள்‌,இந்துத்துவா என்று சொல்லி பாஜக வெறுப்புநிலையை உருவாக்குவதை முறியடிக்க வேண்டும்‌என்றுதான்‌ ராகுல்‌பேசினார்‌. இது…