சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: –புதுச்சேரி ஆட்சி மொழி சட்டம் 1965–ன் படி நமது யூனியன் பகுதியின் ஆட்சி மொழியாக தமிழ், தெலுக்கு, மலையாளம், பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சென்ற 2006–ல் பாராளுமன்ற ராஜ்யசபையில் நடந்த விவாதத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமுதல் இன்று வரை பல்வேறு அரசுகள் மாறினாலும் ஆட்சி மொழியில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. புதுச்சேரி – காரைக்கால் பகுதிகளில் தமிழும், ஏனத்தில் தெலுங்கும், மாஹேயில் மலையாளமும் அந்தந்த பகுதி மக்களின் வழக்கத்திற்கேற்ப அலுவல் மொழியாக தொடர்ந்து வருகின்றன. அரசு வேலைவாய்ப்புகளில் இதுவரை நடைபெற்ற அனைத்து தகுதி தேர்வுகளும் பிராந்திய மொழியோடு ஆங்கிலமும் துணை மொழியாகக் கொண்டுதான் நடத்தப்பட்டு வருகின்றன. சென்ற 2022–ல் நடைபெற்ற யுடிசி தேர்வு மற்றும் சமீபத்தில் நடைபெற்ற காவலர்…
Category: புதுச்சேரி
புதுச்சேரி அரசு பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி மழை அங்கி நேரு எம்எல்ஏ வழங்கினார்
புதுச்சேரி.ஆக.27-புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நீடராஜப்பையர் வீதியில் அமைந்துள்ள சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மதிவண்டி மற்றும் மழை அங்கிகள் வழங்கப்ட்டது.புதுச்சேரி அரசு கல்வித்துறை மூலம் மாணவிகளுக்கு வழங்கும் விலை இல்லா மிதிவண்டி மற்றும் மழை அங்கிகளை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழி குழு தலைவருமான நேரு(எ)குப்புசாமி எம்எல்ஏ வழங்கினார். இதில் 10ம் வகுப்பு பயிலும் 70 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசு கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரகுமாரி மற்றும் பள்ளி ஆசிரியர் பெருமக்கள் என பலர் உடன் இருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களான ராமலிங்கம், குணசேகரன்,கைலாஷ், சாமிநாதன், சிவகுமார், காமராஜ், சிவகுமார், விநாயகம், ஐயப்பன், ராஜா,…
புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி 25வது பட்டமளிப்பு விழா முதல்வர் பங்கேற்பு
புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 25வது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு 72 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களையும் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியருக்கு பதக்கங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்திய அரசு, கால்நடைப் பராமரிப்புத் துறைஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு உரையாற்றினார். கல்லூரி டீன் செழியன் ஆண்டறிக்கை வாசித்தார்.இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் தேனீஜெயக்குமார், சாய் ஜெ சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, தலைமைச் செயலர் சரத்செளகான், ஆணையர் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை செயலர் ராஜூ மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். ஐந்தரை ஆண்டு கால்நடை படிப்பில் அதிகமதிப்பெண்கள் பெற்ற டாக்டர் விக்ரம் சந்து ஆறுபதக்கங்கள் மற்றும் விருதுகளை பெற்றார்,…
‘டிரோன்’ மூலம் கொசு மருந்து தெளிக்கும் திட்டம் முதல்வர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்
புதுச்சேரியில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த ‘டிரோன்’ மூலம் கொசு மருந்து தெளிக்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.புதுச்சேரியில் கொசுத்தொல்லை மற்றும் அதனால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா முதலான நோய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சித்துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொசு உற்பத்தி அதிகரிக்கும் இடங்களான, தேங்கி உள்ள நீர்நிலைகள், புதர்கள் மண்டிக்கிடக்கும் இடங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு அந்த இடங்களில், ‘டிரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சித்துறை திட்டமிட்டது. அதன்படி முதல்வர் ரங்கசாமி தலைமையில், சட்டசபை வளாகத்தில், இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது,. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், துணை இயக்குனர் சவுந்தரராஜன், நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், நலவழித்துறையின் மலேரியா ஒழிப்பு உதவி இயக்குனர் வசந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவை கேரம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது
புதுவை மாநில அளவில் கேரம் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது 3 நாட்கள் நடந்தபோட்டியில் மொத்தம் 60 பேர் பங்கேற்றனர். ஃப்ளோரா லீலா நினைவு கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா உழவர்களை எம்ஜிஆர் பூங்காவில் நடைபெற்றது. உழவு கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.முதல் பரிசு பூஜா 2வது பரிசு வேல்முருகன் 3வது பரிசு அஜித் சிங் 4வது பரிசு சஞ்சய் ஆகியோர் பெற்றனர் . விழாவில் அரசு வழக்கறிஞர் ராமச்சந்திர மூர்த்தி கேரம் தலைவர் சாங் சங்கத் தலைவர் தனசேகர் மற்றும் கேரம் சங்க நிர்வாகிகள் பரஞ்சோதி, இருதயராஜ், திருமூர்த்தி , முரளி, செந்தமிழ், ஆரோக்கியராஜ், ஜான் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் ஞான இருதயராஜ் நன்றி கூறினார்.
புதுச்சேரியில் லாட்ஜில் வைத்து காதல் மனைவியை அடித்து கொன்ற போட்டோகிராபர்
நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை லாட்ஜில் வைத்து போட்டோகிராபர் அடித்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்( 27) போட்டோகிராபர். இவரது மனைவி அபூர்வா( 22 )இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்தவர்கள். கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதிவு திருமணம் செய்துள்ளனர். முறைப்படி திருமணம் நடக்கும் வரை தனது பெற்றோர் வீட்டில் அபூர்வ தங்கி இருந்தார். இந்நிலையில் பிரதீப் தனது மனைவியை அபூர்வுடன் சுப்பராய பிள்ளை வீதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 17ஆம் தேதி இரவு அறை எடுத்து அடித்து தங்கி உள்ளார் ஏற்கனவே அறிமுகம் ஆணவர் என்பதாலும் இரண்டு முறை இதுபோல் காதலியுடன் அவர் தங்கி இருந்த காரணத்தினாலும் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதீப் அபூர்வாவை தோளில் சுமந்தபடி மாடு…
என்ஆர்.காங்கிரஸ் பொதுச்சயெலாளர் தனது ஆதரவாளர்களுடன் அமைப்பாளர் சிவா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் இளைஞரணி பொதுச்செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகி தமது ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணையும் விழா லப்போர்த் வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடந்தது. புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸ் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்த அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தமது ஆதரவாளர்கள் குப்பன், கணபதி, செல்வகுமார், செந்தில், சிவா, சரவணன் உள்ளிட்ட 200 பேருடன் திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் முன்னிலையில் தங்களை திமுக இணைத்துக் கொண்டனர். திமுக–வில் இணைந்தவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்ற அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் கட்சியில் இணைந்தவர்களிடம் திமுக உறுப்பினர் படிவம் வழங்கி வாழ்த்தி பேசினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் இன்று தளபதி மு.க.ஸ்டாலின்…
புதுச்சேரி மணவெளி டோல்கேட் அருள்மிகு மன்னாத சாமி உடனுறை பச்சைவாழியம்மன் கோயில் தீமிதி திருவிழா
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளி பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமை வாய்ந்த மன்னாதசாமி பச்சை வாழியம்மன் கோயிலின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பத்து நாட்கள் விழாவாக தீமிதி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவானது நேற்று மாலை 7 மணி அளவில் அக்னி கரகம் அலங்கார கரகம் சக்தி கரகம் சர்வ அலங்காரத்துடன் விமர்சையாக வான வேடிக்கைகளுடன் திரளான மக்கள் கூடி இருந்த இடத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் புதுவை சபாநாயகர் செல்வம் அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி முன்னாள் எம்பி ராமதாஸ் முன்னாள் அரியாங்குப்பம் முன்னாள் சேர்மன் ஆனந்தன் உட்பட முக்கிய ஊர் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பருவத ராஜகுல…
புதுச்சேரி மாநில திமுக இளைஞர் அணி சார்பில் பேச்சுப் போட்டி.
புதுச்சேரி.ஆக.24-முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, 100 இளம் பேச்சாளர்களைக் தேர்வு செய்யும் பொருட்டு, திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திமுக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கலைஞரின் “என் உயிரினும் மேலான”..! என்ற தலைப்பில் தொடங்கி என்றென்றும் பெரியார். ஏன்?. அண்ணா கண்ட மாநில சுயாட்சி, கலைஞரின் தொலைநோக்குப் பார்வை, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர், கலைஞர் – நவீன நாட்டின் சிற்பி, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், சமூக நீதிக் காவலர் கலைஞர், தமிழ்நாடு குடும்பங்களில் தி.மு.க., போன்ற பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்திட அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் புதுச்சேரி மாநில இளைஞர் அணி சார்பில் பேச்சுப் போட்டி நடத்துவது குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் லப்போர்த்…
புதுச்சேரி , வில்லியனூர் தொகுதியில் புதிய மின்மாற்றி எதிர்கட்சி தலைவர் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவகணபதி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை போக்க மின்துறையின் மூலம் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் 200 KVA திறனுடைய புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி திருமலை வீதியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். இதில், மின்துறை உதவிப் பொறியாளர் முருகேசன், இளநிலைப் பொறியாளர் பாலமுருகன், சிவகணபதி நகர் ஊர் முக்கியஸ்தர்கள் தங்கராசு, வேதாச்சளம், சசிகுமார், பாபு, சண்முகம், குருசாமி, முருகையன், கந்தசாமி, வெங்கடேசன், கண்ணையன், சரவணன், கார்த்திகேயன், உதயகுமார், கன்னியப்பன், ஜாபர், தனக்கோடி, வீரமணி, கனகராஜ், பிரகாஷ், பாஸ்கர், சீதாராமன், வடமலை,…