குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 204 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1கோடி வழங்கப்படும்என டாட்டா குழுமம் தெரிவித்துள்ளது.………………………………………..
Category: முதன்மை செய்திகள்
பட்டியலின மக்களுக்கு கல்வீடு கட்டும் திட்டம் ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்-புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு
மத்திய அரசின் ஒத்துழைப்போடு தான் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை என்றும் பட்டியலின மக்களுக்கு கல்வீடு கட்டும் திட்டம் ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பேசியுள்ளார். புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2.0, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலஷ்நாதன் திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரி மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு 16 சதவீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் முழுமையான நிதியை பெற்று நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 16…
விவசாயிகளால் தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக மன நிறைவோடு இருக்கிறார்கள்-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்பேச்சு
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: டெல்டா பாசனத்ததுக்கான தண்ணீரை நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து நான் வைப்பதற்கு முன், இன்று மேற்கு மண்டல வேளாண் குடி மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக முதலில் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிரமாண்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டபோது என் மகனதில் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகியது. அதற்காக எனது வணக்கத்தையும் நன்றியும் தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயிகளால் தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக மன நிறைவோடு இருக்கிறார்கள் தமிழ்நாட்டின் வேளாண் துறை மக்கள்…
கேரளாவில் சிங்கப்பூர் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம்
இலங்கையின் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 9ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. கேரளாவின் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சரக்கு கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கப்பலில் இருந்த கன்டெய்னர்களுக்கும் தீ பரவியதால் அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சரக்கு கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். தகவலறிந்து அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். சூரத் மூலம் நடுக்கடலில் தத்தளித்த…
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய விதிமுறைகள்
ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய தற்போது 60 நாள்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் பயணம் செய்யும் நாளுக்கு ஒருநாளுக்கு முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். ரயில் புறப்படும் நாளுக்கு அல்லது பயணம் செய்யும் நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு ஏசி பெட்டியும் காலை 11 மணிக்கு ஸ்லீப்பர் பெட்டிக்கும் முன்பதிவு தொடங்கும். இந்நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ரயில்வே அமைச்சகம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி முதலாவதாக ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆதார் சரிபார்ப்பு (aadhaar verification) செய்யப்பட்டவர்கள்…
இந்தியாவில் வேலைக்கு ஆளெடுக்கும் டெஸ்லா..பணிகள் தொடங்கியது
இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது. இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் ‘லிங்க்ட் இன்’ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய…
சிங்கார வேலர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி சபாநாயா மாலையணிவிப்பு
சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது புதுச்சேரி, கடலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன் சட்டமன்ற தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார்,காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன்,திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கட்சி தலைவர் சிவா,முன்னாள் அமைச்சர் எஸ்,பி,சிவகுமார்,…
லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி இணையவழியில் ரூ.3 லட்சம் பண மோசடி
புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் இணையதள லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்தவா் உமாகாந்தன்.இவா், முகநூல் பக்கத்தை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளாா். அப்போது, லாட்டரி சீட்டு குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதன் விவரத்தை அவா் பாா்த்த நிலையில், அவரை மா்ம நபா் கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். தன்னை லாட்டரி முகவராக அறிமுகப்படுத்திக் கொண்ட அவா், இணையதளம் வாயிலாக உமாகாந்தன் வாங்கிய லாட்டரிக்கு ரூ.8 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளாா். பரிசைப் பெறுவதற்கு ரூ.3 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றாராம். இதை நம்பிய உமாகாந்தன் ரூ.3.06 லட்சத்தை மா்ம நபா் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். அதன்பிறகு மா்ம நபா் இணைப்பைத் துண்டித்துவிட்டாா். இதனால், அதிா்ச்சியடைந்த உமாகாந்தன் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து…
புதுச்சேரியில் பயங்கரம்உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: இருவா் கைது
புதுச்சேரி அருகே உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50), வணிகா் சங்கப் பிரமுகா். திருபுவனை மேம்பாலம் அருகே உணவகம் நடத்தி வருகிறாா். உணவகம் சனிக்கிழமை அடைக்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரிய வந்தது. இதில் உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், திருவெண்டாா்கோவில் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரான காந்தியின் மகன் சபரிவாசன் (எ) சரவணப்பிரியன் (23), அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (19) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்து உணவகத்தின் முன் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா்…
சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யமுடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த…
